under review

சப்திகா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 23: Line 23:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://kamadenu.hindutamil.in/olir/505757-pidithavai-10 சப்திகா நேர்காணல், காமதேனு இதழ்-ஜனவரி 2019]
[https://kamadenu.hindutamil.in/olir/505757-pidithavai-10 சப்திகா நேர்காணல், காமதேனு இதழ்-ஜனவரி 2019]


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|08-May-2024, 12:38:24 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:59, 13 June 2024

சப்திகா

சப்திகா (பிறப்பு: அக்டோபர் 28, 1982) எழுத்தாளர், ஆசிரியர். சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

சப்திகா குமரி மாவட்டம் சைமன் காலனி மீனவ கிராமத்தில் லாரன்ஸ், மேரி டோறா இணையருக்கு அக்டோபர் 28, 1982-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு தங்கை. சென்னை நார்த்விக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை பயின்றார். குளச்சல் புனித மேரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தார். இளநிலை மற்றும் முதுகலைப் படிப்புகளை நாகர்கோவில் தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் பயின்றார். முட்டம் ஆயர் ஆஞ்சிசாமி கல்லூரியில் இளங்கலை கல்வியியல் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர்(MPhil) பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

சப்திகா பள்ளம் கிராமத்தை சார்ந்த வின்சென்ட் தே பால்தாஸ் என்பவரை 2001-ல் திருமணம் செய்து கொண்டார். கணவர் மருந்தாளுநராகப் பணியாற்றுகிறார். திருமணத்திற்குப் பின் பள்ளம்துறையில் வசித்து வருகிறார். இரண்டு குழந்தைகள்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

சப்திகாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘கடலோடி கதைகள்’ 2018-ல் வெளியானது. கடலோரச் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி நிற்கும் வரதட்சணைப் பிரச்சனையை ‘விடியலின் வெளிச்சம்’ என்கிற நாவலின் மூலம் எழுதினார். இவரது 'கொடியா? மரமா?' சிறுகதைத் தொகுப்பு 2021-ல் வெளிவந்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட வாசிப்பு இயக்கத்தில் இவரது 'அமலி பாட்டியின் இரயில் பயணம்' சிறுகதை வெளிவந்துள்ளது. இவரது படைப்புகள் தென்னொலி, தொடுவானம் போன்ற இதழ்களில் வெளிவந்தன. 'கடற்கரை' இதழில் இவரது சிறுகதைகளும், புத்தக விமர்சனங்களும் வெளிவந்தன. 'கடலோரக் கதைகள்', 'அன்றில் முற்றம்' ஆகிய சிறுகதை தொகுப்புகளில் இவரது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

சாத்தான்குளம் வட்டாரத்தில் பணிபுரியும் கல்வி தன்னார்வலர்களை இல்லம் தேடி கதை எழுத ஊக்குவித்து அவர்களின் முதல் கதைகளை தொகுத்து 'ஏக்கங்கள்' என்னும் தலைப்பில் சிறுகதை தொகுப்பாக வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கான சிறுகதைகள் எழுதி காணொளிகளாக யூடியூபில் பதிவு செய்து வருகிறார்.

நூல் பட்டியல்

நாவல்
  • விடியலின் வெளிச்சம் (நெய்தல் வெளி, 2019)
சிறுகதைத் தொகுப்பு
  • கடலோடி கதைகள் (சேலாளி பதிப்பகம், 2018)
  • கொடியா? மரமா? (அசிசி பதிப்பகம், 2021)
  • ஏக்கங்கள் (கடற்கரை பதிப்பகம், 2023)

உசாத்துணை

சப்திகா நேர்காணல், காமதேனு இதழ்-ஜனவரி 2019



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-May-2024, 12:38:24 IST