being created

பாசவதைப் பரணி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 12: Line 12:

(தாழிசை, 57)
(தாழிசை, 57)
சிவஞான பாலைய தேசிகர் அம்மவையம்மையாரென்பவரின் மகன். மயிலம் பாலசித்தரென்னும் சித்தரின் சீடர். ற்று,  மயிலம் அருகே பொம்மையபாளையமெனப்படும்  பொம்மபுரம் மடத்தில்  வீரசைவஞானாசிரியராக  இருந்தவர். அவருக்குரிய மடங்கள், பொம்மபுரம், மயிலம், காஞ்சீபுரம், செய்யூர், சிதம்பரம் போன்ற  இடங்களில் உள்ளன.

== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
Line 18: Line 20:
== நூல் அமைப்பு ==
== நூல் அமைப்பு ==

பாசவதைப்பரணி, காப்புச் செய்ய்ளுடன், கடவுள்வாழ்த்து முதலிய பத்து உறுப்புக்களையும் 737 தாழிசைகளையும் உடையது.

Revision as of 19:07, 18 April 2024

பாசவதைப்பரணி உருவகமாக அமைந்த பரணி நூல். உலகப்பற்றுடனும், பாசத்துடனும் போரிட்டு வென்று சிவஞானம் பெறுவதைக் கூறுவது. திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்டது.

பெயர்க்காரணம்

பாசவதைப்பரணி பரணி என்னும் சிற்றிலக்கிய வகைமையச் சார்ந்தது. பகைவருடன் போரிடுவதைப் பாடாமல் ஆன்மசாதனைக்குப் பகைவர்களான பாசம், கன்மம், போன்றவற்றின்மீது போரிட்டு வெல்வதைப் பாடுவதால் பாசவதைப்பரணி எனப் பெயர் பெற்றது.

சிவஞான பாலைய தேசிகர்

நூலின் பாட்டுடைத் தலைவர் சிவஞான பாலைய தேசிகர் சார்ந்தார் பாசத்தைப் போக்கிச் சிவஞானம் அருளிய செயலை உருவக வகையில் அமைத்துப் பாசமன்னனொடு போரிட்டு வென்றதாகப் பாடப்பெற்றது.

தேசம் பரித்த சிவஞான தேசி கன்பார் வந்தெமது

பாசம் பறித்த திறம்பாடப் பைம்பொற் கபாடந் திறமினோ”

(தாழிசை, 57)

சிவஞான பாலைய தேசிகர் அம்மவையம்மையாரென்பவரின் மகன். மயிலம் பாலசித்தரென்னும் சித்தரின் சீடர். ற்று, மயிலம் அருகே பொம்மையபாளையமெனப்படும் பொம்மபுரம் மடத்தில் வீரசைவஞானாசிரியராக இருந்தவர். அவருக்குரிய மடங்கள், பொம்மபுரம், மயிலம், காஞ்சீபுரம், செய்யூர், சிதம்பரம் போன்ற இடங்களில் உள்ளன.

ஆசிரியர்

பாசவதைப்பரணியை இயற்றியவர் திருவாரூர் வைத்தியநாத தேசிகர்.

நூல் அமைப்பு

பாசவதைப்பரணி, காப்புச் செய்ய்ளுடன், கடவுள்வாழ்த்து முதலிய பத்து உறுப்புக்களையும் 737 தாழிசைகளையும் உடையது.

இந்நூல், பாசத்தைப் பாசமன்னனாகவும் புல்லறிவைத் துன்மதி யென்னும் மந்திரியாகவும், காமம், கோபம், லோபம், மோகம், அகங்காரம், மாற்சரியம் என்னும் உட்பகை ஆறையும் பாசமன்னனின் படைத்தலைவர்களாகவும், ஞானத்தைச் சிவஞானதேசிகருடைய தண்டநாயகராகவும், நிருபகம், பொறை, சந்தோடம், விவகார பராமுகம், சாந்தம், சீலம் முதலியவற்றை அந்தத் தண்டநாயகருக்கு அடங்கிய படைத்தலைவர்களாகவும், ஞானத்தால் பாசம் நீங்கியதை ஞானவிநோதன் சேனைகளால் பாசமன்னன் அழிந்ததாகவும் உருவகம்செய்து அதற்கேற்ப வரலாற்றைத் தொடர்புபடுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

பாடல்நடை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.