பஞ்சகால விதி: Difference between revisions

From Tamil Wiki
Line 4: Line 4:
[[வைணவம்|வைணவ]]  மதத்தில் [[பாஞ்சராத்ரம்|பாஞ்சராத்ர]] ஆகம முறையில் ஒருவர் தன் முழுநாளையும் விஷ்ணுவின்பொருட்டு செலவிடும் முறை பஞ்சகால விதி என வகுக்கப்பட்டுள்ளது. இது பொழுதுடன் இணைந்த மதக்கடமைகளைக் குறிக்கிறது.

ஆதாரம்
== ஆதாரம் ==
பஞ்சகால விதி என்பது பாத்மசம்ஹிதையின் 13 ஆவது அத்தியாயத்தில் (சரியா பாதம்) விவரிக்கப்படுகிறது. நாள் எப்படி ஐந்து காலப்பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்று பிரம்மன் கேட்க அவருக்கு விளக்கப்படும் வடிவில் இது சொல்லப்படுகிறது.

ராமானுஜர் சர்வதர்சன சங்க்ரகம் நூலில் 'ததுபாசனம் பஞ்சவிதம் - அபிகமனம் - உபாதானம் - இஜ்யா- ஸ்வாத்யாய - யோக இதி ஶ்ரீ பாஞ்சராத்ரேபிஹித்தம்' என வரையறுத்து கூறுகிறார் 

== சடங்குகள் ==
== சடங்குகள் ==
Line 30: Line 31:
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkJU3&tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88#book1/ பாத்மசம்ஹிதா சரியாபாதம் இணையநூலகம்]

* [https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkJU3 பாத்மசம்ஹிதா. இணையநூலகம்]
* [https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkJU3 பாத்மசம்ஹிதா. இணையநூலகம்]
* [https://aranganagar.wordpress.com/2020/04/27/nithya-grantham/#:~:text=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D. அரங்கநகர் இணையப்பக்கம்]
* [http://www.namperumal.com/downloads/lakshmi-tantra-chapter17.pdf நம்ப்பெருமாள். லக்ஷ்மிதந்த்ரம் இணையப்பக்கம்]
* [https://www.ahobilamutt.org/us/data/pdf/Panamukai%20swami%20-%20Pages%20from%201961-9.pdf அகோபிலமடம் இணையப்பக்கம்]
* [https://swamiindology.blogspot.com/2023/03/post11796.html ஸ்வாமி இணையப்பக்கம்]

Revision as of 09:55, 6 June 2024

பஞ்ச கால விதி : வைணவ மதத்தின் பாஞ்சராத்ர ஆகம மரபில் ஒரு வைணவர் ஒவ்வொரு நாளையும் செலவிடவேண்டிய நெறிமுறை

மரபு

வைணவ மதத்தில் பாஞ்சராத்ர ஆகம முறையில் ஒருவர் தன் முழுநாளையும் விஷ்ணுவின்பொருட்டு செலவிடும் முறை பஞ்சகால விதி என வகுக்கப்பட்டுள்ளது. இது பொழுதுடன் இணைந்த மதக்கடமைகளைக் குறிக்கிறது.

ஆதாரம்

பஞ்சகால விதி என்பது பாத்மசம்ஹிதையின் 13 ஆவது அத்தியாயத்தில் (சரியா பாதம்) விவரிக்கப்படுகிறது. நாள் எப்படி ஐந்து காலப்பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்று பிரம்மன் கேட்க அவருக்கு விளக்கப்படும் வடிவில் இது சொல்லப்படுகிறது.

ராமானுஜர் சர்வதர்சன சங்க்ரகம் நூலில் 'ததுபாசனம் பஞ்சவிதம் - அபிகமனம் - உபாதானம் - இஜ்யா- ஸ்வாத்யாய - யோக இதி ஶ்ரீ பாஞ்சராத்ரேபிஹித்தம்' என வரையறுத்து கூறுகிறார்

சடங்குகள்

அபிகமனம்

இது ப்ராத காலம் எனப்படுகிறது. (தோராயமாக காலை 6 முதல் 8.24 வரை) . நீராடுதல், திருமண் இட்டுக் கொள்ளுதல், சந்தியாவந்தனம் செய்தல், ஜெபம் செய்தல் ஆகிய அனுஷ்டானங்களை செய்ய வேண்டிய பொழுது

உபதானம்

இது சங்கவ காலம் எனப்படுகிறது (தோராயமாக காலை 8.25 முதல் 10.48 வரை) . இறைவடிபாட்டுக்கு தேவையான பொருட்களை சேகரித்தல், பூத்தொடுத்தல், சந்தனம் அரைத்தல், படையலுக்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டிய பொழுது

இஜ்யா

இது மத்யான்ன காலம். (தோராயமாக 10. 49 முதல்13.12 வரை) யாகம் செய்தல். பிறவழிபாடுகளும் அடங்கும்

ஸ்வாத்யாயம்

இது அபராண்ன காலம் (13.13 – 15.36 வரை) . இது ஸ்வாத்யாயம் செய்யவேண்டிய நேரம். வேதம் ஓதுதல் & கற்பித்தல், புராணங்கள் மற்றும் இதிகாசங்களை படித்தல்.

யோகம்

மாலைநேரம். (தோராயமாக மாலை 15.37 முதல் 18.00 வரை) . இது யோகம் செய்யவேண்டிய பொழுது. உறங்கும் வரை இறைநினைவுடன் இருத்தல்.

உசாத்துணை