தமிழ்நாடு அரசியல் காலக்கோடு: Difference between revisions
Line 49: | Line 49: | ||
|- | |- | ||
|1937 | |1937 | ||
| | |இடைக்கால தற்காலிக அமைச்சகம் | ||
|கர்மா வெங்கட ரெட்டி நாயுடு | |கர்மா வெங்கட ரெட்டி நாயுடு | ||
|- | |- |
Revision as of 12:18, 2 April 2024
தமிழ்நாடு அரசியல் (19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் தற்போது வரை) பிரிடிஷாரின் வருகைக்குப் பின் ஆரம்பமானது.
வரலாறு
பிரிட்டிஷ் வருகைக்குப் பின்னான காலகட்டத்தில் அவர்கள் ஆட்சி செய்வதற்கு ஏதுவாக சட்டம், நிர்வாகத்திற்கான வரைவை உருவாக்கினர். இதில் மெல்ல இந்தியர்களுக்கான இடம் உருவானது. 1888-ல் காங்கிரஸ் கட்சி உருவான பின் மேலும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆட்சி அதிகாரத்தில் உயர்ந்தது.
தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234 மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்டமன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.
முக்கிய அரசியல் கட்சிகள்
தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) ஆகியவை உள்ளன. தவிர தேசியக்கட்சிகளான காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகியவையும் உள்ளன. இவை பொதுவாக இங்குள்ள மாநிலக் கட்சிகளுடன் கூட்டணியாக செயல்படுகின்றன.
இந்தியக் குடியரசுக் கட்சி, மார்க்சிய கட்சிகள், அம்பேத்கர் மக்கள் இயக்கம், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, நாம் தமிழர் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக் கட்சி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளும் உள்ளன.
காலக்கோடு
விடுதலைக்கு முன்
ஆண்டுகள் | கட்சி | சென்னை மாகாண முதலமைச்சர் |
---|---|---|
1920 - 1921 | நீதிக்கட்சி | சுப்பராயலு ரெட்டியார் |
1921 - 1926 | நீதிக்கட்சி | பனகல் ராஜா |
1926 - 1930 | சுயேட்சை | பி.சுப்பராயன் |
1930 - 1932 | நீதிக்கட்சி | பி. முனுசாமி நாயுடு |
1932 - 1934 | நீதிக்கட்சி | பொப்பிலி ராஜா |
1934 - 1936 | நீதிக்கட்சி | பொப்பிலி ராஜா |
1936 | நீதிக்கட்சி | பி.டி.ராஜன் |
1936 - 1937 | நீதிக்கட்சி | பொப்பிலி ராஜா |
1937 | இடைக்கால தற்காலிக அமைச்சகம் | கர்மா வெங்கட ரெட்டி நாயுடு |
1937 - 1939 | இந்திய தேசிய காங்கிரஸ் | சி. ராஜகோபாலாச்சாரி |
1939 - 1946 | இந்திய தேசிய காங்கிரஸ் | ஜனாதிபதி ஆட்சி |
1946 - 1947 | இந்திய தேசிய காங்கிரஸ் | தெங்குட்டுரி பிரகாசம் |
விடுதலைக்குப் பின்
ஆண்டுகள் | கட்சி | முதலமைச்சர் |
---|---|---|
