under review

சம்பந்த சரணாலயர்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
Line 25: Line 25:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|05-Mar-2023, 06:29:59 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 16:26, 13 June 2024

சம்பந்த சரணாலயர் (பொ.யு 7-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். தத்துவ விளக்கம் நூல் முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு இவர் மாமனார் என்று கூறுவர். திருஞானசம்பந்தருடனேயே தன் வாழ்நாளைக் கழித்து அவரின் செய்யுள்களைத் தொகுத்தார்

தொன்மம்

திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டில் சமணர்களை வாதத்தில் வென்று திரும்பும்போது போதிமங்கை என்னும் ஊரிலிருந்த மக்கள் சிவ முழக்கம் செய்தனர். புத்தநந்தி வாதத்திற்கு அழைத்தபோது சம்பந்தரின் வேண்டுகோளுக்கிணங்க சம்பந்த சரணாலயர் செய்யுள் பாடினார். பாடி முடித்தபின் அவர் இட்ட சாபத்தால் அவரின் தலை உருண்டு விழுந்தது என்று தொன்மக் கதைகள் சொல்கின்றன. இந்தக் கதைகளை பெரியபுராணம் பாடல்கள் வழி அறியலாம்.

இலக்கிய வாழ்க்கை

இலக்கண இலக்கியங்கள் கற்றார். திருஞானசம்பந்தப் பிள்ளையார் இயற்றிய தேவாரப்பதிகங்களை உடனுக்குடன் எழுதிப்பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றார். சீகாழியில் திருஞானசம்பந்தரோடு தங்கியிருந்தபோது அடியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தத்துவ விளக்கம் நூலை இயற்றினார். ஐம்பத்தொரு பாடல்களால் ஆன இந்நூல் கலித்துறையால் ஆனது.

பாடல் நடை

  • தத்துவ விளக்கம்

எய்தும் பொருளொரு மூன்றூ பதிபசு பாசமென்றே
மெய்தந்த ஆகமங் கூறு மவற்றினுள் வெங்குருவாழ்
மைதங்கு கண்டன் பதிபசு என்ப தணுக்கண் மற்றுக்
கைதந்த பாசங்க ளாணவ மாயையுங் கன்மமுமே

மறைவு

திருஞானசம்பந்தப் பிள்ளை ஆச்சாபுரம் என்னும் திருநல்லூர்ப்பெருமணத்தில் தோன்றிய ஜோதியில் கலந்தபோது சம்பந்த சரணாலயரும் அவருடன் காலமானார் என்று நம்பப்படுகிறது.

நூல் பட்டியல்

  • தத்துவ விளக்கம்

குறிப்புகள்

சம்பந்த சரணாலயர் என்னும் பெயர்கொண்ட பிறர்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2023, 06:29:59 IST