standardised

பதினாலு நாட்கள்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
No edit summary
Line 19: Line 19:
* [http://veeduthirumbal.blogspot.com/2012/06/14.html வீடு திரும்பல்: விக்கி டோனாரும், சுஜாதாவின் 14 நாட்களும்]
* [http://veeduthirumbal.blogspot.com/2012/06/14.html வீடு திரும்பல்: விக்கி டோனாரும், சுஜாதாவின் 14 நாட்களும்]


{{ready for review}}
{{Standardised}}
 


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 09:16, 18 April 2022

பதிநாலு நாட்கள்

பதிநாலு நாட்கள் (1972) சுஜாதா எழுதிய நாவல். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் 1971-ல் நிகழ்ந்த இரண்டாவது போரின் பின்னணியில் எழுதப்பட்டது

எழுத்து, வெளியீடு

1971-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிகழ்ந்த போரின் சித்திரத்தை சுஜாதா 1972-ல் குமுதம் இதழில் தொடராக எழுதினார். பின்னர் நூல்வடிவம் பெற்றது

கதைச்சுருக்கம்

இந்தியாவின் விமானியான ஸ்க்வாட்ரன்லீடர் குமார் போரின்போது விமானம் தாக்கப்பட்டு கிழக்கு பாகிஸ்தானில் பாரச்சூட்டில் இறங்குகிறான். அவனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்கிறது. பாகிஸ்தான் காப்டன் சுல்தான் அவனை சித்திரவதை செய்கிறான். போர் நடந்த பதிநான்கு நாட்கள் குமார் சிறையிலிருக்கிறான். வயிற்றில் சுடப்பட்ட குமாரை இந்திய ராணுவம் மீட்கிறது. பாகிஸ்தானி காப்டன் சுல்தான் முக்திபாகினி படைவீரர்கள் கொல்கிறார்கள்.

இலக்கிய இடம்

தமிழிலக்கியத்தில் விமானப்படை சார்ந்து எழுதப்பட்ட முதல் நாவல் இது. சுஜாதா விமானப்பொறியாளராக பணியாற்றியவர் என்பதனால் சரியான தரவுகள் மற்றும் வர்ணனைகளுடன் இந்த நாவலை எழுதினார். இந்தியா -பாகிஸ்தான் போரின் பின்னணியில் எழுதப்பட்ட ஒரேநாவலும் இதுதான்

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.