அம்ருதலஹரி: Difference between revisions
(Added First published date) |
(Corrected Category:இதழ்கள் to Category:இதழ்) |
||
Line 282: | Line 282: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:இதழ்]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] |
Latest revision as of 15:19, 15 October 2024
அம்ருதலஹரி (1938 -1963) வைணவ சமயம் சார்ந்த இதழ். பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இவ்விதழின் ஆசிரியர். 1938-ல் காஞ்சியில் இருந்து வெளிவந்த இவ்விதழ் பின்னர், ஸ்ரீரங்கத்தில் இருந்து வெளிவந்தது.
பதிப்பு, வெளியீடு
1938 முதல், காஞ்சியிலிருந்து வெளிவந்த வைணவ சமயம் சார்ந்த இதழ் அம்ருதலஹரி. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இவ்விதழின் ஆசிரியர். அவருடன் இணைந்து ஸ்ரீரங்கம் மெ. ஸூந்தரராஜாச்சார்யர் ஆசிரியராகப் பணியாற்றினார். பிற்காலத்தில் ஸுந்தரராஜாச்சாரியார் இதழின் ஆசிரியரானார். 1959-ல் வெளிவந்த இதழில் வருஷ சந்தாவாக ரூபாய் மூன்று குறிப்பிடப்பட்டுளது. தனிப்பிரதியின் விலை 4 அணா.
உள்ளடக்கம்
வைணவம் சார்ந்த பல தத்துவ விளக்கங்கள், விவாதங்கள் மிக விரிவாக இந்த நூலில் இடம் பெற்றன. நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சியில் நடக்கும் அரிய விழாவான அத்திகிரி வைபவம் எனப்படும் அத்தி வரதர் வைபவம் பற்றிய செய்திகள் இவ்விதழில் காணப்படுகின்றது. வடகலை, தென்கலை விவாதங்கள் என குழு சார்ந்த விவாதங்களும் இடம் பெற்றுள்ளன.
பல கிரந்தங்களுக்கு, பாடல்களுக்கு பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரி விளக்கவுரை வெளியாகி உள்ளது. பாஷ்ய விளக்கங்கள், முமூக்ஷுப்படிக்கான விளக்கங்கள் போன்றவை மணிப்ரவாள மொழிநடையில் எழுதப்பட்டுள்ளன. இவ்விதழின் ஆசிரியர் அண்ணங்கராச்சாரியார் ‘ஸ்ரீராமநுஜன்’ என்ற இதழையும் தொடங்கி நடத்தியிருக்கிறார்.
உள்ளடக்கச் செய்திகள்
இதழில் இடம்பெற்ற பொருளடக்கச் செய்திகள் குறித்த பட்டியல் கீழ்காணுவது.
இதழ் | கட்டுரைகளின் பெயர் |
---|---|
184 பிப்ரவரி 1959, விளம்பி, மாசி | திருப்பாவையின் சிறப்பு |
சொன்னால் விரோதமிது | |
ஸகல சாஸ்த்ரார்த்த கல்பதரு | |
ஆழ்வான் ஸ்ரீஸூக்தியநுபவம் | |
மாங்கள்யவிவ்ருத்தி ஸ்தோத்ரம்-விரிவுரையுடன் | |
185, மார்ச் 1959 | அநிர்விண்ண நாம பாஷ்ய விமர்சம் |
வியாக்கியானங்களின் வீறு, நாமும் நமது நெஞ்சும், | |
திருவடிகள் விடாது; திண்கழலாயிருக்கும், | |
த்ரௌபதியும், ப்ரபத்தியும் | |
186 ஏப்ரல்-1959 | விச்வக்ஷேமார்த்தமான வாக்யஜ்ஞம் |
188 ஜூன்-1959 | பெரிய பெருமாளின் பலவகை யநுபவம் |
190-191, அக்டோபர் 1959 | ஈஶ்வர ஸ்ருஷ்டிகளை ஆராய்தல் |
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு | |
192 நவம்பர்-1959 | ஸ்ரீமத்வரவரமுநிஸூக்தி ஸூக்திதீபிகை |
199 ஜூன்-1960 | மலைநாட்டுத் திருப்பதியநுபவம் – திருக்காட்கரை |
விஶிஷ்டாத்வைத ஸர்வஸ்வம் | |
202 ஸெப்டெம்பர்-1960 | தத்வத்ரய ஸாரார்த்த தீபிகை |
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவண்வண்டூர் | |
203 அக்டோபர்-1960 | திருவேங்கடமுடையான் மஹோத்ஸவம் |
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருப்புலியூர் | |
விஶிஷ்டாத்வைத ஸர்வஸ்வம் | |
தத்வத்ரய ஸாரார்த்த தீபிகை | |
204 நவம்பர்-1960 | இராவணவதத்தில் ஒரு மருமம் |
விஶிஷ்டாத்வைத ஸர்வஸ்வம் | |
தத்வத்ரய ஸாரார்த்த தீபிகை | |
