under review

எப்.ஜி. நடேசய்யர்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 22: Line 22:
* http://archives.thinakaran.lk/2014/01/13/?fn=f1401134
* http://archives.thinakaran.lk/2014/01/13/?fn=f1401134
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.pdf/359 எனது நாடகவாழ்க்கை, ஔவை. டி.கே.ஷண்முகம்]
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.pdf/359 எனது நாடகவாழ்க்கை, ஔவை. டி.கே.ஷண்முகம்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|13-Sep-2022, 05:42:12 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Latest revision as of 12:01, 13 June 2024

எப்.ஜி. நடேசய்யர் (நன்றி: சு. முருகானந்தம்)

எப்.ஜி. நடேசய்யர் (1880-1963) தமிழ் நாடக, திரைப்பட நடிகர், அரசியல்வாதி, மேடைப்பேச்சாளர். திருச்சியில் ஆர்.ஆர். சபாவை நிறுவி நாடக அரங்காற்றுகைகள் செய்தார்.

பிறப்பு, கல்வி

எப்.ஜி. நடேசய்யர் புதுக்கோட்டையில் 1880-ல் கங்காதர சாஸ்திரிகளுக்குப் பிறந்தார். ரயில்வேயில் அதிகாரியாக வேலை பார்த்துக் கொண்டே பயில்முறைக் குழுவொன்றை நடத்தி, நாடகங்களில் நடித்தும் வந்தார்

நாடக வாழ்க்கை

எப்.ஜி. நடேசய்யர் இசை நாடகங்கள் பல வடிவமைத்து அரங்கேற்றினார். 1914-ல் திருச்சியில் ரசிக ரஞ்சனி சபாவைத் (ஆர்.ஆர். சபா) தொடங்கினார். மனோகரா, லீலாவதி, வேதாள உலகம் போன்ற நாடகங்களை இச்சபாவில் அரங்கேற்றினார். மனோகரா நாடகத்தின் வெற்றியால் தன் உறையூர் வீட்டிற்கு “மனோகரா விலாஸ்” என்று பெயரிட்டார். கே.பி. சுந்தராம்பாளின் பாடல் திறமையைக் கேட்டு அவரை நாடகக் கம்பெனிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.

எப்.ஜி.நடேசையர் ஞானசௌந்தரி கதைக்கு நாடகவடிவத்தை உருவாக்கினார் என்றும் அதற்கு சையத் இமாம் புலவர் பாடல்கள் எழுதினார் என்றும் ஔவை டி.கே.சண்முகம் அவருடைய 'எனது நாடகவாழ்க்கை' என்னும் நூலில் குறிப்பிடுகிறார்,

ஸேவாஸதனம்

திரைப்படம்

ஸேவாஸதனம் என்ற கே. சுப்ரமணியத்தின் திரைப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியுடன் நடித்தார்.

பட்டம்

  • எப்.ஜி. நடேசய்யருக்கு ரிஷிகேசம் சுவாமி சிவானந்தர் ’நாடகக் கலாநிதி பட்டம்’ பெற்றார்.

அரங்கேற்றிய நாடகங்கள்

  • மனோகரா
  • லீலாவதி
  • வேதாள உலகம்
  • ஞானசௌந்தரி
  • சிவலீலா

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Sep-2022, 05:42:12 IST