under review

ஓஷோ: Difference between revisions

From Tamil Wiki
Line 25: Line 25:


1986-ல் ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வந்தார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுத்தது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் சென்றார். கிரீஸில் தங்க முற்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தின. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை. 21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடை விதித்தன. அவர் வந்திறங்கிவிட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. ஜூலை 29, 1986-ல் பம்பாய்க்குத் திரும்பினார்.
1986-ல் ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வந்தார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுத்தது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் சென்றார். கிரீஸில் தங்க முற்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தின. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை. 21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடை விதித்தன. அவர் வந்திறங்கிவிட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. ஜூலை 29, 1986-ல் பம்பாய்க்குத் திரும்பினார்.
===== ஓஷோ =====
தன் இறுதிக்காலத்தில் தன்னை ஓஷோ என்று அழைத்துக் கொண்டார். தான் கடவுள் இல்லை என்றும், தன்னை யாரும் வழிபடக்கூடாது என்றும் சொன்னார்.


== எழுத்து ==
== எழுத்து ==

Revision as of 14:17, 26 March 2024

ஓஷோ
ஓஷோ

ஓஷோ (பகவான் ரஜ்னீஷ்) (சந்திர மோகன் ஜெயின்) (டிசம்பர் 11, 1931 - ஜனவரி 19, 1990) ஆன்மிகஞானி, சிந்தனையாளர். சமூக அமைப்புகளின் மீறலாக, எதிர்ப்புக் குரலாக ஓஷோ இருந்தார். ஓஷோ கம்யூன், ரஜ்னீஷ்புரம் வழியாக தன் சிந்தனைகளை, தான் நம்பிய வாழ்க்கை முறையை மக்களிடம் கொண்டு சென்றார். டைனமிக் தியானத்தை அறிமுகப்படுத்தியவர். அன்றிருந்த விரைப்பான மைய ஆன்மிக முறைகளுக்கு மாற்றான உலகலாவிய ஆன்மிக முறையை முன்வைத்தார்.

ஓஷோ தன் தாயுடன்

வாழ்க்கைக் குறிப்பு

ஓஷோவின் இயற்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். ஓஷோ மத்திய பிரதேசம் மாநிலம் குச்வாடா என்ற சிற்றூரில் டிசம்பர் 11, 1931-ல் பிறந்தார். குச்வாடாவில் தன் தாய் வழி தாத்தா, பாட்டியுடன் வளர்ந்தார். பெற்றோர்கள் கடர்வாடாவில் வசித்தனர். தாத்தா இறந்த பிறகு பாட்டியுடன் கடர்வாடா சென்றார். 1956-ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்றார். சாகர் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பட்டப்படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்றார்.

பெயர்க்காரணம்

ஓஷோ பிறந்த இடம்

”ஓஷியானிக்” என்ற சொல்லிருந்து தம் பெயர் உருவானதாக ஓஷோ குறிப்பிட்டார். ஓஷியானிக் என்றால் கடலில் கரைந்து போவது எனப் பொருள். இச்சொல் அனுபவத்தை குறிக்கிறது. ஆனால் அனுபவிப்பவரை குறிக்கவில்லை. எனவே “ஓஷோ” என்ற சொல்லை உருவாக்கினார். அமெரிக்காவிலிருந்து திரும்பி இந்தியா வந்தபின் தன்னை ஓஷோ என்று அழைத்துக் கொண்டார்.

ஆசிரியப்பணி

1957-ல் ரெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக நியமனம் பெற்றார். 1958-ல் ஜபல்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராக நியமனம் பெற்றார். 1966-ல் வேலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஆன்மிகத்தில் ஈடுபட்டார்.

ஆன்மிக வாழ்க்கை

ஓஷோ சிறு வயது முதல் தியானத்தில் ஈடுபட்டார். தன் இருபத்து ஒன்று வயதில் (மார்ச் 21, 1953) ஞானம் அடைந்தார். 1966 முதல் முழு நேரமாக ஆன்மிகப்பணியில் ஈடுபட்டார்.

ஓஷோ காலையில் தன் சிஷ்யர்களை சந்திக்கும் காட்சி
புது சந்நியாசம்

1970-1974 வரை மும்பை ஜபல்பூரில் வசித்தார். 1970-ல் மும்பையில் டைனமிக் தியானம் என்ற முறையை அறிமுகப்படுத்தினார். வேகமாக மூச்சுவிடுதலும், இசை மற்றும் நடனம் இதில் முக்கியப்பங்கு வகித்தது. செப்டம்பர் 26, 1970-ல் ஓஷோ தனக்குக் கீழ் முதல் சிஷ்யர்கள் குழுவை தோற்றுவித்தார். அவர்கள் புது சந்நியாசிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் வெளி உலகை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. பெயர் மாற்றி காவி உடை அணிந்தனர். ஓஷோ உருவப்படம் கொண்ட மாலையைக் கழுத்தில் அணிந்தனர். ஓஷோவின் முதல் சிஷ்யை மா யோக லஷ்மி அவருடைய செயலாளராக இருந்தார். கடந்த காலத்தை ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை மேல் சுமத்தும் மனக்கட்டுத் திட்டங்களை, நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டுமென்ற கொள்கையைக் கொண்ட அமைப்பாக இது இருந்தது. 1974-ல் வரை பூனேவிற்கு இடம்பெயர்ந்தார். 1981-ல் அவரின் செயலாளராக மா யோக ஆனந்த ஷீலா நியமிக்கப்பட்டார். அமெரிக்காவிற்கு இடம்பெயர்வது வரை ஓஷோ உரைகள் ஆற்றுவதையும் பேசுவதையும் நிறுத்தினார்.

