அரநாதர்: Difference between revisions
From Tamil Wiki
Logamadevi (talk | contribs) No edit summary |
m (Reviewed by Jeyamohan) |
||
Line 28: | Line 28: | ||
* https://en.encyclopediaofjainism.com/index.php/18._Arahnath_Swami | * https://en.encyclopediaofjainism.com/index.php/18._Arahnath_Swami | ||
{{ | {{finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 20:05, 9 April 2022
அரநாதர் சமண சமயத்தின் பதினெட்டாவது தீர்த்தங்கரர்.
புராணம்
அரநாதர், இஷ்வாகு குலமன்னர் சுதர்சனருக்கும், இராணி மித்திரதேவிக்கும், அஸ்தினாபுரம் நகரத்தில் பிறந்தவர். சித்த புருஷராக விளங்கிய அரநாதர், கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, அறிவொளி அடைந்து, 84,000 ஆண்டுகள் வாழ்ந்து, சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.
கல்வெட்டு
மதுராவில், பொ.யு, 157 கல்வெட்டுடன் ஒரு பழைய ஸ்தூபி உள்ளது. தேவர்களால் கட்டப்பட்ட ஸ்தூபியில் தீர்த்தங்கரரான அரநாத்தின் உருவம் அமைக்கப்பட்டதாக இந்தக் கல்வெட்டு பதிவு செய்கிறது. இருப்பினும், யஷ்ஸ்டிலகம் நூலில் சோமதேவ சூரியும், விவித தீர்த்த கல்ப நூலில் ஜினபிரபா சூரியும் சுபர்ஷ்வநாதருக்காக எழுப்பப்பட்ட ஸ்தூபி என்று கூறினர்.
அடையாளங்கள்
- உடல் நிறம்: தங்க நிறம்
- லாஞ்சனம்: மீன்
- மரம்: மா மரம்
- உயரம்: 30 வில் (90 மீட்டர்)
- கை: 120
- முக்தியின் போது வயது: 84000
- முதல் உணவு: சக்ரபூரின் அரசர் அபராஜித்தர் அளித்த கீர்
- தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 30 (கும்பராயா)
- யட்சன்: மகேந்திர தேவ்
- யட்சினி: விஜயா தேவி
கோயில்கள்
- அரநாதர் கோயில், அஸ்தினாபுரம்
- சதுர்முக பசதி, அரநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சதுர வடிவக் கோயில், கர்நாடகா.
- பிரசின்படா கோயில், ஹஸ்தினாபூர், உத்தரபிரதேசம்.
உசாத்துணை
✅Finalised Page