under review

இடைக்குன்றூர் கிழார்: Difference between revisions

From Tamil Wiki
(Added links to Disambiguation page)
(Corrected the links to Disambiguation page)
Line 1: Line 1:
{{OtherUses-ta|கிழார்|[[கிழார் (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=கிழார்|DisambPageTitle=[[கிழார் (பெயர் பட்டியல்)]]}}
{{Read English|Name of target article=Idaikkundrur Kilar|Title of target article=Idaikkundrur Kilar}}
{{Read English|Name of target article=Idaikkundrur Kilar|Title of target article=Idaikkundrur Kilar}}



Revision as of 18:13, 27 September 2024

கிழார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கிழார் (பெயர் பட்டியல்)

To read the article in English: Idaikkundrur Kilar. ‎


இடைக்குன்றூர் கிழார் சங்க காலப் புலவர். சங்கத்தொகை நூல்களில் இவரது நான்கு பாடல்கள் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

இடைக்குன்றூரில் பிறந்தார். குன்றுகளுக்கிடைப்பட்ட ஊர் இடைக்குன்றூர் என்று அழைக்கப்படும் என்பதால் இவரின் ஊர் பழனிமலைத் தொடரைச் சார்ந்தோ, திருப்பரங்குன்றத்தைச் சார்ந்தோ இருக்கலாம் என தமிழறிஞர்கள் கருதுகின்றனர்.

இலக்கிய வாழ்க்கை

இந்தப் பாடல்களில் இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடினார்.

பாடலின் வழி அறியவரும் செய்திகள்
  • நெடுஞ்செழியனின் குடிக்குரியது வேம்பு.
  • தலையாலங்கானப் போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் ஏழு அரசர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றார்.

பாடல் நடை

ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்; திரளரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி,
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடிப்,
பாடின் தெண்கிணை கறங்கக், காண்தக,
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்,
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க,
ஒருதான் ஆகிப் பொருது, களத்து அடலே!

கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக்,
குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு,
தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
அழுந்தபற்றி, அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
மகிழ்ந்தன்றும்,இகழ்ந்தன்றும்,அதனினும் இலனே.

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,
மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து,
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி,
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ, பகல்தவச் சிறிதே?

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:07:05 IST