first review completed

சாம்ராஜ்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 19: Line 19:


== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
பகடியுடன் அரசியலைச் சொல்லும் கதைகளுக்காகவும் கவிதைகளுக்காகவும் சாம்ராஜ் அறியப்படுகிறார். பகடி என்பது இலக்கியத்தின் முதன்மையான கருவி என்று நம்புகிறார். ‘சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை’ என்று இசை குறிப்பிடுகிறார்.<ref>[[https://isaikarukkal.blogspot.com/2013/06/blog-post.html புரட்சி கேரளத்திலிருந்து    பாலக்காடு , ஆற்றுப்பாலம்  , உக்கடம் வழியே இருகூருக்கு  வந்துகொண்டிருக்கிறது]</ref>   
பகடியுடன் அரசியலைச் சொல்லும் கதைகளுக்காகவும் கவிதைகளுக்காகவும் சாம்ராஜ் அறியப்படுகிறார். பகடி என்பது இலக்கியத்தின் முதன்மையான கருவி என்று நம்புகிறார். ‘சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை’ என்று இசை குறிப்பிடுகிறார்.<ref>[https://isaikarukkal.blogspot.com/2013/06/blog-post.html புரட்சி கேரளத்திலிருந்து    பாலக்காடு , ஆற்றுப்பாலம்  , உக்கடம் வழியே இருகூருக்கு  வந்துகொண்டிருக்கிறது]</ref>   


== விவாதங்கள் ==
== விவாதங்கள் ==

Revision as of 13:44, 17 April 2022

சாம்ராஜ்

சாம்ராஜ் (எஸ். சாம்ராஜ்) (மே 26, 1972) தமிழில் கவிதைகள் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் சினிமா விமர்சனங்கள் எழுதிவரும் எழுத்தாளர். சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். அங்கதமும் பகடியும் கொண்ட கதைகளையும் கவிதைகளையும் எழுதுபவர்.

பிறப்பு, கல்வி

சாம்ராஜ் மே 26, 1972 அன்று மதுரையில் சோ.ரத்தினம், பங்கஜவள்ளி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப்பள்ளி (வடக்கு) சென்னை, மதுரை, தியாகராசர் நன்முறை மேல்நிலைப்பள்ளி, செளராஷ்டிரா மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்தார். சாம்ராஜ் இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்புகொண்டு செயலாற்றியிருக்கிறார்.

தனிவாழ்க்கை

ஜூலை 23, 2014 அன்று சரோஜாவை மணமுடித்தார். மகன் ஆரண்யா, மகள் டெசா.

இலக்கிய வாழ்க்கை

இவரது முதல் படைப்பான ’Saving Private Ryan-னும் இரண்டாம் உலகப் போரும்’ என்னும் சினிமா விமர்சனம் 1999-ஆம் ஆண்டில் மக்கள் தளத்தில் வெளியானது. ’என்றுதானே சொன்னார்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பு பரவலாக பேசப்பட்டது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு பட்டாளத்து வீடு. இத்தொகுப்பின் பத்து கதைகளுமே வாழ்வில் பெரும் இழப்பை சந்தித்தவர்கள் அல்லது வாழ்வையே தொலைத்தவர்கள் பற்றியது எனலாம். முற்றிலும் வெவ்வேறு ஊர்களை சேர்ந்த வெவ்வேறு மனிதர்களை பற்றிய கதைகள் என்றாலும் இந்த எல்லா கதைகளையும் இணைக்கிற ஒரு புள்ளியாக இழப்பு இருக்கிறது. இழப்பைப்பற்றி மட்டுமல்ல, இழப்புக்கு பின்னால், துயரங்களுக்கு அப்பால் தொடரும் வாழ்வை குறித்தும் பேசுகின்றன சாம்ராஜின் கதைகள்.

தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளென - தாஸ்தோய், தாஸ்தோவஸ்கி, ஆண்டன் செக்காவ் , கார்க்கி, புதுமைப்பித்தன், பா.சிங்காரம், அசோகமித்திரன், ஆ.முத்துலிங்கம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் ஆகியோரை குறிப்பிடுகிறார்.

திரைவாழ்க்கை

இயக்குநர் ராமிடம் தங்கமீன்கள் மற்றும் பேரன்பு திரைப்படங்களிலும், மலையாள திரைப்படம் ஒழிமுறியிலும் பணியாற்றியிருக்கிறார். மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள ‘’திருடன் மணியன் பிள்ளை’’ நூலை திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார். தற்போது இயக்குநர் மிஷ்கினுடன் பணியாற்றுகிறார்.

இலக்கிய இடம்

பகடியுடன் அரசியலைச் சொல்லும் கதைகளுக்காகவும் கவிதைகளுக்காகவும் சாம்ராஜ் அறியப்படுகிறார். பகடி என்பது இலக்கியத்தின் முதன்மையான கருவி என்று நம்புகிறார். ‘சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை’ என்று இசை குறிப்பிடுகிறார்.[1]

விவாதங்கள்

2015-ல் வெளியான ஒண்டிப்புலி என்னும் கவிதை விடுதலைப் புலிகளின் தலைவரை குறிக்கிறது என எண்ணிய தமிழ்த்தேசியர் சிலரால் கடுமையாக கண்டிக்கப்பட்டார்.

நூல்பட்டியல்

சிறுகதை தொகுப்பு
  • பட்டாளத்து வீடு - 2015, சந்தியா பதிப்பகம்
  • ஜார் ஒழிக - 2018, நற்றிணை பதிப்பகம்
கவிதை தொகுப்பு
  • என்று தானே சொன்னார்கள் - 2013, சந்தியா பதிப்பகம்
கட்டுரைத் தொகுப்பு
  • மூவந்தியில் சூழும் மர்மம் - 2022, சந்தியா பதிப்பகம்
  • நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன் - 2016, நற்றிணை பதிப்பகம்

விருதுகள்

  • 2013-ஆம் ஆண்டு ’’என்று தானே சொன்னார்கள்’’ கவிதை தொகுப்பிற்காக ராஜமார்த்தாண்டன் விருது பெற்றார்.

உசாத்துணை

இணைப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.