under review

இறையரசன்: Difference between revisions

From Tamil Wiki
Tag: Reverted
Tag: Manual revert
Line 58: Line 58:
[[Category:கவிஞர்கள்]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மதம்:கிறிஸ்தவம்]]
[[Category:கிறிஸ்தவம்]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Revision as of 11:23, 15 October 2024

இறையரசன்

இறையரசன் (டிசம்பர் 20,1928- நவம்பர் 30, 2005 ) கிறிஸ்தவத் தமிழ்க் கவிஞர். உலகஜோதி என்னும் கிறிஸ்தவக் காப்பியத்தின் ஆசிரியர்.

பிறப்பு, கல்வி

இறையரசனின் இயற்பெயர் மகாராஜா. தூத்துக்குடியில் வேம்பார் என்னும் ஊரில் பேச்சிமுத்து - குருவம்மா இணையருக்கு டிசம்பர் 20, 1928-ல் பிறந்தார். பத்துவயதில் பெற்றோரை இழந்து தூத்துக்குடி அனாதை இல்லத்தில் சேர்ந்து ஐந்தாம் வகுப்புவரை படித்தார். பின்னர் எட்டாம் வகுப்பு வரை அடைக்கலாபுரம் அனாதை இல்லத்தில் பயின்றார். வடக்கன்குளம் சிறுமலர் மடத்தில் தங்கி ஒன்பது முதல் பதினொன்றாம் வகுப்புகளைப் படித்த இறையரசன் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். ஆசிரியர் பட்டமும் வித்வான் பட்டமும் பெற்றார்.

தனிவாழ்க்கை

இறையரசன் 1938-ல் தன் பத்தாம் வயதில் பெற்றோரை இழந்தார். தூத்துக்குடி அனாதைகள் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். தூத்துக்குடி ஆயர் திபூர்ஸியுஸ் ரோசின் தூண்டுதலால் கிறிஸ்தவராக மாறி 1938-ல் கூட்டப்பாடு பெரியசாமிபுரத்தில் திருமுழுக்குப் பெற்று தன் பெயரை ஜேசுராஜா என்று மாற்றிக்கொண்டார்.

1953 முதல் 1996 வரை கல்வித்துறையில் பணியாற்றினார். நெல்லை ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில் பத்தாண்டுக்காலம் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினர். சாத்தூர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆறாண்டுக்காலம் தமிழாசிரியராகவும், புனித பிரிட்டோ மேனிலைப்பள்ளியில் ஓராண்டுக்காலம் தமிழாசிரியராகவும் பணியாற்றினார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1969-ம் ஆண்டு முதல் 1986-ம் ஆண்டுவரை தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இறையசரன் 1953-ல் அருளம்மாளை மணந்தார். இவர்களுக்கு ஐந்து மகன்கள், ஒரு மகள்.

அமைப்புப் பணிகள்

பங்களிப்பாற்றிய அமைப்புகள்

  • கிறிஸ்தவ ஐக்கியப் பேரவை
  • சிறுபான்மையினர் ஒருங்கிணைப்புக் கழகம்
  • திருவருட் பேரவை
  • கத்தோலிக்க சங்கம்
  • தமிழக ஆயர்பேரவை கூட்டமைப்பு
  • இந்திய கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி (நிறுவனத் தலைவர்)
  • கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம் (பொதுச்செயலாளர்)

இலக்கியவாழ்க்கை

இறையரசன் மரபுக்கவிதைகளும், கட்டுரைகளும் எழுதிவந்தார். பெரும்பாலும் கத்தோலிக்க சேவை, நம்வாழ்வு போன்ற கிறிஸ்தவ இதழ்களிலேயே எழுதினார். அவருடைய முதன்மை ஆக்கமான உலகஜோதி என்னும் காவியம் அவர் மறைவுக்குப்பின் ஒரு மாதம் கழித்து வெளியாகியது.

மறைவு

இறையரசன் நவம்பர் 30, 2005-ல் மறைந்தார்.

விருதுகள்

  • சென்னை உலகத் தமிழ்க்கவிஞர் பேரவை கிறிஸ்தவ அருட்கவிஞர் என்னும் பட்டம் வழங்கியது
  • மரபு இலக்கிய வித்தகர் பட்டம்(1991)

இலக்கிய இடம்

இறையரன் சமகால கிறிஸ்தவக் காப்பியமான உலகஜோதி என்னும் நூலின் ஆசிரியராக மதிக்கப்படுகிறார்.

நூல்கள்

  • மணி ஒலி
  • தந்தை அருளானந்தர் வெள்ளிவிழா
  • தங்கத்தமிழ் இலக்கணம்
  • எழுத்தும் சொல்லும்
  • அறிஞர் போற்றும் ஆண்டவர்
  • புத்தர்
  • காந்தி
  • தாகூர்
  • சி.வி.இராமன்
  • இலக்கிய ஆய்வுகள்
  • கருணை காட்டிய காவலர்கள்
  • சிலையாக நிற்கின்ற செந்தமிழ் செல்வர்கள்
  • ஏன் இந்த சிலைகள்
  • கத்தோலிக்க பொது நிலையினரின் கடமைகளும் உரிமைகளும்
  • இறையசன் கவிதைகள்
  • உலகஜோதி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Dec-2022, 08:08:05 IST