being created

நட்ராஜ் மகராஜ்: Difference between revisions

From Tamil Wiki
Line 3: Line 3:


== எழுத்து வெளியீடு ==
== எழுத்து வெளியீடு ==
இந்நாவலை தேவிபாரதி 2016ல் எழுதினார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது.
இந்நாவலை [[தேவிபாரதி]] 2016ல் எழுதினார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது.


== கதைச்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் ==
Line 12: Line 12:


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
https://devibharathi.blogspot.com/2017/04/blog-post_31.html
https://www.commonfolks.in/bookreviews/nataraj-maharaj-varalaaru-kelikkullaagum-abaayam


* https://devibharathi.blogspot.com/2017/04/blog-post_31.html
* https://www.commonfolks.in/bookreviews/nataraj-maharaj-varalaaru-kelikkullaagum-abaayam
* [https://iravie.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95/ https://iravie.com/%Eநட்ராஜ்மகராஜ்95/]
* https://devakanthanswriting.blogspot.com/2018/08/blog-post.html
* https://youtu.be/f45-znqtlao
* https://writervino.blogspot.com/2022/01/blog-post.html
* https://kjashokkumar.blogspot.com/2018/12/blog-post_31.html
* http://www.vasagasalai.com/na-udanana-uraiyadal/
{{being created}}
{{being created}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 22:48, 24 April 2022

நட்ராஜ் மகராஜ்.

நட்ராஜ் மகராஜ் (2016 ) தேவிபாரதி எழுதிய நாவல். இது தேவிபாரதியின் இரண்டாவது நாவல். ஒரு தனிமனிதனுக்கு தாங்கவியலாத வரலாற்றுச் சுமை அமைவதன் துயரை அங்கதம் கலந்து சொல்கிறது

எழுத்து வெளியீடு

இந்நாவலை தேவிபாரதி 2016ல் எழுதினார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

தேவிபாரதியின் நட்ராஜ் மகாராஜ் ஒரு சாமானியனுக்கு வரலாற்றுப் பாத்திரம் ஒன்று தற்செயலாக வந்தமையும்போது அந்தச் சுமையில் அவன் நிலை தடுமாறிச் சிதையும் காட்சியை அளிக்கிறது. கதைநாயகனாகிய ந ஒரு பெயர்கூட இல்லாத எளிய மனிதன். சத்துணவு ஊழியனாக இருக்கிறான். இடிந்த ஒரு வீட்டில் வாழ்கிறான். சிறுவீடு ஒன்று கட்டி குடியேறும் கனவு கொண்டிருக்கிறான். அவன் தான் ஓர் அரச குடியின் எஞ்சிய வாரிசு என அறிகிறான். காளிங்கராய மகாராஜாவின் வாரிசாக அவன் தன்னை அறிந்துகொண்டு அதை ஊர் முன் நிறுவ முயல்கிறான். தன் வரலாற்றுப்பெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறான். அவனை அந்த வரலாற்றுச்சுமை அழிக்க ஆரம்பிக்கிறது.

மதிப்பீடு

”தீவிரமும் அங்கதமுமாகச் சிரிக்க வாய்ப்புள்ள இடங்கள் இந்நாவலில் அதிகம் உண்டு. ஆனால் சிரிக்க இயலாது. அந்தச் சிரிக்கவியலாத வலியையும் மூச்சுத் திணறலையும் வாசகன் உணரும் வண்ணம் எழுதியிருப்பதுதான் தேவிபாரதி என்ற எழுத்தாளர் அடைந்திருக்கும் வெற்றி” என்று நட்ராஜ் மகாராஜ் பற்றி விமர்சகர் சங்கர ராமசுப்ரமணியம் குறிப்பிடுகிறார்.*

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.