under review

கு. கதிரவேற்பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom)
m (Reviewed by Je)
Line 32: Line 32:
{{ready for review}}
{{ready for review}}


{{finalised}}
 


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:37, 17 April 2022

கு. கதிரவேற்பிள்ளை

கு. கதிரவேற்பிள்ளை (வைமன் கு. கதிரவேற்பிள்ளை) (1829 - 14 ஏப்ரல், 1904) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், பத்திரிகாசிரியரும். தமிழ்ச் சொல் அகராதி தொகுத்தவர்.

பிறப்பு, கல்வி

கதிரைவேற்பிள்ளை யாழ்ப்பாண மாவட்டம், உடுப்பிட்டியைச் சேர்ந்த க. குமாரசுவாமி முதலியாருக்கும் வல்வெட்டித்துறை புண்ணியமூர்த்தியின் மகள் சிவகாமிக்கும் மகனாக 1829இல் வல்வெட்டித்துறையில் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் சபாபதி முதலியார், மீனாட்சிப்பிள்ளை. தாய்வழிப்பேரன் புண்ணியமூர்த்தி மணியகாரரால் ஆரம்பிக்கப்பட்ட திண்ணைப் பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். இளமையிலேயே ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை பெற்றார். 1841இல் வட்டுக்கோட்டை செமினறியில் சேர்ந்து உயர்கல்வி கற்றார். செமினறியில் தனது ஆசிரியராக இருந்த வைமனின் பெயரை தனது முதல் பெயராக சேர்த்துக் கொண்டதால் வைமன் கு. கதிரவேற்பிள்ளை என அழைக்கப்பட்டார்.

தனிவாழ்க்கை

கதிரவேற்பிள்ளை 1862இல் உடுப்பிட்டியைச் சேர்ந்த முருகேசர் என்பவரின் மகளை மணந்தார். இவர்களுக்கு குமாரசாமி எனும் மகனும், திருத்தாட்சிப்பிள்ளை, பூம்பாவைப்பிள்ளை, சகுந்தலைப்பிள்ளை என்னும் மூன்று மகள்களும் பிறந்தனர். மகன் குமாரசாமி இளம் வயதிலேயே காலமானார். 1872 ஆம் ஆண்டில் மனைவி காலமானார். 1874இல் கோப்பாய் கதிரேசு என்பவரின் மகள் சிவகாமிப்பிள்ளையை திருமணம் புரிந்தார். சிவகாமியின் சகோதரர் சுப்பிரமணியம் என்பவருக்கு தனது தங்கை மீனாட்சியைத் திருமணம் செய்து கொடுத்தார். சுப்பிரமணியம்-மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் இந்துபோர்ட் சு. இராசரத்தினம். கதிரவேற்பிள்ளைக்கும் சிவகாமிப்பிள்ளைக்கும் பிறந்தவர் க. பாலசிங்கம் (1876-1952). இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கையின் நிறைவேற்றுப் பேரவையின் உறுப்பினராக இருந்தார்.

ஆசிரியப் பணி

கதிரவேற்பிள்ளை 1848-1851இல் வட்டுக்கோட்டை செமினரியில் ஆசிரியப்பணியில் சேர்ந்தார். ஆகஸ்ட் 1, 1851இல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உவெசுலியன் கல்லூரி ஆசிரியராகச் சேர்ந்தார். மத்திய கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மே 6, 1853இல் ’லிட்ரரி மிரர்’ (Literary Mirror) என்னும் பத்திரிகையை ஆரம்பித்து நடத்தி வந்தார். ஏப்ரல் 24, 1855இல் ஆசிரியத் தொழிலிலிருந்து விலகிக் கொண்டு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார்.

வழக்கறிஞர் பணி

லிட்ரறி மிரர் பத்திரிகை மூலம் கதிரவேற்பிள்ளையின் திறமையை அறிந்து கொண்ட பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி லீச்சிங் என்பவர் அவரை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பணியில் அமர்த்தினார். சட்டத்துறையில் மேலும் கற்க விரும்பி கொழும்பில் இருந்த தோமசு ட்றஸ்ட் என்பவரிடம் பயிற்சியாளராக சேர்ந்தார். மே 5, 1858இல் கொழும்பில் சட்ட அறிஞராக சத்தியப்பிரமாணம் எடுத்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். பெப்ரவரி 6, 1863இல் "சிலோன் பேட்ரியாட்" Ceylon Patriot, இலங்காபிமானி என்ற பெயரில் ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார். இந்து நாகரிகம், தமிழரின் சுதேச வைத்தியம் என பல துறைகளிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் செய்திகளை வெளியிட்டார்.

நீதிபதிப் பணி

இலங்கையின் பிரித்தானிய ஆளுனராக இருந்த சேர் வில்லியம் கிரெகரி இவரை 1872 மே 21 அன்று ஊர்காவற்துறை நீதிபதியாக நியமித்தார். 1884 ஆம் ஆண்டில் இலங்கை குடியுரிமை சேவையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பருத்தித்துறை, மல்லாகம் சாவகச்சேரி ஆகிய நகரங்களில் காவல்துறை நீதிபதியாகவும், யாழ்ப்பாணம் உயர்நீதிமனற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். கதிரவேற்பிள்ளை 1898 நவம்பரில் தனது அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

கதிரைவேற்பிள்ளை நீதிபதியாகப் பதவியில் இருந்த காலத்தில் தமிழ் மொழியில் பேரகராதியைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டார். சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் இவருக்கு சொற்குறிப்புகள் உதவினார். உடுப்பிட்டி ஆறுமுகம் பிள்ளை, ஊரெழு சு. சரவணமுத்துப் புலவர் ஆகியோரும் அகராதி ஆக்கத்திற்கு உதவினர். 1904இல் வண்ணார்பண்ணை வி. சபாபதி ஐயரின் அச்சியந்திரசாலையில் 328 பக்கங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்ட தமிழ்ச் சொல் அகராதி அகர வரிசை வரையுமே கொண்டிருந்தது. பேரகராதியைத் தொகுத்து முடிப்பதற்கிடையில் அவர் காலமாகிவிடவே, அவரது மகன் க. பாலசிங்கம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக் கொண்டு பேரகராதியை முழுமையாக்கி வெளியிட்டார். 344 நூல்களிலிருந்து இவ் அகராதிக்கு மேற்கோள்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கதிரைவேற்பிள்ளை "தர்க்க சூடாமணி" என்ற நூலை 1862இல் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார். இது மின்னூலாக உவேசா நூலகத்தில் கிடைக்கிறது.

புகழ்

யாழ்ப்பாண உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய காலத்தில் கதிரவேற்பிள்ளை 1885 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரில் குடியேறினார். நல்லூரில் உள்ள வீடொன்றை விலைக்கு வாங்கினார். இவர் வாழ்ந்த வீடு "வைமன் வீடு" எனவும், வீடு அமைந்திருந்த வீதி "வைமன் வீதி" எனவும் பெயர் பெற்றது. இப்பெயர் இன்றும் வழக்கில் உள்ளது.

நூல் பட்டியல்

  • தர்க்க சூடாமணி (1862)
  • தமிழ்ச் சொல் பேரகராதி

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.