under review

குறிஞ்சித்தேன்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
(Added links to Disambiguation page)
Line 1: Line 1:
{{OtherUses-ta|குறிஞ்சி|[[குறிஞ்சி (பெயர் பட்டியல்)]]}}
{{Read English|Name of target article=Kurinjithen|Title of target article=Kurinjithen}}
{{Read English|Name of target article=Kurinjithen|Title of target article=Kurinjithen}}
[[File:Kuri.jpg|thumb|குறிஞ்சித்தேன்]]
[[File:Kuri.jpg|thumb|குறிஞ்சித்தேன்]]

Revision as of 21:26, 26 September 2024

XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ

To read the article in English: Kurinjithen. ‎

குறிஞ்சித்தேன்

குறிஞ்சித்தேன் (1963) ராஜம் கிருஷ்ணன் எழுதிய நாவல். நீலகிரி மலையின் தொல்குடிகளான படுகர் வாழ்க்கைப்பின்னணியில் எழுதப்பட்டது.

எழுத்து வெளியீடு

குறிஞ்சித்தேன் கலைமகள் இதழில் தொடராக வெளிவந்தது. 1963-ம் ஆண்டு கலைமகள் காரியாலயத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது. "நான் இந்நவீனத்தை எழுதத் துணிந்த நாட்களில் மனித வாழ்வின் நிலையாய ஈரங்களினின்று அகன்று செல்ல வழிவகுக்கும் வாழ்வின் வேறுபாட்டைக் குறியாகத்தான் புலப்படுத்த எண்ணினேன். இன்று அந்தக் கருத்து வருந்தத்தக்க வகையில் அச்சமூட்டும் உண்மையாகப் பரவியிருக்கிறது. எனினும் மனித மனத்தின் இயல்பான ஊற்றுக் கண்கள் அன்பின் அடிநிலையைக் கொண்டதென்று நம்பிக்கை கொள்வோம்" என ஆறாம்பதிப்புக்கான முன்னுரையில் ஆசிரியர் சொல்கிறார்[1].

கதைச்சுருக்கம்

படுகர் குடிக்குள் பொருளாதார நிலையிலும் குடும்பச் சூழலிலும் மாறுபட்ட மூவரின் வாழ்க்கையை குறிஞ்சித்தேன் சொல்கிறது. ஐந்து குறிஞ்சி (அறுபது) ஆண்டுகள் அவர்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளும் கூடவே நீலகிரியில் நடக்கும் அரசியல் மற்றும் சமூக மாற்றங்களும் கூறப்படுகின்றன. நீலகிரி மலையில் மரகத மலை ஹட்டியில் படுகர் இனத்தைச்சேர்ந்த ஜோகி, ரங்கா, கிருஷ்ணா மூவரும் வாழ்கின்றனர். மூவரும் இந்திய சுதந்திரத்தை ஒட்டிய மாற்றங்களால் காடுகள் அழிந்து நவீனவாழ்க்கை உருவாகும் போக்கில் பலவகை வாழ்க்கை மாற்றங்களுக்கு ஆளாகிறார்கள். நஞ்சன் விஜயா என்னும் இளைஞர்களின் காதல் ஊடாக வளர்ந்து முழுமையடைகிறது

இலக்கிய இடம்

இந்நாவல் தமிழில் பழங்குடி இனத்தவரைப் பின்னணியாகக்க்கொண்டு எழுதப்பட்ட முதல் படைப்பு. பல செய்திகளை ஆசிரியர் தொகுத்து அளித்திருக்கிறார். வளர்ச்சிப்பணிகளால் வன அழிவு நிகழ்வதை ஆவணப்படுத்துகிறது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. [முன்னுரை - குறிஞ்சித் தேன் - Kurinji Then - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com முன்னுரை - குறிஞ்சித் தேன் - Kurinji Then - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com]



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:38 IST