under review

64 சிவவடிவங்கள்: 16-சதாநிருத்த மூர்த்தி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 18: Line 18:
* [https://temple.dinamalar.com/news_detail.php?id=779 தினமலர் இதழ் கட்டுரை]  
* [https://temple.dinamalar.com/news_detail.php?id=779 தினமலர் இதழ் கட்டுரை]  
* [https://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/oct/30/64-divine-forms-of-lord-shiva-2798606.html தினமணி இதழ் கட்டுரை]  
* [https://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/oct/30/64-divine-forms-of-lord-shiva-2798606.html தினமணி இதழ் கட்டுரை]  
{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:01, 9 September 2024

சதாநிருத்த மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று சதாநிருத்த மூர்த்தி

வடிவம்

64 சிவ வடிவங்களில் பதினாறாவது மூர்த்தம் சதா நிருத்த மூர்த்தி. சதா நடனம் ஆடியபடி இருக்கும் சிவபெருமானின் நடராஜர் திருவுருவமே சதாநிருத்த மூர்த்தி என அறியப்படுகிறது. நடராஜ மூர்த்தி நான்கு கரங்களுடன் நடனமாடும் நிலையில் காட்சியளிக்கிறார்.

சதாநிருத்த மூர்த்தி – தொன்மம்

சதா என்றால் எப்போதும் என்பது பொருள்; நிருத்தம் என்றால் நடனம். சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களையும் நடனம் ஆடியபடி சதாசர்வ காலமும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இறைவனின் இந்தத் திருநடன உருவத்திற்கு நடராஜர் என்று பெயர். இந்த நடன உருவத்தினை உமையம்மை இடமிருந்து தரிசிப்பார். அப்பொழுது சிவகணங்களும், தேவர்களும், நந்தி தேவரும் வாத்தியங்களில் இசையை ஒலிப்பர். சதா நடனம் ஆடியபடி இருக்கும் சிவபெருமானின் நடராஜர் திருவுருவமே சதாநிருத்த மூர்த்தி என அழைக்கப்படுகிறது. நடராஜ மூர்த்தி நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

டமருகம்(உடுக்கை) தாங்கிய கரத்தினால் படைத்தல் தொழிலையும், அமைந்த கரத்தினால் காத்தல் தொழிலையும், மழு தாங்கிய கரத்தினால் அழித்தல் தொழிலையும், முயலகன் முதுகில் ஊன்றிய திருப்பாதங்களால் மறைத்தல் தொழிலையும், அனவரத நடனம் புரியும் அடிப் பாதத்தினால் அருளல் தொழிலையும் நிகழ்த்துகின்றார் என்று தொன்மங்கள் கூறுகின்றன..

வழிபாடு

சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத்தில் சிவபெருமான் எப்பொழுதும் ஆனந்த தாண்டவம் ஆடிகொண்டிருப்பதாக ஐதீகம். இங்கு இறைவன் அம்பலக் கூத்தன் என்றும், கூத்தபிரான் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி சிவகாம சுந்தரி. கவிகள் இயற்றுவதற்கும், வாதப் போர் புரிவதற்கும், தடைபெற்ற திருவிழாக்கள் தடையின்றி நடைபெறுவதற்கும் இவரை வணங்கினால் நற்பலன் உண்டாகும் என்பது ஐதீகம். சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு திங்கள், வியாழக்கிழமைகளில் முல்லைப்பூ அர்ச்சனையும், வெண்பொங்கல் நைவேத்தியமும் செய்வதால் பகை இணக்கமாக மாறும் என்றும் அன்ன அபிஷேகம் அரச பதவியைத் தரும் எனவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.

உசாத்துணை


✅Finalised Page