ரஹஸ்யத்ரயம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "ரகஸ்யத்திரயம்: (மூன்று மறைஞானங்கள் ) வைணவ தத்துவ நூல். சம்ஸ்கிருதம் கலந்த தமிழில், மணிப்பிரவாள மொழியில் அமைந்தது. வைணவ மதத்தில் பாஞ்சராத்ர ஆகம முறைமையில் ஶ்ரீசம்பிரதாயம் எனப்ப...")
 
Line 5: Line 5:


== காலம் ==
== காலம் ==
இந்நூல் பொயு 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று பொதுவாக மதிப்பிடப்படுகிறது.


== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==

Revision as of 17:45, 5 June 2024

ரகஸ்யத்திரயம்: (மூன்று மறைஞானங்கள் ) வைணவ தத்துவ நூல். சம்ஸ்கிருதம் கலந்த தமிழில், மணிப்பிரவாள மொழியில் அமைந்தது. வைணவ மதத்தில் பாஞ்சராத்ர ஆகம முறைமையில் ஶ்ரீசம்பிரதாயம் எனப்படும் ராமானுஜரின் வைணவ மரபில் உள்ள மறைஞானத்தை கூறும் நூல். ஆசிரியர் பரகால நல்லான்.

மரபு

வைணவ மதத்தில் ஶ்ரீ சம்பிரதாயம் எனப்படும் ராமானுஜர் உருவாக்கிய மரபில் பாஞ்சராத்ரம் என்னும் ஆகமம் சார்ந்த முறைமையில் விசிஷ்டாத்வைதம் சார்ந்த மறைஞானக் கொள்கைகளை விளக்கும் நூல். வைணவ மரபில் இத்தகைய ரகசிய நூல்கள் பல உள்ளன. இவை ரகசியமாக வைக்கப்பட்டவை அல்ல, பொதுவான தத்துவநூல்கள்தான். ரகசியமாக ஓதப்படும் மந்திரங்களின் உட்பொருளைச் சொல்வதனால் இப்பெயர் பெற்றது. (எட்டு ரகசியங்கள்)

காலம்

இந்நூல் பொயு 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று பொதுவாக மதிப்பிடப்படுகிறது.

ஆசிரியர்

ரகஸ்யத்ரயம் என்னும் நூலின் ஆசிரியர் பரகால நல்லான். இவரைத் 'திருவரங்கச் செல்வனார்' என்றும், 'பரகாலாச்சார்யர்' என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த நூல் 'ரகஸ்யார்த்த ப்ரதீபிகை' என்றும், பரகால நல்லான் ரகஸ்யம் என்னும் கூறுவதுண்டு

உள்ளடக்கம்

வைணவர்களுக்கு மூன்று மந்திரங்கள் முக்கியமானவை. அவை மந்திரத்ரயம் எனப்படுகின்றன. அவை திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் ஆகியவை. அவற்றின் பொருளை விளக்கம் நூல். திருமந்திரம் ஓம் நமோ நாராயணாய. இந்த மந்திரங்களை பொருள்கொள்ளும் முறை இந்நூலில் பேசப்படுகிறது.

உசாத்துணை