வாசு முருகவேல்: Difference between revisions

From Tamil Wiki
(updated Name in English)
Line 1: Line 1:
ஈழத்தில் பிறந்த எழுத்தாளர் வாசு முருகவேல் ( Vasu Murugavel), ஈழப் போர்ச் சூழலையும் அதற்கு முன்னும் பின்னுமான ஈழ மக்களின் வாழ்க்கையையும் நேரடிப் போர் வர்ணனை இன்றி அதன் பிற வெளிக்காரணிகளை  மையமாக வைத்து புனைவுகளை எழுதியவர்.   

==பிறப்பு, கல்வி==
 
வாசு முருகவேல், ஈழத்தில் உள்ள யாழ்.நயினாதீவில் 02/05/1984 அன்று திரு. கதிரவேற்பிள்ளை மற்றும் திருமதி. ஈஸ்வரி அவர்களுக்கு மகனாய்ப் பிறந்தார்.  நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தில்  கல்வி பயின்றார். போர்ச்சூழலில் இந்தியாவுக்கு அகதியாக வந்தவர் சென்னையில் வசிக்கிறார்.
==வாழ்க்கைக்குறிப்பு==
===பிறப்பு, கல்வி===
வாசு முருகவேல், ஈழத்தில் உள்ள யாழ்.நயினாதீவில் 02/05/1984 அன்று திரு. கதிரவேற்பிள்ளை மற்றும் திருமதி. ஈஸ்வரி அவர்களுக்கு மகனாய்ப் பிறந்தார்.  நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தில்  கல்வி பயின்றார்.

==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==

வாசு முருகவேல்  தன்னுடைய முதல்நாவளான ஜெப்னா பேக்கரியை 2015ம் ஆண்டு எழுதத் துவங்கினார். அந்த நாவல் 2017ம் ஆண்டு வெளிவந்தது. நாவலின் முதல் பதிப்பு ஈழத்தமிழ் நடையில் அமைந்திருந்தது.  தனது  முதல் நாவல் வழியாகவே விருதும் விமர்சனங்களும் ஒருங்கே பெற்றார். விடுதலைப் புலிகள் அமைப்பு, யாழ்ப்பாணம் நகரிலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றிய,  'யாழ் வெளியேற்றம்' என்று இன்றளவும் அழைக்கப்படுகிற வரலாற்று நிகழ்வின் பின்னணியில் உருவான நாவல் இது.
வாசு முருகவேல்  தன்னுடைய முதல்நாவளான ஜெப்னா பேக்கரியை 2015ம் ஆண்டு எழுதத் துவங்கினார். அந்த நாவல் 2017ம் ஆண்டு வெளிவந்தது. நாவலின் முதல் பதிப்பு ஈழத்தமிழ் நடையில் அமைந்திருந்தது.  தனது  முதல் நாவல் வழியாகவே விருதும் விமர்சனங்களும் ஒருங்கே பெற்றார். விடுதலைப் புலிகள் அமைப்பு, யாழ்ப்பாணம் நகரிலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றிய,  'யாழ் வெளியேற்றம்' என்று இன்றளவும் அழைக்கப்படுகிற வரலாற்று நிகழ்வின் பின்னணியில் உருவான நாவல் இது. இரண்டாம் நாவலான "கலாதீபம் லொட்ஜ்" அதிகம் சொல்லப்படாத கொழும்பு நகர்ப்புற வாழ்வைச் சொல்லிப் போகிறது. அயல்நாடு செல்லும் வழியில் கொழும்பில் லாட்ஜில் தங்க நேரிடும் குடும்பமும் அவர்களைச் சுற்றியுள்ள பாத்திரங்களின் அலைச்சலும் சொல்லப்படுகிறது.  கொரோனா காலத்தில் அனைவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்ப, புலம்பெயர்  வாழ்வில் அங்கு செல்லமுடியாத  ஏக்கத்தை எழுத்து வழியாக ஆசிரியர் தீர்த்துக்கொண்ட நாவல் என்று தன்னுடைய மூன்றாவது நாவலைக் குறித்து அறிமுகம் செய்கிறார்.இவரது நான்காவது நாவல் மூத்த அகதி. இந்நாவல் ஸீரோ டிகிரி பதிப்பகம் 2021ம் ஆண்டு நடத்திய நாவல் போட்டியில் பங்கு பெற்று இரண்டாம் பரிசு பெற்றது. ஈழத்துக்கான விடுதலைப்போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தில் சென்னையில் வந்து தங்கியிருக்கும் அகதிகளின் வாழ்க்கையின் சித்திரம் இந்நாவலில் வெளிப்படுகிறது

