first review completed

குமாரசுவாமி முதலியார்: Difference between revisions

From Tamil Wiki
(Added display-text to hyperlinks)
Line 12: Line 12:
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். கம்பராமாயணத்திற்கு உரை கூற வல்லவர். வித்தியா தர்ப்பணம் எனும் பத்திரிகையிலே கல்வி குறித்துச் செய்யுள் நடையில் ஆக்கங்களை எழுதினார். தமது சொந்தச் செலவில் கலாசாலை ஒன்றையும் நிறுவினார்.  
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். கம்பராமாயணத்திற்கு உரை கூற வல்லவர். வித்தியா தர்ப்பணம் எனும் பத்திரிகையிலே கல்வி குறித்துச் செய்யுள் நடையில் ஆக்கங்களை எழுதினார். தமது சொந்தச் செலவில் கலாசாலை ஒன்றையும் நிறுவினார்.  


இவரது தனிப் பாடல்கள் பல உதயதாரகை பத்திரிகையில் வெளிவந்தது. அமெரிக்க மிசன் மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிறீனைப் புகழந்தும், கொள்ளை நோயால் இறந்தவர்களைப் பரிந்தும் பாடல்கள் எழுதினார். கந்தவனநாதர் ஊஞ்சல், மூளாய்ச் சித்திவிநாயகர் ஊஞ்சல், நல்லைக் கலித்துறை, திருவிற் சுப்பிரமணியர் பதிகம், அருளம்பலக் கோவை போன்ற சிற்றிலக்கிய நூல்களைப் பாடினார். இந்திரக்குமார் நாடகம் என்ற நூலை எழுதினார். நோய்க்கிரங்கல் நூல்கள் எழுதினார்.
இவரது தனிப் பாடல்கள் பல உதயதாரகை பத்திரிகையில் வெளிவந்தது. அமேரிக்கன் மிஷன் மருத்துவர் [[சாமுவேல் கிரீன்|சாமுவேல் கிரீ]]னைப் புகழந்தும், கொள்ளை நோயால் இறந்தவர்களைப் பரிந்தும் பாடல்கள் எழுதினார். கந்தவனநாதர் ஊஞ்சல், மூளாய்ச் சித்திவிநாயகர் ஊஞ்சல், நல்லைக் கலித்துறை, திருவிற் சுப்பிரமணியர் பதிகம், அருளம்பலக் கோவை போன்ற சிற்றிலக்கிய நூல்களைப் பாடினார். இந்திரக்குமார் நாடகம் என்ற நூலை எழுதினார். நோய்க்கிரங்கல் நூல்கள் எழுதினார்.


== நூல்கள் பட்டியல் ==
== நூல்கள் பட்டியல் ==

Revision as of 14:44, 18 April 2022

குமாரசுவாமி முதலியார் (ஆகஸ்ட் 11, 1791 - டிசம்பர் 30, 1874) இலங்கை தமிழ், சைவ அறிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர் ஈழத்து சிற்றிலக்கியப் புலவர் என பன்முகம் கொண்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் வல்லுவெட்டி எனும் ஊரில் 1791-ல் பூபதி முதலியாருக்கும், வள்ளியம்மைக்கும் மகனாக குமாரசுவாமி பிறந்தார்.

ச. குமாரசாமிப் புலவரின் மருமகன். தாய்மாமனாகிய முத்துகுமாரு முதலியார் ஆசிரியராக விளங்கினார். இளமையில் இசை, தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.

தனி வாழ்க்கை

புண்ணியமணியத்தின் புதல்வியாகிய சிவகாமிப் பிள்ளையை மணந்தார். சபாபதி மற்றும் கதிரைவேற்பிள்ளை என இரு மகன்கள் பிறந்தனர். மதுரை தமிழ்ச் சங்கத்தின் தமிழ் அகராதியை கதிரைவேற்பிள்ளை இயற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். கம்பராமாயணத்திற்கு உரை கூற வல்லவர். வித்தியா தர்ப்பணம் எனும் பத்திரிகையிலே கல்வி குறித்துச் செய்யுள் நடையில் ஆக்கங்களை எழுதினார். தமது சொந்தச் செலவில் கலாசாலை ஒன்றையும் நிறுவினார்.

இவரது தனிப் பாடல்கள் பல உதயதாரகை பத்திரிகையில் வெளிவந்தது. அமேரிக்கன் மிஷன் மருத்துவர் சாமுவேல் கிரீனைப் புகழந்தும், கொள்ளை நோயால் இறந்தவர்களைப் பரிந்தும் பாடல்கள் எழுதினார். கந்தவனநாதர் ஊஞ்சல், மூளாய்ச் சித்திவிநாயகர் ஊஞ்சல், நல்லைக் கலித்துறை, திருவிற் சுப்பிரமணியர் பதிகம், அருளம்பலக் கோவை போன்ற சிற்றிலக்கிய நூல்களைப் பாடினார். இந்திரக்குமார் நாடகம் என்ற நூலை எழுதினார். நோய்க்கிரங்கல் நூல்கள் எழுதினார்.

நூல்கள் பட்டியல்

ஊசல்
  • கந்தவனநாதர் ஊஞ்சல்
  • மூளாய்ச் சித்திவிநாயகர் ஊஞ்சல்
கலித்துறை
  • நல்லைக் கலித்துறை
கோவை
  • அருளம்பலக் கோவை
பதிகம்
  • திருவிற் சுப்பிரமணியர் பதிகம்
நாடகம்
  • இந்திரக்குமார் நாடகம்
அவரைப்பற்றிய நூல்கள்
  • குமாரசுவாமி முதலியார் கவித்திரட்டு 1887
  • குமாரசுவாமி முதலியாரின் செய்யுள்கள் 1887

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.