under review

ஜுல்பிகா ஷெரீப்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
Line 2: Line 2:
ஜுல்பிகா ஷெரீப் (முனையூர் அன்பு ஜுல்பி, முனையூராள், முனையூர் மல்லிகை) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர், ஊடகவியலாளர்.
ஜுல்பிகா ஷெரீப் (முனையூர் அன்பு ஜுல்பி, முனையூராள், முனையூர் மல்லிகை) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர், ஊடகவியலாளர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
ஜுல்பிகா ஷெரீப் இலங்கை அம்பாறை மாவட்டம் கல்முனையில் பிறந்தார். கல்முனை ஜீ.எம்.ஜீ பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்றார். கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலையில் உயர்கல்வி கற்றார். காமல் பற்றிமாக் கல்லூரியில் உயர்கல்வி கற்றார். ஆங்கிலம் இதழியல், உளவியல் தொடர்பான வழிகாட்டல் ஆலோசனை போன்றவற்றில் இளமாணிப் பட்டம் பெற்றார். ஆங்கிலத்தில் பயிற்றப்பட்ட கல்விமாணி, முதுமாணி பட்டதாரி.  
ஜுல்பிகா ஷெரீப் இலங்கை அம்பாறை மாவட்டம் கல்முனையில் பிறந்தார். கல்முனை ஜீ.எம்.ஜீ பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்றார். கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலையில் உயர்கல்வி கற்றார். காமல் பற்றிமாக் கல்லூரியில் உயர்கல்வி கற்றார். ஆங்கிலம் இதழியல், உளவியல் தொடர்பான வழிகாட்டல் ஆலோசனை போன்றவற்றில் இளமாணிப் பட்டம் பெற்றார்.  கல்விமாணி, முதுமாணி பட்டதாரி.  
== அமைப்புச் செயல்பாடுகள் ==
== அமைப்புச் செயல்பாடுகள் ==
* பாடசாலை சாரணியம், சர்வோதயம், தேசிய சேவைகள் மன்றம் போன்ற அமைப்புகளோடு சேர்ந்து கல்வி கலை இலக்கிய கலாசார சமூகப் பணிகளில் ஈடுபட்டார்.  
* பாடசாலை சாரணியம், சர்வோதயம், தேசிய சேவைகள் மன்றம் போன்ற அமைப்புகளோடு சேர்ந்து கல்வி கலை இலக்கிய கலாசார சமூகப் பணிகளில் ஈடுபட்டார்.  

Revision as of 08:04, 21 May 2024

ஜுல்பிகா ஷெரீப்

ஜுல்பிகா ஷெரீப் (முனையூர் அன்பு ஜுல்பி, முனையூராள், முனையூர் மல்லிகை) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர், ஊடகவியலாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஜுல்பிகா ஷெரீப் இலங்கை அம்பாறை மாவட்டம் கல்முனையில் பிறந்தார். கல்முனை ஜீ.எம்.ஜீ பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்றார். கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலையில் உயர்கல்வி கற்றார். காமல் பற்றிமாக் கல்லூரியில் உயர்கல்வி கற்றார். ஆங்கிலம் இதழியல், உளவியல் தொடர்பான வழிகாட்டல் ஆலோசனை போன்றவற்றில் இளமாணிப் பட்டம் பெற்றார். கல்விமாணி, முதுமாணி பட்டதாரி.

அமைப்புச் செயல்பாடுகள்

  • பாடசாலை சாரணியம், சர்வோதயம், தேசிய சேவைகள் மன்றம் போன்ற அமைப்புகளோடு சேர்ந்து கல்வி கலை இலக்கிய கலாசார சமூகப் பணிகளில் ஈடுபட்டார்.
  • கல்முனை மாதர் பணியகம், மாதர் அபிவிருத்தி சங்கம், பெண் எழுத்தார்வலர் சங்கம் ஆகியவற்றின் தலைவி.
  • கல்முனை கலை இலக்கிய வட்டத்தினை 1990-ல் ஆரம்பித்தார்.
  • கல்முனை கிராமோதய சபைத் தலைவர். சமாதான நீதவானாகவும் செயற்பட்ட இவர் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் நாயகமாகவும் அம்பாறை மாவட்ட செய்தியாளர் சங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவராகவும், பெண்கள் தொடர்பாடலுக்குப் பொறுப்பாகவும் உள்ளார்.

இதழியல்

  • சாளரம், இறக்கை எனும் கையெழுத்துச் சஞ்சிகைகளை வெளியிட்டார்.
  • 1985-ல் இளநிலா எனும் காலாண்டு இதழினை வெளியிட்டார்.
  • புதுயுகம் என்னும் சஞ்சிகை இவரின் ஆதரவின் கீழ் வெளிவந்தது.
  • கல்முனை அல்-பஹ்ரியா மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பித்த காலங்களில் 1992-ல் The Moon (த மூன்) எனும் ஆங்கில சஞ்சிகையினையும், 1995 - 2009 வரை ”குருத்து” எனும் காலாண்டு இதழினையும் கல்லூரி சார்பாக வெளியிட்டார்.
  • இக்கல்லூரியின் 60ஆவது ஆண்டு வைரவிழா நினைவு மலருக்கு இவர் அசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார்.
  • 1994-ல் தனது வானொலி மேடைக் கவியரங்குகளில் பாடிய கவிதைகளில் சிலவற்றை தொகுத்து ”கூவிக் களித்தவை” எனும் பெயரில் கவிதை நூல் ஒன்றை வெளியிட்டார்.

இலக்கிய வாழ்க்கை

ஜுல்பிகா ஷெரீப் முனையூர் அன்பு ஜுல்பி, முனையூராள், முனையூர் மல்லிகை ஆகிய புனைபெயர்களில் எழுதினார். ஐந்து வயதில் இலங்கை வானொலியின் சிறுவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம் என பல்வேறு துறைகளில் எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருகிறார். இவரின் ஆக்கங்கள் உள்நாட்டு வெளிநாட்டு பத்திரிகை சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. பல மேடை, வானொலி கவியரங்குகளிலும் இவர் கலந்துகொண்டு கவிபாடியுள்ளார்.

விருதுகள்

2009-ம் ஆண்டு கல்முனை பிரதேச சாகித்திய விருது. 2009 சாமஸ்ரீ தேசமானிய விருது. 2009 ஒற்றுமைக்கான உறவுப்பாலம் விருது ஊடக விருதும், தேசிய சேவை மன்றத்தினூடாக சிறுகதைக்கான ஜனாதிபதி விருது கவிக்குயில், கலைத்தாரகை, கவிமணி, கவிநங்கை, வரகவி, கலாஜோதி, கலைத்தீபம், சமூகஜோதி, இரத்தின தீபம், கலாரத்னம் போன்ற பட்டங்களையும் பல அமைப்புக்களினால் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் உயரிய விருதான தேசமான்ய விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.