பின்னங்கள்: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 49: | Line 49: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
[https://web.archive.org/web/20091020091908/http://geocities.com/Athens/5180/numeral.html வெப் ஆர்கைவ் தளம்] | *[https://ia800905.us.archive.org/26/items/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM3kZpy.TVA_BOK_0008346/TVA_BOK_0008346_கணக்கதிகாரம்.pdf கணக்கதிகாரம் நூல்: ஆர்கைவ் தளம்] | ||
{{ | *[https://web.archive.org/web/20091020091908/http://geocities.com/Athens/5180/numeral.html வெப் ஆர்கைவ் தளம்] | ||
{{Second review completed}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 07:07, 17 April 2024
முழு எண் ஒன்றின் பகுதி அல்லது பகுதிகள் பின்னங்கள் என்று அழைக்கப்பட்டன. கீழ்வாய் எண்கள் என்ற பெயரும் இவற்றுக்கு உண்டு.
பின்ன எண்கள்
கணக்கியலில் ஒரு எண்ணைப் பற்றிக் குறிப்பிடும்போது இரண்டில் ஒரு பகுதி (1/2) என்பதையோ, மூன்றில் ஒரு பகுதி (1/3) என்பதையோ குறிக்க பின்ன எண்களைப் பயன்படுத்தினர்.
இவற்றில் கிடைக்கோட்டுக்கு மேல் உள்ள எண் தொகுதி என்றும், கீழ் உள்ள எண் பகுதி என்றும் பெயர் பெறும். இவ்வகைப் பின்ன எண்கள் தொகுதி- பகுதி வடிவில் மட்டுமல்லாது, தசம பின்னங்களாக, சதவிகிதங்களாக, அடுக்கேற்ற எண்களாகவும் எழுதப்பட்டன.
சான்று: 1/100 = 0.01, 1%, 10-2
பின்னங்கள் - எண்ணுப் பெயர்கள்
பின்னங்கள் கீழ்க்காணும் எண்ணுப் பெயர்களால் அழைக்கப்பட்டன.
- 1 - ஒன்று
- 3/4 - முக்கால்
- 1/2 - அரை
- 1/4 - கால்
- 1/5 - நாலுமா
- 3/16 - மூன்று வீசம்
- 3/20 - மூன்றுமா
- 1/8 - அரைக்கால்
- 1/10 - இருமா
- 1/16 – மாகாணி (வீசம்)
- 1/20 - ஒருமா
- 3/64 – முக்கால் வீசம்
- 3/80 - முக்காணி
- 1/32 - அரைவீசம்
- 1/40 - அரைமா
- 1/64 - கால் வீசம்
- 1/80 - காணி
- 3/320 - அரைக்காணி முந்திரி
- 1/160 - அரைக்காணி
- 1/320 - முந்திரி
- 1/102400 – கீழ் முந்திரி
- 1/2150400 - இம்மி
- 1/23654400 - மும்மி
- 1/165580800 - அணு
- 1/1490227200 - குணம்
- 1/7451136000 - பந்தம்
- 1/44706816000 - பாகம்
- 1/312947712000 - விந்தம்
- 1/5320111104000 - நாகவிந்தம்
- 1/74481555456000 - சிந்தை
- 1/489631109120000 - கதிர்முனை
- 1/9585244364800000 - குரல்வளைப்படி
- 1/575114661888000000 - வெள்ளம்
- 1/57511466188800000000 - நுண்மணல்
- 1/2323824530227200000000 - தேர்த்துகள்
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.