டி.எஸ். துரைசாமி: Difference between revisions
(Added First published date) |
(Added links to Disambiguation page) |
||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|துரைசாமி|[[துரைசாமி (பெயர் பட்டியல்)]]}} | |||
தமிழின் ஆரம்பகால நாவலாசிரியர்களில் ஒருவர். 1926-ல் [[கருங்குயில் குன்றத்துக் கொலை]] என்னும் நாவலை எழுதினார். இது தமிழின் வணிக கேளிக்கை எழுத்தின் முன்னோடி நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. | தமிழின் ஆரம்பகால நாவலாசிரியர்களில் ஒருவர். 1926-ல் [[கருங்குயில் குன்றத்துக் கொலை]] என்னும் நாவலை எழுதினார். இது தமிழின் வணிக கேளிக்கை எழுத்தின் முன்னோடி நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. | ||
==வாழ்க்கை== | ==வாழ்க்கை== |
Revision as of 21:39, 26 September 2024
- XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
தமிழின் ஆரம்பகால நாவலாசிரியர்களில் ஒருவர். 1926-ல் கருங்குயில் குன்றத்துக் கொலை என்னும் நாவலை எழுதினார். இது தமிழின் வணிக கேளிக்கை எழுத்தின் முன்னோடி நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
வாழ்க்கை
1869-ல் கும்பகோணத்தில் பிறந்த டி.எஸ்.துரைசாமி, சிறிதுகாலம் ஆங்கில அரசின்கீழ் உப்பள ஆய்வாளராக வேலைபார்த்துவிட்டு அதை உதறிவிட்டார். ஆங்கிலக் கல்வி பெற்றவரானதனால் ஆங்கில புனைகதைகளை ஒட்டி தமிழில் புனைகதைகள் எழுதும் ஆர்வம் கொண்டார்.
சர் வால்டர் ஸ்காட் எழுதிய நாவல் ஒன்றை தழுவி இந்த 'கருங்குயில் குன்றத்துக் கொலை’ என்ற நாவலை எழுதி பாண்டிச்சேரி மறைமாவட்டத்திலிருந்து வெளிவந்த 'சர்வவியாபி’ என்ற இதழில் வெளியிட்டார். 1925-ல் இந்நாவல் நூலாக வெளிவந்தது. 1926-ல் இரண்டாம் பகுதி வெளிவந்து பின்னர் ஒரே நூலாக பிரசுரிக்கப்பட்டது.
இலக்கியப் பங்களிப்பு
டி.எஸ்.துரைசாமி தமிழில் ஆங்கில நாவல்களை தழுவி வணிகக்கேளிக்கை நாவல்கள் உருவாவதற்கான வழியை தொடங்கியவர்களில் ஒருவர். கருங்குயில் குன்றத்துக் கொலை முன்னுதாரணமாக அமைந்த நாவல்.
நூல்கள்
- கருங்குயில்குன்றத்துக் கொலை
- நோறாமணி
- மனோஹரி
- வஸந்தா
உசாத்துணை
- தமிழில் இரண்டாம் கட்ட நாவல்கள்; தமிழ் இணையவழி கல்விக்கழகம்
- தமிழ்நாவலின் முதல்படிகளில் ஒன்று- ஜெயமோகன்
- கருங்குயில் குன்றத்துக் கொலை நாவல்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:45 IST