205 டிசம்பர்-1960 | மதிநிறைந்த நன்னாள் |
பயமும் அபயமும் | |
விஶிஷ்டாத்வைத ஸர்வஸ்வம் | |
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு | |
206 ஜனவரி-1961 | விஶிஷ்டாத்வைத ஸர்வஸ்வம் |
தத்வத்ரய ஸாரார்த்த தீபிகை | |
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவாறன்விளை | |
207 பிப்ரவரி-1961 | பகவத்கீதையின் முடிவு |
வேதபாஷ்ய விமர்சனம் | |
208 மார்ச்சு-1961 | போகத்தில் வழுவாத புதுவையர்கோன் |
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவாறன்விளை | |
தேசிகஹ்ருதயம் | |
தத்வத்ரய ஸாரார்த்த தீபிகை | |
வேதபாஷ்ய விமர்சனம் | |
209 ஏப்ரல்-1961 | திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவாறன்விளை |
பூதிகந்தி புஷ்பப்ரணாசநம் | |
பூதிகந்தி புஷ்ப ப்ரஹார ஸப்ததி | |
212 ஜூலை-1961 | திருக்கோவலூர் ஸ்ரீத்ரிவிக்ரமஸ்வாமி ஸம்ப்ரோக்ஷணம் |
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவல்லவாழ் | |
இருநூற்றுப்பதினொரு மணித்திரள் | |
த்ராவிட ஸம்ஸ்க்ருத கல்பத்ருமம் | |
213 ஆகஸ்ட்-1961 | மானிடப் பிறப்பு எதற்காக? |
இருநூற்றுப்பதினொரு மணித்திரள் | |
த்ராவிட ஸம்ஸ்க்ருத கல்பத்ருமம் | |
ஸம்வாத ஸம்மார்ஜநீ | |
214 ஸெப்டெம்பர்-1961 | தத்ராபி துர்லபம் – வைகுண்ட ப்ரியதர்சநம் |
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவல்லவாழ் | |
ஸம்வாத ஸம்மார்ஜநீ | |
இருநூற்றுப்பதினொரு மணித்திரள் | |
த்ராவிட ஸம்ஸ்க்ருத கல்பத்ருமம் | |
216 டிசம்பர்-1961 | கவிதா சாதுர்யம் |
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருக்கடித்தானம் | |
ஸம்வாத ஸம்மார்ஜநீ | |
இருநூற்றுப்பதினொரு மணித்திரள் | |
217 ஜனவரி-1962 | கவிதா சாதுர்யம் |
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருக்கடித்தானம் | |
இருநூற்றுப்பதினொரு மணித்திரள் | |
220 ஏப்ரல்-1962 | உபநயந ஸம்ஸ்காரம் |
இருநூற்றுப்பதினொரு மணித்திரள் | |
சங்கத்தமிழ்மாலை முப்பது | |
225 ஸெப்டெம்பர்-1962 | வேந்தர் தலைவன் கந்யகாதானம் |
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவண்பரிசாரம் | |
கீதோபந்யாஸ ஸாரம் | |
பஞ்சஸ்தவத்தில் – அதிமாநுஷஸ்தவம் | |
227 நவம்பர்-1962 | விசிஷ்டாத்வத விஜய த்வஜம் |
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவாட்டாறு | |
ராமாயணத்தில் மாயா பாத்ரங்கள் | |
பஞ்சஸ்தவத்தில் – அதிமாநுஷஸ்தவம் | |
228 டிசம்பர்-1962 | திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவாட்டாறு |
ஐதிஹ்ய ரக்ஷா, கத்யத்ரயம் | |
229 ஜனவரி-1963 | கோயில் மணவாள்மாமுனிகள் ஸன்னிதி ஜீர்ணோத்தரம் |
சரணாகதி கத்யம் | |
230 மார்ச்சு-1963 | சரணாகதி கத்யம் |
235 ஆகஸ்ட்-1963 | ஈட்டுப்ரமாணத்திரட்டைப்பற்றி |
பஞ்சஸ்தவத்தில் – ஸுந்தரபாஹுஸ்தவம் | |
236 அக்டோபர்-1963 | தொண்டைநாட்டுத்திருப்பதி யநுபவம் |
பஞ்சஸ்தவத்தில் – ஸுந்தரபாஹுஸ்தவம் | |
237 டிசம்பர்-1963 | சப்தங்களின் மருமவிளக்கம் |
தொண்டைநாட்டுத்திருப்பதி யநுபவம் | |
பஞ்சஸ்தவத்தில் – ஸுந்தரபாஹுஸ்தவம் |
வரலாற்று இடம்
தமிழின் சிறந்த வைணவ சமயப் பேரறிஞர்களுள் ஒருவர், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார். அவர் வெளியிட்ட ‘அம்ருதலஹரி' இதழ், தமிழில் வெளிவந்த முன்னோடி வைணவ சமயம் சார்ந்த மாத இதழ்களுள் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
08-Dec-2022, 13:37:55 IST