காந்தாமணி: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
|||
Line 11: | Line 11: | ||
{{ | {{first review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 19:13, 9 May 2022
காந்தாமணி சி.சுப்ரமணிய பாரதியார் எழுதிய சிறுகதை. இக்கதை பாரதியின் சிறந்த உரைநடைத்திறனுக்குச் சான்று.
எழுத்து, வெளியீடு
காந்தாமணி செப்டம்பர் 14, 1919-ல் சுதேசமித்திரனில் வெளியான சிறுகதை. தமிழறிஞர் பெரியசாமித்தூரனால் தொகுக்கப்பட்ட “பாரதி தமிழ்” நூலில் இச்சிறுகதை இடம்பெற்று பரவலாக கவனம் பெற்றது.
கதைச்சுருக்கம்
காந்தாமணி எனும் பதினாறு வயது இளம்பெண் பால்ய விவாகம் செய்யப்பட்டு தன் ஐம்பத்தைந்து வயது கணவருடன் வாழ விரும்பாமல் தாய் வீட்டில் வசிக்கிறாள். சிறுவயது முதலே தன்னுடன் நட்பாயிருந்த மலையாள இளைஞனுடன் ஓடிப்போகிறாள். இளவயதுக் காதலர்களாக இருந்து அந்தக் காதல் கைகூடாமல் பிரிந்து போன இணை ஒன்று வயதாகி தலை நரைத்த பின்பு, ரங்கூனுக்கு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறது.
இலக்கிய இடம்
காந்தாமணி சிறுகதை பாரதியின் சிறந்த உரைநடைத்திறனுக்குச் சான்று. இக்கதையில் பால்யவிவாகத்தின் அவலம், கலப்புத்திருமண, விதவைத்திருமண ஆதரிப்பு என புரட்சிகரமான சிந்தனைகளை பாரதி முன்வைத்தார். ‘நெவர் மைண்ட்’, ‘ஐ டோன் கேர் எ டேம் எபெளட் சாஸ்த்ரங்கள்’ என்பது போன்ற ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தினார். இது அக்காலச் சிறுகதைகளில் வழக்கில் இல்லாத ஒன்று. பிற்காலத்தில் இப்பாணியை எழுத்தாளர் சுஜாதா கையாண்டு வெற்றி பெற்றார்.
உசாத்துணை
- “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)”: தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.