இரண்டாம் நாவலான "கலாதீபம் லொட்ஜ்" அதிகம் சொல்லப்படாத கொழும்பு நகர்ப்புற வாழ்வைச் சொல்லிப் போகிறது. அயல்நாடு செல்லும் வழியில் கொழும்பில் லாட்ஜில் தங்க நேரிடும் குடும்பமும் அவர்களைச் சுற்றியுள்ள பாத்திரங்களின் அலைச்சலும் சொல்லப்படுகிறது.  
அசோகமித்திரன், வைக்கம் முகம்மது பஷீர், லஷ்மி சரவணகுமார், அ.இரவி ,செழியன் உள்ளிட்டோரை தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா காலத்தில் அனைவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்ப, புலம்பெயர் வாழ்வில் அங்கு செல்லமுடியாத  ஏக்கத்தை எழுத்து வழியாக ஆசிரியர் தீர்த்துக்கொண்ட நாவல் என்று தன்னுடைய மூன்றாவது நாவலைக் குறித்து அறிமுகம் செய்கிறார்.
==இலக்கிய இடம் ==
வாசு முருகவேல் எழுத்தின் தனித்துவம் என்று சுருங்கக் கூறும் நடையையும் , பகடிச் சித்தரிப்பையும் தமிழ் முன்னோடி எழுத்தாளரான ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்[https://www.jeyamohan.in/160152/ *.] இந்தியாவிலுள்ள ஈழ அகதிகளின் வாழ்க்கையை சார்ந்து தன் அரசியல் கேள்விகளையும் இருத்தலியல் கேள்விகளையும் முன்னெடுப்பவர்.

இவரது நான்காவது நாவல் மூத்த அகதி. இந்நாவல் ஸீரோ டிகிரி பதிப்பகம் 2021ம் ஆண்டு நடத்திய நாவல் போட்டியில் பங்கு பெற்று இரண்டாம் பரிசு பெற்றது. ஈழத்துக்கான விடுதலைப்போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தில் சென்னையில் வந்து தங்கியிருக்கும் அகதிகளின் வாழ்க்கையின் சித்திரம் இந்நாவலில் வெளிப்படுகிறது
== நூல்கள் ==

அசோகமித்திரன் / வைக்கம் முகம்மது பஷீர்/  ஜெயமோகன் / லஷ்மி சரவணகுமார் / அ.இரவி / செழியன் உள்ளிட்டோரை தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக குறிப்பிட்டுள்ளார்.
* ஜாஃப்னா பேக்கரி
* கலாதீபம் லொட்ஜ்
* மூத்த அகதி

==விருதுகள்==
== விருதுகள் ==
முதல் நெருப்பு ( இன அழிப்பிற்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம்)  - ஜெப்னா பேக்கரி நாவலுக்காக இவ்விருது பெற்றார்.
ஜீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது (நாவல்) இரண்டாம் பரிசு. - மூத்த அகதி நாவலுக்காக இவ்விருது பெற்றார்.

==விமர்சனங்கள் ==
* இன அழிப்பிற்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம் விருது.முதல் நெருப்பு (  ஜெப்னா பேக்கரி நாவலுக்காக )
வாசு முருகவேல்  எழுத்தின் தனித்துவம் என்று  சுருங்கக் கூறும் நடையையும் , பகடிச் சித்தரிப்பையும் தமிழ் முன்னோடி எழுத்தாளரான ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். ஏனைய ஈழ நாவல்களில்  அதிகம் உரைக்கப்படாத இடங்களைத் தொட்டு் நிரப்பும் உள்ளடக்கமும் இலக்கியத்தில் அதிக முக்கியத்துவம் இல்லாதுபோன இடங்களை நோக்கி ஒளியைப் பாய்ச்சுவதும் வாசு முருகவேலின் இயல்பாக உள்ளது. அரசியல் நோக்கில், ஈழ விடுதலை & அகதிகள் சார்ந்த தனிப்பட்ட ஜனநாயக செயற்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் எழுத்தாக இவரது படைப்புலகம் உள்ளது
* ஜீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது (இரண்டாம் பரிசு. - மூத்த அகதி நாவலுக்காக).

