திருமலை சக்கையா கவுடர்: Difference between revisions
(Created page with "திருமலை சக்கையா கவுடர் (பொ.யு. 1846 - 1917) தமிழ்ப்புலவர், கவிஞர், சிற்றிலக்கியப்புலவர், கட்டுரையாளர், தமிழாசிரியர் என பன்முகம் கொண்டவர். ’நரகவனம் நரக வனம்’ முக்கியமான தனிப்பாடல் தொகு...") |
|||
Line 5: | Line 5: | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
கன்னட மொழிபேசும் ஒக்கலிகக் கவுடர் வரிசையில் தமிழாசிரியராகவும், கவிஞராகவும் | கன்னட மொழிபேசும் ஒக்கலிகக் கவுடர் வரிசையில் தமிழாசிரியராகவும், கவிஞராகவும் இருந்தார். செய்யுள்கள் பல இயற்றினார். தனிப்பாடலகள் பல எழுதினார். தனிப்பாடல்கள் தொகுப்பப்பட்டு ’நரகவனம் நரக வனம்’ என்ற தொகுப்பாக வந்தது. சித்தி விநாயகர், காமாட்சியம்மன் முதலிய தெய்வங்கள் மீது பதிகங்கள் பாடினார். உரைநடையில் ’கர்வகான குடாரி’ எனும் புனைந்துரைக் கதையை எழுதினார். சித்திரகவிகள் பல இயற்றியதால் ’சித்திரக்கவிப்புலவர்’ என்றழைக்கப்பட்டார். லோகோபகாரி, தட்சிண தீபம், மாகவிகடதூதன் ஆகிய பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதினார். | ||
பி.டி. ராஜனுடைய பாட்டனார் தியகராஜ முதலியார் தனது பாளையம் இல்லத்தில் பேரையூர்ப் புலவர் மீனாட்சி சுந்தரக் கவிராயர் கொண்டு அட்டாவதானம் நடைபெறச் செய்ததை சிலேடைப்பாட்டாகப் பாடினார். தன் பெயரை இறுதி அடியாகக் கொண்டு விற்பூட்டு வெண்பா பாடினார். | பி.டி. ராஜனுடைய பாட்டனார் தியகராஜ முதலியார் தனது பாளையம் இல்லத்தில் பேரையூர்ப் புலவர் மீனாட்சி சுந்தரக் கவிராயர் கொண்டு அட்டாவதானம் நடைபெறச் செய்ததை சிலேடைப்பாட்டாகப் பாடினார். தன் பெயரை இறுதி அடியாகக் கொண்டு விற்பூட்டு வெண்பா பாடினார். |
Revision as of 18:20, 16 April 2022
திருமலை சக்கையா கவுடர் (பொ.யு. 1846 - 1917) தமிழ்ப்புலவர், கவிஞர், சிற்றிலக்கியப்புலவர், கட்டுரையாளர், தமிழாசிரியர் என பன்முகம் கொண்டவர். ’நரகவனம் நரக வனம்’ முக்கியமான தனிப்பாடல் தொகுப்பு நூல்.
வாழ்க்கைக் குறிப்பு
திருமலை சக்கையா கவுடர் கோம்பை ஜமீன் மரபில் பொ.யு. 1846இல் கன்னப்ப கவுடருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வி பயின்றார். தமிழ் நூல்கள் பல கற்றார்.
இலக்கிய வாழ்க்கை
கன்னட மொழிபேசும் ஒக்கலிகக் கவுடர் வரிசையில் தமிழாசிரியராகவும், கவிஞராகவும் இருந்தார். செய்யுள்கள் பல இயற்றினார். தனிப்பாடலகள் பல எழுதினார். தனிப்பாடல்கள் தொகுப்பப்பட்டு ’நரகவனம் நரக வனம்’ என்ற தொகுப்பாக வந்தது. சித்தி விநாயகர், காமாட்சியம்மன் முதலிய தெய்வங்கள் மீது பதிகங்கள் பாடினார். உரைநடையில் ’கர்வகான குடாரி’ எனும் புனைந்துரைக் கதையை எழுதினார். சித்திரகவிகள் பல இயற்றியதால் ’சித்திரக்கவிப்புலவர்’ என்றழைக்கப்பட்டார். லோகோபகாரி, தட்சிண தீபம், மாகவிகடதூதன் ஆகிய பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதினார்.
பி.டி. ராஜனுடைய பாட்டனார் தியகராஜ முதலியார் தனது பாளையம் இல்லத்தில் பேரையூர்ப் புலவர் மீனாட்சி சுந்தரக் கவிராயர் கொண்டு அட்டாவதானம் நடைபெறச் செய்ததை சிலேடைப்பாட்டாகப் பாடினார். தன் பெயரை இறுதி அடியாகக் கொண்டு விற்பூட்டு வெண்பா பாடினார்.
இலக்கிய நண்பர்கள்
- அரசஞ் சண்முகனார்
- கந்தசாமிக் கவிராயர்
- ச. திருமலைவேற்கவிராயர்
- பி. பழனிச்சாமி ஆசாரியார்
மறைவு
திருமலை சக்கையா கவுடர் பொ.யு.1917இல் காலமானார்.
நூல் பட்டியல்
- சித்தி விநாயகர் பதிகம்
- மாவூற்று வேலப்பர் பதிகம்
- காமாட்சியம்மன் பதிகம்
- சபாநாதர் பதிகம்
- மல்லிங்கநாதர் சிலேடைப் பதிகம்
- சிவபஜனைக் கீர்த்தனைகள்
- சிவபிரான்யமகவந்தாதி
- மாலைமாற்று
- சித்திரகவிகள்
- அரிச்சந்திர வெண்பா
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.