under review

ஜுஸ்லா ரமீஸ்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 10: Line 10:
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE,_%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D ஆளுமை:ஜுஸ்லா, ரமீஸ் - noolaham]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE,_%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D ஆளுமை:ஜுஸ்லா, ரமீஸ் - noolaham]


{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 22:23, 9 June 2024

ஜுஸ்லா ரமீஸ் (பிறப்பு: மார்ச் 11, 1987) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஜுஸ்லா ரமீஸ் இலங்கை மட்டக்களப்பு காத்தான்குடியில் ரஷீட், பாத்தும்மா இணையருக்கு மார்ச் 11, 1987-ல் பிறந்தார். பள்ளிக்கல்வியை மட்டக்களப்பு காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலயத்தில் கற்றார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொதுக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். கத்தான்குடி பிரதேச செயலகத்தில் கணக்காய்வு அபிவிருத்தித் துறையில் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ஜுஸ்லா ரமீஸ் பன்னிரெண்டு வயது முதல் கவிதைகள் எழுதி வருகிறார். நான்கு நூல்களுக்கு விமர்சனம் எழுதியுள்ளார். இவரின் கட்டுரை, விமர்சனம், ஆய்வுக்கட்டுரை ஆகிய ஆக்கங்கள் தினகரன், சரிநிகர், ஆகிய நாளிதழ்களிலும் 'மை' எனும் ஊடறுவினால் வெளியிடப்பட்ட கவிதைத் தொகுப்பிலும், 'சொல்', 'மறுகா', 'நல்லுறவு', 'அம்பலம்', 'உயிர்நிழல்' ஆகிய இதழ்களிலும் காலச்சுவடு, உயிர்மை, ஆகிய இந்திய இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

விருதுகள்

  • தமிழ்த்தினப் போட்டியில் மாகாண மட்டத்தில் கவிதைப் போட்டியில் முதலிடத்தையும் பேராதனைப் பல்ககை்கழத்தின் இஸ்லாமிய தின கவிதைப் போட்டியில் முதலாம் பரிசையும் பெற்றார்.
  • பல சான்றிதழ்களையும் பாராட்டுக்களையும் பெற்றார்.

உசாத்துணை


✅Finalised Page