1947-1949 | இந்திய தேசிய காங்கிரஸ் | ஓ.பி. ராமசாமி ரெட்டியார் |
ஏப்ரல் 1949 - ஜனவரி1950 | இந்திய தேசிய காங்கிரஸ் | பி.எஸ். குமாரசாமி ராஜா |
ஜனவரி 1950 - ஏப்ரல் 1952 | இந்திய தேசிய காங்கிரஸ் | பி.எஸ்.குமாரசாமி ராஜா |
1952 - 1954 | இந்திய தேசிய காங்கிரஸ் | சி. ராஜகோபாலச்சாரி |
1954 - 1957 | இந்திய தேசிய காங்கிரஸ் | கு. காமராஜ் |
1957 - 1962 | இந்திய தேசிய காங்கிரஸ் | கு. காமராஜ் |
மார்ச் 1962 - அக்டோபர் 1963 | இந்திய தேசிய காங்கிரஸ் | கு. காமராஜ் |
1963 - 1967 | இந்திய தேசிய காங்கிரஸ் | எம். பக்தவச்சலம் |
1967 - 1969 | திராவிட முன்னேற்றக் கழகம் | சி.என். அண்ணாதுரை |
பிப்ரவரி 1969 - பிப்ரவரி 1969 | திராவிட முன்னேற்றக் கழகம் | வி.ஆர். நெடுஞ்செழியன் |
பிப்ரவரி 1969 - ஜனவரி 1971 | திராவிட முன்னேற்றக் கழகம் | மு.கருணாநிதி |
1971 - 1976 | திராவிட முன்னேற்றக் கழகம் | மு.கருணாநிதி |
ஜனவரி 1976 - ஜூன் 1977 | ஜனாதிபதி ஆட்சி | ஆளுநர் |
1977 - 1980 | அ.இ.அ.தி.மு.க | எம்.ஜி.ராமச்சந்திரன் |
பிப்ரவரி 1980 - ஜூன் 1980 | ஜனாதிபதி ஆட்சி | ஆளுநர் |
1980 - 1984 | அ.இ.அ.தி.மு.க | எம்.ஜி.ராமச்சந்திரன் |
பிப்ரவரி 1985 - டிசம்பர் 1987 | அ.இ.அ.தி.மு.க | எம்.ஜி. ராமச்சந்திரன் |
டிசமப்ர் 1987 - ஜனவரி 1988 | அ.இ.அ.தி.மு.க | வி.ஆர்.நெடுஞ்செழியன் |
ஜனவரி 1988 - ஜனவரி 1988 | அ.இ.அ.தி.மு.க | ஜானகி ராமச்சந்திரன் |
ஜனவரி 1988 - ஜனவரி 1989 | ஜனாதிபதி ஆட்சி | ஆளுநர் |
ஜனவரி 1989 - ஜனவரி 1991 | திராவிட முன்னேற்றக் கழகம் | மு.கருணாநிதி |
ஜனவரி 1991 - ஜூன் 1991 | ஜனாதிபதி ஆட்சி | ஆளுநர் |
1991 - 1996 | அ.இ.அ.தி.மு.க | ஜெ. ஜெயலலிதா |
1996 - 2001 | திராவிட முன்னேற்றக் கழகம் | மு.கருணாநிதி |
மே 2001 - செப்டம்பர் 2001 | அ.இ.அ.தி.மு.க | ஜெ. ஜெயலலிதா |
செப்டம்பர் 2001 - மார்ச் 2002 | அ.இ.அ.தி.மு.க | ஓ.பன்னீர் செல்வம் |
2002 - 2006 | அ.இ.அ.தி.மு.க | ஜெ. ஜெயலலிதா |
2006 - 2011 | திராவிட முன்னேற்றக் கழகம் | மு.கருணாநிதி |
2011 - 2014 | அ.இ.அ.தி.மு.க | ஜெ. ஜெயலலிதா |
29 Sep 2014 22 May 2015 | அ.இ.அ.தி.மு.க | ஓ.பன்னீர் செல்வம் |
மே 2015 - மே 2016 | அ.இ.அ.தி.மு.க | ஜெ. ஜெயலலிதா |
மே 2016 - டிசம்பர் 2016 | அ.இ.அ.தி.மு.க | ஜெ.ஜெயலலிதா |
டிசம்பர் 6, 2016 - பிப்ரவரி 15, 2017 | அ.இ.அ.தி.மு.க | ஓ.பன்னீர் செல்வம் |
பிப்ரவரி 2017 - மே 2021 | அ.இ.அ.தி.மு.க | எடப்பாடி கே. பழனிச்சாமி |
மே 2021 முதல் தற்போது வரை | திராவிட முன்னேற்றக் கழகம் | மு.க.ஸ்டாலின் |
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.