அ. அறிவுநம்பி: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 12: | Line 12: | ||
== தனி வாழ்க்கை == | == தனி வாழ்க்கை == | ||
முனைவர் அ. அறிவுநம்பியின் முன்னோர்கள் இராமநாதபுரம் அரண்மனையில் அரசவைப் புலவராக இருந்தனர். இவர்கள் சேதுபதியின் மேல் பல சிற்றிலக்கியங்களை எழுதினர். சரவணப் பெருமாள் என்ற பெயரில் தனிப்பாடல் திரட்டில் பல பாடல்கள் உள்ளன. விறலிவிடு தூது, கந்த வருக்கச் சந்த வெண்பா முதலியன சேதுபதி மன்னர் மேல் இவர் | முனைவர் அ. அறிவுநம்பியின் முன்னோர்கள் இராமநாதபுரம் அரண்மனையில் அரசவைப் புலவராக இருந்தனர். இவர்கள் சேதுபதியின் மேல் பல சிற்றிலக்கியங்களை எழுதினர். சரவணப் பெருமாள் என்ற பெயரில் தனிப்பாடல் திரட்டில் பல பாடல்கள் உள்ளன. விறலிவிடு தூது, கந்த வருக்கச் சந்த வெண்பா முதலியன சேதுபதி மன்னர் மேல் இவர் இயற்றியவையாகும். | ||
புலவர் சரவணப்பெருமாள் அறிவுநம்பியின் கொள்ளு தாத்தா. புலவர் சரவணப்பெருமாளின் மகன் பூவார்சாமி அவரது மகன் பேராசிரியர் பூ. அமிர்தலிங்கனார். அமிர்தலிங்கனார் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். வள்ளுவர் கண்ட உயிரினங்கள், கம்பன் கவியரங்கில் மலரமுதன், கருத்தும் கற்பனையும் போன்ற நூல்களை பூ. அமிர்தலிங்கனார் எழுதியுள்ளார். | புலவர் சரவணப்பெருமாள் அறிவுநம்பியின் கொள்ளு தாத்தா. புலவர் சரவணப்பெருமாளின் மகன் பூவார்சாமி அவரது மகன் பேராசிரியர் பூ. அமிர்தலிங்கனார். அமிர்தலிங்கனார் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். வள்ளுவர் கண்ட உயிரினங்கள், கம்பன் கவியரங்கில் மலரமுதன், கருத்தும் கற்பனையும் போன்ற நூல்களை பூ. அமிர்தலிங்கனார் எழுதியுள்ளார். |
Revision as of 23:58, 20 April 2022
அறிவுநம்பி (நவம்பர் 10,1952 - ஏப்ரல் 09, 2017) தமிழ்த்துறைப் பேராசிரியர், ஆய்வாளர்.
பிறப்பு, கல்வி
முனைவர் அ. அறிவுநம்பி நவம்பர் 10,1952 அன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பேராசிரியர் பூ. அமிர்தலிங்கனார், இராமலட்சுமி அம்மையார் இருவருக்கும் மகனாகப் பிறந்தார்.
காரைக்குடி சுபாஷ்நகர் நகராட்சிப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கற்றார். உயர்நிலைப் பள்ளியில் கவியரசு முடியரசனார், புலவர் ஆ. பழனி ஆகியோர் அறிவுநம்பியின் ஆசிரியராக இருந்தனர்.
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் புகுமுக வகுப்பையும், இளங்கலை அறிவியில் (கணக்கு) பட்டத்தையும் பெற்றார். அதன் பின் 1976-ஆம் ஆண்டு முதுகலையில் தமிழ் இலக்கியம் பயின்று பட்டம் பெற்றார்.
பின்னர் முனைவர் பட்டத்திற்குத் தமிழகத்தில் நடைபெறும் தெருக்கூத்துகள் பற்றிய தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 1980-ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
முனைவர் அ. அறிவுநம்பியின் முன்னோர்கள் இராமநாதபுரம் அரண்மனையில் அரசவைப் புலவராக இருந்தனர். இவர்கள் சேதுபதியின் மேல் பல சிற்றிலக்கியங்களை எழுதினர். சரவணப் பெருமாள் என்ற பெயரில் தனிப்பாடல் திரட்டில் பல பாடல்கள் உள்ளன. விறலிவிடு தூது, கந்த வருக்கச் சந்த வெண்பா முதலியன சேதுபதி மன்னர் மேல் இவர் இயற்றியவையாகும்.
புலவர் சரவணப்பெருமாள் அறிவுநம்பியின் கொள்ளு தாத்தா. புலவர் சரவணப்பெருமாளின் மகன் பூவார்சாமி அவரது மகன் பேராசிரியர் பூ. அமிர்தலிங்கனார். அமிர்தலிங்கனார் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். வள்ளுவர் கண்ட உயிரினங்கள், கம்பன் கவியரங்கில் மலரமுதன், கருத்தும் கற்பனையும் போன்ற நூல்களை பூ. அமிர்தலிங்கனார் எழுதியுள்ளார்.
கல்விப்பணி
அ. அறிவுநம்பி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 1981 முதல் 1986 வரை தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1986 - 1997 ஆண்டுகளில் புதுவைப் பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன் பின் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், துறைத்தலைவர், இயக்குநர், முதன்மையாளர் (Dean) என வெவ்வேறு பணிகளைச் செய்து ஓய்வு பெற்றார்.
விருதுகள்
- கம்பவாணர் பரிசில்
- சிறந்த உலக மாந்தன் விருது (1999)
- தொல்காப்பியர் விருது (புதுச்சேரி அரசு)
- இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக தமிழ்மாமணி விருது
நூல்கள்
- கூத்தும் சிலம்பும் (1977)
- தமிழகத்தில் தெருக்கூத்து (1986)
- நாட்டுப்புறக் களங்கள் (1989)
- தமிழரின் வழிபாட்டுச் சிந்தனைகள் (1990)
- தமிழர் மறந்த தமிழ் மரபுகள் (1991)
- பாவேந்தரின் பன்முகங்கள் (1992)
- தமிழரின் தெய்வ நெறிச் சிந்தனைகள் (1993)
- இலக்கிய வித்தகங்கள் (1994)
- தமிழ் வளர்ச்சி சிக்கல்களும் தீர்வுகளும் (1995)
- வளர்தமிழ்க் களங்கள் (1996)
- கம்பரின் அறிவியல் (1997)
- பல்துறைத் தமிழ் (1998)
- கம்பர்காட்டும் மள்ளர் மாண்பு (1999)
- புள்ளிகள் (கவிதை நூல், 2000)
- இலக்கியங்களும் உத்திகளும் (2001)
- தமிழியல் சிந்தனைகள் (2002)
- செந்தமிழ்ச் செம்மல்கள் (2003)
- இலக்கிய நோக்குகள் (2004)
- சிலம்பின் எதிர்க்குரல் (2005)
- பொருள் புதிது (2006)
- இலக்கியத் தளங்களில் (2007)
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.