under review

அ. திருமலை முத்துசுவாமி: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
(Added links to Disambiguation page)
Line 1: Line 1:
{{OtherUses-ta|திருமலை|[[திருமலை (பெயர் பட்டியல்)]]}}
[[File:A. Tirumalai Muthuswami.jpg|thumb|அ. திருமலை முத்துசுவாமி]]
[[File:A. Tirumalai Muthuswami.jpg|thumb|அ. திருமலை முத்துசுவாமி]]
அ. திருமலை முத்துசுவாமி (அருணாசலம் திருமலை முத்துசுவாமி; 1928-1980) எழுத்தாளர், கல்லூரி ஆசிரியர். நூலகர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் நூலகத்துறைத் தலைவராகப் பணியாற்றினார். தன் இலக்கிய முயற்சிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். இவரது நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

Revision as of 21:38, 26 September 2024

XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
அ. திருமலை முத்துசுவாமி

அ. திருமலை முத்துசுவாமி (அருணாசலம் திருமலை முத்துசுவாமி; 1928-1980) எழுத்தாளர், கல்லூரி ஆசிரியர். நூலகர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் நூலகத்துறைத் தலைவராகப் பணியாற்றினார். தன் இலக்கிய முயற்சிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். இவரது நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

பிறப்பு, கல்வி

அ. திருமலை முத்துசுவாமி, 1928-ல், திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரியில், அருணாசலம் - மங்கையர்க்கரசி இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை ஹானர்ஸ் பட்டம் (BA - Hons) பெற்றார். கல்வியியலில் இளங்கலை ஆசிரியர் பட்டம் ((Bachelor of Teaching) பெற்றார். நூலக அறிவியலில் பட்டயம் பெற்றார். தமிழிலக்கியத்தில் ஆய்வுசெய்து எம். லிட் பட்டம் பெற்றார். கர்நாடகப் பல்கலைக் கழகத்தில் நூலக அறிவியலில் ஆய்வு செய்து முதுவர் பட்டம் (Master in Library Science) பெற்றார்.

தனி வாழ்க்கை

அ. திருமலை முத்துசுவாமி, திருநெல்வேலியில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரியில் (மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி) தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் சில ஆண்டுகள் நூலகராகப் பணிபுரிந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் நூலகத் துறைத் தலைவராகப் பணியாற்றினார். சென்னைப் பல்கலைக் கழக நூலகத்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் நூலகத்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மனைவி. பகவதி.

இலக்கிய வாழ்க்கை

அ. திருமலை முத்துசுவாமி, நூலகத் துறை சார்ந்து பல நூல்களை எழுதினார். மாணவர்களுக்குப் பாடல் நூல்களை எழுதினார். இலக்கியம் சார்ந்து பல நூல்களை எழுதினார். அமெரிக்காவிற்குச் சென்ற அனுபவங்களைக் கொண்டு, ‘நூலக நாட்டில் நூற்றியிருபது நாள்கள்’ என்னும் நூலை எழுதினார்.

விருதுகள்

  • சைவமணி
  • அறநெறிச் செல்வர்
  • அருங்கலைக்கோன்
  • நூலகக் கலாநிதி
  • யுனஸ்கோ மன்ற விருது

மறைவு

அ. திருமலை முத்துசுவாமி, 1980-ம் ஆண்டு காலமானார்.

நாட்டுடைமை

அ. திருமலை முத்துசுவாமியின் நூல்கள், 2010-ல், தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

ஆவணம்

அ. திருமலை முத்துசுவாமியின் நூல்கள் சில தமிழ் இணையக் கல்விக் கழக நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

இலக்கிய இடம்

அ. திருமலை முத்துசுவாமி, நூலகத்துறை சார்ந்து பல நூல்களை எழுதினார். நூலகத்துறைக்குப் பெரும் பங்காற்றிய எஸ்.ஆர். ரங்கநாதன், வே. தில்லைநாயகம் வரிசையில், நூலகத்துறை முன்னோடி அறிஞர்களுள் ஒருவராக அ. திருமலை முத்துசுவாமி மதிப்பிடப்படுகிறார்.

அ. திருமலை முத்துசுவாமி நூல்கள்

நூல்கள்

கட்டுரைத் தொகுப்புகள்
  • அமெரிக்க நூலகங்கள்
  • நூல் நிலையம்
  • உயர்நிலைப் பள்ளி நூலகம்
  • கிராம நூலகக் கையேடு
  • நூலக அமைப்பியல்
  • நூலக ஆட்சி
  • நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்
  • நூலகவியல் சிந்தனைகள்
  • முதல் பொது நூலக இயக்கம்
  • அறிவியற் சோலை
  • இலக்கிய மலர்கள்
  • இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்
  • தமிழ்நாடும் மொழியும்
  • மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
  • மலைவாழ் மக்கள்
  • மறுமலர்ச்சிக் கவிஞர்கள்
  • மாணவர் தமிழ் இலக்கணம் வகுப்பு 5
  • மாணவர் தமிழ் இலக்கணம் வகுப்பு 6
  • மாணவர் தமிழ் இலக்கணம் வகுப்பு 9
  • மாணவர் தமிழ் இலக்கணம் வகுப்பு 10
  • முதலுதவி
  • யாப்பருங்கலக் காரிகை(வினா விடை)
  • விஞ்ஞானத்தின் கதை
  • ஆஞ்சநேய புராணம்
ஆங்கில நூல்கள்
  • A Bibliography on Thirukkural
  • ABC of Library Science
  • Essays of Library Science
  • Saiva Nanneri

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Mar-2023, 18:51:28 IST