under review

அம்பிகைபாகர்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 26: Line 26:
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0011261_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf சிற்றிலக்கியப் புலவர் அகராதி - TamilDigitalLibrary]

*[https://www.inuvilkanthan.com/history இணுவைக் கந்தன் திருக்கோயில், ஆலய வரலாறு]
*[https://www.inuvilkanthan.com/history இணுவைக் கந்தன் திருக்கோயில், ஆலய வரலாறு]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 12:06:03 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]

Latest revision as of 14:07, 13 June 2024

To read the article in English: Ambikaipaker. ‎

அம்பிகைபாகர் (1884 -1904) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். இவரது இணுவை அந்தாதி முக்கியமான படைப்பாகும். ஆறுமுக நாவலரின் மாணவர்களில் ஒருவர்.

பார்க்க இ.அம்பிகைபாகர் (அம்பி)

வாழ்க்கைக் குறிப்பு

அம்பிகைபாகர், பொன்னம்பலபிள்ளை யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த புலவர். பொன்னம்பலப் பிள்ளைக்கும் சிவகாமசுந்தரிக்கும் 1884ல் பிறந்தார். ஆறுமுக நாவலரிடம் தொல்காப்பியம், சேனாவரையம் ஆகியவற்றையும், நடராசையரிடம் சிவஞானசித்தியாரையும் கற்றார். இணுவை அந்தாதி, தணிகைப்புராண உரை (நகரப்படலம் வரை), சூளாமணி வசனம் முதலிய நூல்களை இயற்றி அச்சிட்டு வெளியிட்டார். தணிகைப்புராணம் முழுவதற்குமான பொழிப்புரையையும் எழுதியுள்ளார்.

இணுவில் கந்தசுவாமி கோவில்

இலக்கிய வாழ்க்கை

இலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலான இணுவில் கந்தசுவாமி கோயிலை மையமாக வைத்து ’இணுவை அந்தாதி’ பாடினார். ஆறுமுக நாவலரிடத்தில் தொல்காப்பியம் சேனாவரையத்தையும், நடராசையரிடத்தில் சிவஞான சித்தியார் முதலிய சித்தாந்த நூல்களையும் பயின்றார். சி.வை. தாமோதரம் பிள்ளையின் நண்பர். இருவரும் இலக்கியப் பணிகளில் துணைபுரிந்து கொண்டனர். சி.கணேசையர் இவரிடம் தணிகை புராணத்துக்கு பொருள் கேட்டறிந்தார்.

மறைவு

அம்பிகை பாகர் 1904-ல் மறைந்தார்.

நூல்பட்டியல்

அந்தாதி
  • இணுவை அந்தாதி
பிற
  • தணிகைப் புராண உரை (நகரப்படலம் வரை)
  • தணிகைபுராணம் பொழிப்புரை (அச்சேறவில்லை)
  • சூளாமணி வசனம்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:06:03 IST