நெறிசூடி: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
; Added info on Finalised date |
||
| Line 80: | Line 80: | ||
*[https://www.tamilvu.org/library/nationalized/pdf/49-na.ra.nachiyappan/nachiyappanpaatalkalv-1.pdf நாச்சியப்பன் பாடல்கள்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்] | *[https://www.tamilvu.org/library/nationalized/pdf/49-na.ra.nachiyappan/nachiyappanpaatalkalv-1.pdf நாச்சியப்பன் பாடல்கள்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|19-Jul-2024, 18:29:49 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 01:04, 20 July 2024

நெறிசூடி (1980) நீதி நூல்களுள் ஒன்று. ஔவையாரின் ஆத்திசூடி, பாரதியாரின் புதிய ஆத்திசூடி போன்ற நூல்களை முன்னோடியாகக் கொண்டு இயற்றப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் நாரா. நாச்சியப்பன்.
வெளியீடு
நெறிசூடி நூல், நாரா. நாச்சியப்பன் இயற்றிய பாடல்களின் தொகுப்பான ’நாச்சியப்பன் பாடல்கள்’ நூலில் இடம்பெற்றது. தமிழாலயம் பதிப்பகம் இந்நூலை ஆகஸ்ட், 1980-ல் வெளியிட்டது. நா. செல்வம், நெறிசூடி நூலின் பதிப்பாசிரியர்.
நூல் அமைப்பு
நெறிசூடி நூலில், ஓரடியால் அமைந்த 105 பாடல் வரிகள் அமைந்துள்ளன. நூலின் தொடக்கத்தில் கீழ்க்காணும் பாடல் வரிகள் இடம்பெற்றன.
- குறையின்றி வாழக் குவலயத்தில் நல்ல நெறிசூடி நிற்றல் இனிது.
- கறையின்றி வாழக் கவலையற நல்ல நெறிசூடி நிற்றல் இனிது.
- துறைதோறும் இன்பம் துலங்கிடவே நல்ல நெறிசூடி நிற்றல் இனிது
நோக்கம்
நெறிசூடி நூலின் நோக்கமாக நா.ரா. நாச்சியப்பன்,
ஆத்தி சூடி அருளிய ஒளவையைப்
போற்றி இங்கொரு புதுநூல் செய்தேன்
செந்தமிழ்ப் பாட்டி செய்த திருநூலுக்கு
இந்தநூல் எவ்வாறு இணை யாகும் என
அறியேன் ஆயினும் ஆவலே கொண்ட
குறியாய் இயற்றிக் கொடுத்து விட்டேன்
பழையன கழிந்து புதியன புகுந்து
விளைவன அனைத்தும் வேறு வேறாய்
மாறினும் சட்டமும் நாட்டு வழக்கும்
ஏறு மாறாய் இருப்பினும் நெறிமுறை
என்றும் மாறுவ தில்லை என்றே
குன்றில் ஏறி நின்றுகூ றுவனே!
- என்று குறிப்பிட்டார்.
உள்ளடக்கம்
நெறிசூடி நூல் ஆகரவரிசையில் 'அன்பு நெறி நில், ஆக்கம் பெருக்கு, இனியவை பேசு, ஈயென வாழேல், உயர உழை' என்று அகர வரிசையில் தொடங்கி, 'கடல் கடந்துறவு கொள், ஙவ்வினம் போலிரேல், சட்டம் வகுத்து நில், ஞண்டுபோல் ஒளியேல்' எனத் தொடர்ந்து 'வெற்றி நாடு, வேலைக் கயரேல், வைர நெஞ்சு கொள்' என்ற வரிகளுடன் நிறைவுறுகிறது..
பாடல் நடை
நூல் வாழ்த்து
அன்னை அவளின் ஆத்தி சூடியைப்
பின்னும் விளக்கப் பிறந்த நூலென
இதனை அறிஞர் ஏற்றிடல் வேண்டும்
புதுமை ஈதெனப் போற்றி இளையரும்
நல்ல நெறியில் நாடொறும் பழகி
வல்லவ ராகிச் செந்தமிழ் நாட்டை
வையத் துயர்ந்த வழுவிலா நாடெனச்
செய்யத் துணிக! செழித்து வாழியவே!
கற்றவ ரோடு காது குளிரப்
பெற்றவர் தாமும் பேணி மகிழ்ந்து
நல்ல தமிழில் நாச்சி யப்பன் சொல்லிய
நன்னெறி சூடி விளங்கவே.
நீதி மொழிகள்
- கடமை தவறேல்
- காது குத்தேல்
- கிள்ளி மகிழேல்
- கீரன் உரங்கொள்
- குறிக்கோள் கொண்டுவாழ்
- கூற்றைப் புறங்கொள்
- கெலித்துப் பெருமை கொள்
- கேலிக் கிடங் கொடேல்
- மூத்தோர் சொற்கேள்
- மென்று உணவு கொள்
- மேடை பழகு
- மையிருட் டுலவேல்
- மொழி நலம் பேணு
- மோதி மகிழேல்
- மௌலியழகு செய்
- வலிவு பெருக்கு
- வாழும் நெறிகொள்
- விரைந்து செயல் முடி
- வேலைக் கயரேல்
- வைர நெஞ்சு கொள்
மதிப்பீடு
நெறிசூடி நூல் இளையோருக்கு நெறிகளைப் போதிக்கும் வகையில் இயற்றப்பட்டது. இருபத்தோராம் நூற்றாண்டில் தோன்றிய ஆத்திசூடி நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jul-2024, 18:29:49 IST