under review

கி.ச. திலீபன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 31: Line 31:
*[https://nadukal.in/writer/%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/ கி.ச.திலீபன் நடுகல்]
*[https://nadukal.in/writer/%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/ கி.ச.திலீபன் நடுகல்]
*[https://www.hindutamil.in/author/861-%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%9A.%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D கி.ச.திலீபன் தமிழ் ஹிந்து]
*[https://www.hindutamil.in/author/861-%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%9A.%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D கி.ச.திலீபன் தமிழ் ஹிந்து]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:32:10 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]

Latest revision as of 16:21, 13 June 2024

To read the article in English: K. S Dhileepan. ‎

கி.ச.திலீபன்

கி.ச. திலீபன் ( பிறப்பு: ஜூலை 17,1993) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். ஓலைச்சுவடி என்னும் இணைய இதழின் ஆசிரியர்.

பிறப்பு, கல்வி

கி.ச.திலீபன் ஈரோடு மாவட்டத்தில் தூக்கநாயக்கன் பாளையம் என்னும் ஊரில் ஜூலை 17,1993 அன்று சகாதேவன், கிருஷ்ணவேணி இணையருக்கு பிறந்தார்.

பங்களாபுதூர் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார்.

தனிவாழ்க்கை

கி.ச.திலீபனுக்கு இன்னும் மணமாகவில்லை. இதழாளராக பணியாற்றுகிறார்

படைப்புலகம்

2016-ல் வெளியான ;இன்னும் மிச்சமிருக்கிறது' என்னும் சிறுகதை இவருடைய முதல் ஆக்கம். 2019-ல் இவரது முதல் சிறுகதை தொகுதி 'இன்னும் மிச்சமிருக்கிறது' என்ற பெயரிலேயே வெளியானது. வாசகசாலை பதிப்பகம் இதை வெளியிட்டது

இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக ஆல்பெர் காம்யூ, அசோகமித்திரன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

இதழியல்

2016-ம் ஆண்டு முதல் 'ஓலைச்சுவடி' என்னும் கலை இலக்கிய சூழலிய இதழை வெளியிட்டார். ஆரம்பத்தில் அச்சு இதழாக இருந்தது. 2019ம் ஆண்டிலிருந்து இணைய இதழாக மாறியது. இதுவரையில் 11 இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.

இலக்கிய இடம்

கி.ச. திலீபன் தமிழ் இலக்கியச் சூழலில் பயண இலக்கியத்தில் தனிப்பங்களிப்பு கொண்ட இளைய தலைமுறைப் படைப்பாளியாகவும் இதழியலாளராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

  • Back பேக்: தனிப்பயணியின் வடகிழக்கு அனுபவம்
  • இன்னும் மிச்சமிருக்கிறது- சிறுகதைகள்

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:10 IST