புகழ்சூடி: Difference between revisions

From Tamil Wiki
Jayashree (talk | contribs)
No edit summary
Jayashree (talk | contribs)
No edit summary
Line 6: Line 6:

== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
'புகழ்சூடி'  நூலின் ஆசிரியர் தமிழ்ப் பெரியசாமி. திண்டுக்கல்லில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். நல்லாசிரியர் விருதும், தமிழ்ச்செம்மல் விருதும் பெற்றவர்.
'புகழ்சூடி'  நூலின் ஆசிரியர் [[தமிழ்ப் பெரியசாமி]]. திண்டுக்கல்லில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். நல்லாசிரியர் விருதும், தமிழ்ச்செம்மல் விருதும் பெற்றவர்.

== நூல் அமைப்பு ==
== நூல் அமைப்பு ==
புகழ்சூடி நூலில் ஓரடிப் பாடல்களாக 96 பாக்கள் இடம் பெற்றன. நூல் பற்றி ஆசிரியர் தமிழ்ப் பெரியசாமி, நூலின் முகவுரையில் “புகழ்சூடி என்னும் நூல் ஆத்திசூடிப் பாவடியில் அமைந்த அறிவுரை நூல். இதில் காலத்திற்கேற்ப புதிய கருத்துக்கள் பலவும் வலியுறுத்தப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.  

[[File:Tami Periyasami.jpg|thumb|தமிழ்ப்பெரியசாமி]]
[[File:Tami Periyasami.jpg|thumb|தமிழ்ப்பெரியசாமி]]
== ஆசிரியர் குறிப்பு ==
புகழ்சூடி நூலை இயற்றிய தமிழ்ப் பெரியசாமி, கவிஞர். ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ்நாடு வளர்ச்சித் துறையின் சார்பில் பல்லாயிரக்கணக்கான அரசுப் பணியாளர்களுக்கு மொழிப் பயிற்சி அளித்தார். தமிழ்நாட்டுப் பாட நூல் கழகத்தின் நூலாசிரியர் குழுவில் இடம் பெற்று ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாட நூல்களை உருவாக்கினார். மதுரை வானொலி நிலையத்தின் நாடகக் கலைஞர், திண்டுக்கல் கல்விச் சிந்தனையாளர் கழகத்தின் அமைப்பாளர். தமிழக அரசின் 'டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது', ஈரோடு தமிழ்ச் சங்கம் வழங்கிய 'சாதனையாளர் விருது', திண்டுக்கல் அரிமா சங்கம் வழங்கிய 'மனித நேயச் செம்மல் விருது' உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார். '[[திருக்குறள்]] புதையல்', 'திருக்குறள் உரை', '[[குண்டலகேசி]] காப்பிய நாடகம்', '[[தமிழ் விடு தூது]] உரை', '[[நந்திக் கலம்பகம்]] உரை', 'பிழையில்லாத் தமிழறிவோம்' போன்றவை தமிழ்ப் பெரியசாமி எழுதிய பிறநூல்கள். யூ ட்யூப் காணொளி மூலம் இலக்கண, இலக்கியப் பாடங்களையும், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயிற்சியும் அளித்து வருகிறார்.

== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==

Revision as of 00:19, 16 July 2024

புகழ்சூடி

புகழ்சூடி (2016) ஔவையாரின் ஆத்திசூடியை அடியொற்றி இயற்றப்பட்ட நீதி நூல். இதனை இயற்றியவர் கவிஞர் தமிழ்ப் பெரியசாமி.

வெளியீடு

புகழ்சூடி நூலை ஏகம் பதிப்பகம், 2016-ல் வெளியிட்டது.

ஆசிரியர்

'புகழ்சூடி' நூலின் ஆசிரியர் தமிழ்ப் பெரியசாமி. திண்டுக்கல்லில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். நல்லாசிரியர் விருதும், தமிழ்ச்செம்மல் விருதும் பெற்றவர்.

நூல் அமைப்பு

புகழ்சூடி நூலில் ஓரடிப் பாடல்களாக 96 பாக்கள் இடம் பெற்றன. நூல் பற்றி ஆசிரியர் தமிழ்ப் பெரியசாமி, நூலின் முகவுரையில் “புகழ்சூடி என்னும் நூல் ஆத்திசூடிப் பாவடியில் அமைந்த அறிவுரை நூல். இதில் காலத்திற்கேற்ப புதிய கருத்துக்கள் பலவும் வலியுறுத்தப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

தமிழ்ப்பெரியசாமி

உள்ளடக்கம்

புகழ்சூடி நூல், ‘அரிமாத் திறன் கொள்' என்று அகர வரிசையில் தொடங்கி ’'வையம் உனதறி' என்ற வகர வரிசை அடியுடன் நிறைவடைகிறது.

பாடல்

அரிமாத் திறன் கொள்

கணிப்பொறி கற்றிடு

தூக்கம் அளவு செய்

நேற்றிலும் உயர்வாய்

நோக்கம் உயர்வு செய்

பிழை கண்டு ஆர்த்தெழு

பூக்களைப் படித்தல் செய்

பெற்றோரைப் பேண்

மொழி பல பயில்

விதியென ஒடுங்கேல்

வெற்றியில் பணிவு கொள்

வையம் உனதறி

மதிப்பீடு

புகழ்சூடி நூல் ஆத்திசூடி, புதிய ஆத்திசூடி வரிசையில் சிறார்களுக்கு, இளையோர்களுக்கு அறிவுரை கூறும் அற நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.