== இணைப்புகள்: ==
== இணைப்புகள்: ==

Revision as of 06:08, 29 January 2022

ஈழத்தில் பிறந்த எழுத்தாளர் வாசு முருகவேல் ( Vasu Murugavel), ஈழப் போர்ச் சூழலையும் அதற்கு முன்னும் பின்னுமான ஈழ மக்களின் வாழ்க்கையையும் நேரடிப் போர் வர்ணனை இன்றி அதன் பிற வெளிக்காரணிகளை மையமாக வைத்து புனைவுகளை எழுதியவர்.

பிறப்பு, கல்வி

வாசு முருகவேல், ஈழத்தில் உள்ள யாழ்.நயினாதீவில் 02/05/1984 அன்று திரு. கதிரவேற்பிள்ளை மற்றும் திருமதி. ஈஸ்வரி அவர்களுக்கு மகனாய்ப் பிறந்தார். நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். போர்ச்சூழலில் இந்தியாவுக்கு அகதியாக வந்தவர் சென்னையில் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

வாசு முருகவேல் தன்னுடைய முதல்நாவளான ஜெப்னா பேக்கரியை 2015ம் ஆண்டு எழுதத் துவங்கினார். அந்த நாவல் 2017ம் ஆண்டு வெளிவந்தது. நாவலின் முதல் பதிப்பு ஈழத்தமிழ் நடையில் அமைந்திருந்தது. தனது முதல் நாவல் வழியாகவே விருதும் விமர்சனங்களும் ஒருங்கே பெற்றார். விடுதலைப் புலிகள் அமைப்பு, யாழ்ப்பாணம் நகரிலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றிய, 'யாழ் வெளியேற்றம்' என்று இன்றளவும் அழைக்கப்படுகிற வரலாற்று நிகழ்வின் பின்னணியில் உருவான நாவல் இது. இரண்டாம் நாவலான "கலாதீபம் லொட்ஜ்" அதிகம் சொல்லப்படாத கொழும்பு நகர்ப்புற வாழ்வைச் சொல்லிப் போகிறது. அயல்நாடு செல்லும் வழியில் கொழும்பில் லாட்ஜில் தங்க நேரிடும் குடும்பமும் அவர்களைச் சுற்றியுள்ள பாத்திரங்களின் அலைச்சலும் சொல்லப்படுகிறது. கொரோனா காலத்தில் அனைவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்ப, புலம்பெயர் வாழ்வில் அங்கு செல்லமுடியாத ஏக்கத்தை எழுத்து வழியாக ஆசிரியர் தீர்த்துக்கொண்ட நாவல் என்று தன்னுடைய மூன்றாவது நாவலைக் குறித்து அறிமுகம் செய்கிறார்.இவரது நான்காவது நாவல் மூத்த அகதி. இந்நாவல் ஸீரோ டிகிரி பதிப்பகம் 2021ம் ஆண்டு நடத்திய நாவல் போட்டியில் பங்கு பெற்று இரண்டாம் பரிசு பெற்றது. ஈழத்துக்கான விடுதலைப்போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தில் சென்னையில் வந்து தங்கியிருக்கும் அகதிகளின் வாழ்க்கையின் சித்திரம் இந்நாவலில் வெளிப்படுகிறது

அசோகமித்திரன், வைக்கம் முகம்மது பஷீர், லஷ்மி சரவணகுமார், அ.இரவி ,செழியன் உள்ளிட்டோரை தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக குறிப்பிட்டுள்ளார்.

இலக்கிய இடம்

வாசு முருகவேல் எழுத்தின் தனித்துவம் என்று சுருங்கக் கூறும் நடையையும் , பகடிச் சித்தரிப்பையும் தமிழ் முன்னோடி எழுத்தாளரான ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்*. இந்தியாவிலுள்ள ஈழ அகதிகளின் வாழ்க்கையை சார்ந்து தன் அரசியல் கேள்விகளையும் இருத்தலியல் கேள்விகளையும் முன்னெடுப்பவர்.

நூல்கள்

  • ஜாஃப்னா பேக்கரி
  • கலாதீபம் லொட்ஜ்
  • மூத்த அகதி

விருதுகள்

  • இன அழிப்பிற்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம் விருது.முதல் நெருப்பு ( ஜெப்னா பேக்கரி நாவலுக்காக )
  • ஜீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது (இரண்டாம் பரிசு. - மூத்த அகதி நாவலுக்காக).

இணைப்புகள்:

1. இடைவெளிகளை நிரப்பும் எழுத்து: ஆர். காளிப்பிரஸாத் https://akazhonline.com/?p=3252 2. சீரோ டிகிரி விருது -ஐந்து நாவல்கள்: ஜெயமோகன் https://www.jeyamohan.in/160152/