under review

தேரூர் சிவன் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 43: Line 43:
* [https://kalirajathangamani.blogspot.com/2016/01/freedom-fighters-of-tamil-nadu.html Freedom Fighters of Tamilnadu]
* [https://kalirajathangamani.blogspot.com/2016/01/freedom-fighters-of-tamil-nadu.html Freedom Fighters of Tamilnadu]
* [https://www.thehindu.com/news/national/tamil-nadu/parliamentarian-who-lived-in-a-dalit-settlement/article65255506.ece Parliamentarian who lived in a Dalit settlement The Hindu]
* [https://www.thehindu.com/news/national/tamil-nadu/parliamentarian-who-lived-in-a-dalit-settlement/article65255506.ece Parliamentarian who lived in a Dalit settlement The Hindu]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|12-May-2024, 10:27:51 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:03, 13 June 2024

சிவன் பிள்ளை
தேரூர் சிவன் பிள்ளை

தேரூர் சிவன் பிள்ளை (எஸ்.சிவன் பிள்ளை) (டிசம்பர் 21, 1910 - 1997 ) இந்திய சுதந்திரப்போராடந்த் தியாகி. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கிராம மறு அமைப்பு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றுக்காகப் பணியாற்றியவர்.

பிறப்பு, கல்வி

தேரூர் சிவன் பிள்ளை பழைய திருவிதாங்கூரில் இன்றைய தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேரூர் என்னும் ஊரில் டிசம்பர் 1,1910-ல் பிறந்தார். அவரது தந்தை தேரூர் சுப்ரமணிய பிள்ளை நிலக்கிழார். அவர் இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவாளராகவும் திருவிதாங்கூர் ஶ்ரீமூலம் பிரஜா சபை உறுப்பினராகவும் இருந்தார். தேரூர் சுப்ரமணிய பிள்ளை வைக்கம் சத்யாக்கிரகத்தில் பங்கெடுத்தார். சுசீந்திரம் ஆலயநுழைவுப் போராட்டத்திலும் பங்கெடுத்தார்.

தேரூர் சிவன்பிள்ளை தேரூரிலும் நாகர்கோயிலும் பள்ளிக்கல்வியை முடித்தபின் திருவனந்தபுரம் கலை அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். 1933-ல் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சட்டத்தில் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

தேரூர் சிவன்பிள்ளை நாகர்கோயில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிவன் பிள்ளையின் மனைவி கமலாட்சி. மகன்கள் சாய் சுப்ரமணியம், விஜயகுமார் .

அரசியல்

தேரூர் சிவன் பிள்ளை ஃபரூக் அப்துல்லாவுடன்

தேரூர் சிவன் பிள்ளை கல்லூரியில் படிக்கையில் கல்லூரியில் இந்தியத் தேசிய காங்கிரஸின் கொடியை ஏற்றியமையால் நடவடிக்கைக்கு ஆளானார். இந்தியத் தேசியக் காங்கிரஸ் உறுப்பினராகவும் வெவ்வேறு பொறுப்புகளிலும் இருந்தார். திருவிதாங்கூர் திவான் சி.பி.ராமஸ்வாமி ஐயர் காங்கிரஸ் மீது நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக அமைக்கப்பட்ட பிரஜா அவகாச பிரஸ்தானம் (குடிமக்கள் உரிமை இயக்கம்) அவர் தலைமையில் நடைபெற்றது. 1937-ல் திவானுக்கு எதிராகப் போராடியமையால் ஆறுமாதம் சிறைத்தண்டனை பெற்றார். 1939-ல் மீண்டும் அரசியல் போராட்டத்துக்காக 14 மாதச் சிறைத்தண்டனை பெற்றார். சிறைமீண்டபின் 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்தார். கிரிப்ஸ் தூதுக்குழுவுக்கு எதிரான போராட்டத்திற்காக இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின் இந்திய தேசியக் காங்கிரஸில் பணியாற்றிய தேரூர் சிவன்பிள்ளை நேருவின் பெருந்தொழில் கொள்கைகளை எதிர்த்து அரசியலை விட்டு விலகினார். இந்திராகாந்தி ஜூன் 25, 1975-ல் நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதைக் கடுமையாக எதிர்த்துச் செயல்பட்டார்.

சமூகப்பணி

தேரூர் சிவன் பிள்ளை 1946-ல் சென்னையில் காந்தியை நேரில் சந்தித்தார். காந்திகிராமம் நிறுவனர் ஜி.ராமச்சந்திரன் அவரை காந்திக்கு அறிமுகம் செய்து வைத்தார். காந்தியின் ஆணைப்படி அதிகார அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டு கிராம நிர்மாணம், தீண்டாமை ஒழிப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டார். காந்தியின் வார்தா ஆசிரமத்துக்கு தன் குடும்பத்துடன் சென்று தங்கினார். மனைவியுடன் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் சென்று தங்கி அங்கே கிராமியக் கல்வி, கைத்தொழில் பயிற்சி அளிப்பதற்காக காந்தி ஒருங்கிணைத்த நை தாலிம் (புதிய கல்வி) என்னும் அமைப்பில் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

தேரூர் சிவன் பிள்ளை 1952-ல் தன் ஊரான தேரூரில், காட்டுநாயக்கர்கள் என்னும் தலித் மக்கள் வாழும் தேரூர்க்குளம் என்னும் பகுதியில் வீடு கட்டி குடியேறியது அன்று குமரிமாவட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அப்பகுதியில் கூட்டுறவு அமைப்பின் வழியாகக் கடன்பெற்று 20-ல்லங்களைக் கட்டி அனைத்து சாதியின் ஏழைகளையும் குடியமர்த்தி கஸ்தூர்பா நகர் என்னும் இணைப்பு ஊரை அமைத்தார். தலித் மக்களின் கல்விக்காக தொடர்ச்சியாகப் பணியாற்றினார். பொ.திரிகூடசுந்தரம் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது கிடைத்த ஊதியமான ரூ 3000-த்தைக்கொண்டு கஸ்தூர்பா பள்ளி என்னும் கிராமியப் பள்ளியை தொடங்கி அங்கே காந்திய வழிமுறைகளின்படி ஏழைகளுக்குக் கல்வி அளித்தார்.

பதவி

தேரூர் சிவன் பிள்ளை 1952-ல் நியமன உறுப்பினராக இந்தியப் பாராளுமன்றத்தின் மேல்சபைக்குத் தேர்வுசெய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். நேருவின் பெருந்தொழில்களை ஊக்குவிக்கும் கொள்கையுடன் முரண்பட்டு பதவி விலகி அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டு சேவைப்பணிகளில் மட்டும் ஈடுபட்டார்.

மறைவு

தேரூர் சிவன் பிள்ளை 1997-ல் தன் 87-வது வயதில் மறைந்தார்

வரலாற்று இடம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் விடுதலைப்போராளிகளில் முக்கியமானவராக தேரூர் சிவன் பிள்ளை கருதப்படுகிறார். அதிகார அரசியலைப் புறக்கணித்து காந்திய இலட்சியவாதக் கொள்கைகளின்படி வாழ்ந்தவர் என்றும் அறியப்படுகிறார்

நூல்

  • புயலின் நடுவே ஒரு பயணம் (தன்வரலாறு)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-May-2024, 10:27:51 IST