தினபூமி: Difference between revisions
No edit summary |
(Test change for Bot) |
||
| Line 20: | Line 20: | ||
== மதிப்பீடு == | == மதிப்பீடு == | ||
மதுரையில் தொடங்கி குறுகிய காலத்தில் பரவலான வாசகப் பரப்பைப் பெற்ற இதழ் தினபூமி. கிரானைட் அத்துமீறல்கள் பற்றி பல விரிவான தகவல்களை வெளியிட்டது. | மதுரையில் தொடங்கி குறுகிய காலத்தில் பரவலான வாசகப் பரப்பைப் பெற்ற இதழ் தினபூமி. கிரானைட் அத்துமீறல்கள் பற்றி பல விரிவான தகவல்களை வெளியிட்டது. | ||
{{First review completed}} | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.thinaboomi.com/ தினபூமி இணையதளம்] | * [https://www.thinaboomi.com/ தினபூமி இணையதளம்] | ||
* தமிழ் இதழ்கள் - விடுதலைக்குப் பின்: முனைவர் வே. சசிகலா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2006. | * தமிழ் இதழ்கள் - விடுதலைக்குப் பின்: முனைவர் வே. சசிகலா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2006. | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 17:26, 21 June 2024
தினபூமி (1994) மதுரையில் தொடங்கப்பட்டு வெளிவந்த நாளிதழ். இதன் ஆசிரியர் எல். மணிமாறன்.
வெளியீடு
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு 1990 முதல் 'அதிர்ஷ்டம்' என்ற நாளிதழ் வெளிவந்தது. முழுக்க முழுக்க பரிசுச்சீட்டு, லாட்டரிச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த அந்த இதழின் விரிவாக, அக்டோபர் 14, 1994-ல், தினபூமி நாளிதழ் தொடங்கப்பட்டது. மதுரை மட்டுமல்லாமல், சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர், பாண்டிச்சேரியிலிருந்தும் அச்சானது. எல். மணிமாறன் இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியராகச் செயல்பட்டார்.
உள்ளடக்கம்
தினபூமி எட்டு பக்கங்களுடன், மூன்று ரூபாய் விலையில் வெளியானது. தின மற்றும் பூமி என்ற சொற்களுக்கிடையில் பூமியைக் குறிக்கும் வகையில் உலக உருண்டையின் படம் இடம்பெற்றது. அரசியல், சமூகம், விளையாட்டு, கல்வி, விவசாயம், ஜோதிடம், எண் கணிதம், திரைப்படம், உடல் நலம் சார்ந்த பல செய்திகளை வெளியிட்டது. பல்வேறு வண்ணப் படங்களுடன் வெளியான தினபூமி இதழ் விளம்பரங்களுக்கும் இடமளித்தது.
இணைப்பிதழ்கள்
தினபூமி தினந்தோறும் பல்வேறு இணைப்பிதழ்களை வெளியிட்டது. ஞாயிறு பூமி (ஞாயிறு), மருத்துவ பூமி (திங்கள்), மங்கையர் பூமி (செவ்வாய்), டி.வி. பூமி (புதன்), கதை பூமி (வியாழன்), ஆன்மீக பூமி (வெள்ளி), மாணவர் பூமி (சனி) ஆகிய இணைப்புக்களை வெளியிட்டது. விளையாட்டு பூமி, ஞாயிறு பூமி ஆகியன தனிப்புத்தகங்களாக வெளியிடப்பட்டன.
மாணவர் பூமி, வாழ்வியல் பூமி, வேளாண் பூமி ஆகிய சிறப்புப் பகுதிகள் வெளியாகின.
தினபூமி நிறுவனத்திலிருந்து மாத இதழாக ’சாம்பியன்’ என்ற விளையாட்டு சார்ந்த இதழ் வெளிவந்தது. ஆன்மிகம் சார்ந்து ’அருள் பூமி’ இதழும், ஜோதிடம் சார்ந்து ‘ஜோதிட பூமி’ இதழும் வெளிவந்தன.
இணைய இதழ்
தினபூமி, இணையத்தில் டிஜிடல் இதழாக வெளிவருகிறது.
மதிப்பீடு
மதுரையில் தொடங்கி குறுகிய காலத்தில் பரவலான வாசகப் பரப்பைப் பெற்ற இதழ் தினபூமி. கிரானைட் அத்துமீறல்கள் பற்றி பல விரிவான தகவல்களை வெளியிட்டது.
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
உசாத்துணை
- தினபூமி இணையதளம்
- தமிழ் இதழ்கள் - விடுதலைக்குப் பின்: முனைவர் வே. சசிகலா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2006.