under review

வளத்தி ஆதிநாதர் ஜினாலயம்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 20: Line 20:
* T. A. Gopinatha Rao, 'Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.  
* T. A. Gopinatha Rao, 'Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.  
* P.R. Srinivasan, 'Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.  
* P.R. Srinivasan, 'Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.  
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|16-Sep-2023, 01:30:54 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சமணத் தலங்கள்]]
[[Category:சமணத் தலங்கள்]]

Latest revision as of 16:15, 13 June 2024

வளத்தி ஆதிநாதர் ஜினாலயம் (நன்றி பத்மாராஜ்)

வளத்தி ஆதிநாதர் ஜினாலயம் (பொ.யு. 12 - 13-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) சமணத்தலங்களில் ஒன்று. ஆதிநாதரை மூலவராகக் கொண்ட சமணக் கோயில்.

இடம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், செஞ்சிக்கு சற்றுத்தொலைவில் உள்ள வளத்தி என்னும் ஊரில் வளத்தி ஆதிநாதர் ஜினாலயம் உள்ளது. செஞ்சி சேத்துப்பட்டு துக்கிடியில் உள்ள சமணக் கிராமங்களுள் ஒன்று வளத்தி.

சமணச் சிற்பங்கள்

அமைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜினாலயம் என்றழைக்கப்படும் சமணக் கோயில்களில் வளத்தி ஆதிநாதர் ஜினாலயம் குறிப்பிடத்தக்கது. கருவறையில் ஆதிநாதர் சிற்பம் உள்ளது. இந்த கோயிலில் இருக்கும் கடவுளான ஆதிநாதர் சமணத் தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் முதலாம் தீர்த்தங்கரர். தர்மதேவி, பத்மாவதிக்கு தனி சன்னதிகள் உள்ளன. பலிபீடமும் மற்றும் மானஸ்தம்பமும் அதன் கிழக்கில் ஆதிநாதர், அஜிதநாதர், மேற்கில் சம்பவ நாதர், வடக்கில் அபிநந்த நாதர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

தீர்த்தங்கரர்களின் செப்புத் திருமேனிகள் உலாப்படிமங்களாக உள்ளன. அவற்றுள், ஆதிநாதர், பார்சுவநாதர், தர்மதேவி, பத்மாவதி ஆகிய செப்புத்திருமேனிகள் குறிப்பிடத்தக்கவை. இந்த ஆலயம் நைனார் கோயில் எனவும் அறியப்படுகிறது. 800 ஆண்டுகள் பழமையானது. புனரமைக்கப்பட்டுள்ளது.

கோபுரம் மூன்று நிலைகளை உடையதாக உள்ளது. கோபுரத்தின் தளப்பகுதியில் வாயிற்காவலர்களின் சுதையுருவங்கள் காட்டப்பட்டுள்ளன. கோபுரத்தைக் கடந்து பலிபீடம், மானஸ்தபம் ஆகியவை அமைந்துள்ளன. கருவறை விமானம் தாங்குதளம் முதல் கூரைப் பகுதி வரை கற்றளியாகவும், அதற்கு மேல் அமைந்துள்ள தளப்பகுதி சுதையாலும் அமைந்துள்ளது. விமானம் திராவிடபாணியில் ஏகதளத்தைப் பெற்றுள்ளது. மண்பங்கள் தூண்களைப் பெற்று விளங்குகின்றன. பழமையான கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை.

ஆதிநாதர்

வழிபாடு

வளத்தி ஆதிநாதர் ஜினாலயம் மக்கள் குடியிருப்புப் பகுதியிலேயே கோயில் அமைந்துள்ளது. தினமும் இருவேளை பூஜையும் அனைத்து சமண விழாக்களும் சிறப்புடன் நடைபெறுகின்றன. கோயிலின் ரிஷப தீர்த்தங்கரர், பார்ச்சுவதீர்த்தங்கரர், சர்வாணயக்ஷர் ஆகிய மூன்று சிலைகளையும் விழாக்காலங்களில் வீதி உலா எழுந்தருளச் செய்வர். வளத்தி சமணக்கோயிலில் உபவாசம் சிறப்பாக பின்பற்றப்படுகிறது. பெண்கள் உபவாசத்தை மேற்கொண்டு தீர்த்தங்கரர்களின் பெயர்களை ஐந்து முறை கூறிவிட்டு பின் உணவு உட்கொள்கின்றனரர். பௌர்ணமி மற்றும் சதுர்த்தசி, அஷ்டமி ஆகிய நாட்களில் உண்ணாவிரதம் மற்றும் மதச்சடங்குகளை மேற்கொள்கின்றனர்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Sep-2023, 01:30:54 IST