ரஜனீஷ்புரம்
ஓஷோ தன் சிஷ்யை ஷீலாவுடன்

இந்தியாவில் எழுந்த எதிப்புக் குரலின் காரணமாக ஐக்கிய அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்திற்கு இடம்பெயர்ந்தார். அதன் மத்தியப்பகுதியில் 1981-ல் ஷீலாவின் உதவியுடன் ரஜ்னீஷ்புரம் என்ற நகரத்தை அமைத்தார். அதில் ஐயாயிரம் பேர் கொண்ட கம்யூன் உருவானது. கோடைகால கொண்டாட்டம் அங்கு நடத்தப்பட்டபோது உலகம் முழுவதுமிலிருந்து பதினைந்தாயிரம் பேர் பங்கேற்றனர். அதன் செயல்பாட்டுத்தன்மையைப் பற்றிய சர்ச்சையில் அதன் மேல் எதிர்ப்பு உருவாகியது. மேய்ச்சல் நிலமான ஓரிகான் பிரதேசத்தில் கட்டிடங்களும், குடியேற்றங்களும் கட்டப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. அதனால் ரஜ்னீஷ்புரத்திலிருந்து ஆன்டிலோப் பகுதியில் சில வீடுகள் வாங்கப்பட்டு அங்கு சீடர்கள் தங்க ஷீலா ஏற்பாடுகள் செய்தார்.

செப்டம்பர் 14, 1985-ல் ஓஷோவின் செயலாளரும், கம்யூனின் பொறுப்பிலிருந்த சில அங்கத்தினர்களும் திடீரென கம்யூனை விட்டு வெளியேறினர். கொலை முயற்சி, டெலிபோன் உரையாடலை பதிவு செய்தல், விஷம் கொடுத்தல், தீ வைத்தல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் அதன்பின் ஈடுபட்டனர். நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஓஷோ போலீஸ் துறையினரை அழைத்தார். அக்டோபர் 28-ல் நார்த் கரோலினாவில் உள்ள சார்லெட்டில் ஓஷோ கைது செய்யப்பட்டார். பன்னிரெண்டு நாட்கள் காவலிலிருந்த ஓஷோவிற்கு ”தாலியம்” என்ற விஷம் கொடுக்கப்பட்டதாக நம்பப்பட்டது.

1986-ல் ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வந்தார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுத்தது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் சென்றார். கிரீஸில் தங்க முற்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தின. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை. 21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடை விதித்தன. அவர் வந்திறங்கிவிட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. ஜூலை 29, 1986-ல் பம்பாய்க்குத் திரும்பினார்.

ஓஷோ

தன் இறுதிக்காலத்தில் தன்னை ஓஷோ என்று அழைத்துக் கொண்டார். தான் கடவுள் இல்லை என்றும், தன்னை யாரும் வழிபடக்கூடாது என்றும் சொன்னார்.

எழுத்து

ஓஷோ எவ்வித முன்தயாரிப்பும் இல்லாமல் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்து சொற்பொழிவு நிகழ்த்தினார். இவரது சொற்பொழிவுகள் சீடர்களால் எழுதப்பட்டு நூல்களாக வெளிவந்தன, பதிவுசெய்யப்பட்டு ஒலிப்பேழைகளாக வெளிவந்தன. தம்மபதம், கீதை ஆகியவற்றுக்கு உரை எழுதினார். தாவோ, பெளத்தம், ஜென், ஏசு, சூஃபித்துவம், உபநிடதங்கள், கபீர், சீக்கியம், யோகம், தியான முறைகள், வாழும் முறைகள், காதல், காமம் என பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் எழுதினார்.

ஓஷோ

தத்துவம்

ஓஷோ தத்துவம், ஆன்மிகம், இலக்கியம் ஆகிய மூன்றும் முயங்கும் தளத்திலிருந்து பேசிய ஆன்மிகவாதி. சொற்பொழிவாளர். விரிந்த வாசிப்பைக் கொண்டவர். ஆனால் எளிமையாக உரையாற்றக்கூடியவர். சோஷியலிசம், காந்தியம், ஒழுக்கவியல் ஆகியவற்றுக்கு எதிராக வலுவான கருத்துக்களை முன்வைத்தார். சராசரி மனிதர்களுக்காக அல்லாமல் அசாதாரணமான தனிமனிதர்களுக்கான குரலாக இருந்தார். மாற்று ஆன்மிகத்தை முன்வைத்தார். அன்றிருந்த மைய ஆன்மிக முறைகளுக்கு மாற்றான எதிரான உலகலாவிய ஆன்மிக முறையை முன்வைக்கக் கூடியவராக இருந்தார். டைனமிக் தியானமுறையை கற்பித்தார். தன் கடைசி காலகட்டத்தில் தன்னை ஞான ஆசிரியனாக முன்வைத்தார்.

மறைவு

ஓஷோ ஜனவரி 19, 1990-ல் புனேவில் இதய நோயால் பாதிக்கப்பட்டு காலமானார். ஓஷோவின் சமாதி மீது ”ஓஷோ பிறக்கவுமில்லை இறக்கவுமில்லை” என்ற வரி பொறிக்கப்பட்டது. சமாதி புனேவிலுள்ள கொரீகன் பூங்காவில் உள்ளது.

திரைப்படங்கள்

ஓஷோ பற்றிய ஆவணப்படங்கள் அவர் வாழ்ந்த காலத்திலும், அதன் பின்னும் எடுக்கப்பட்டது.

  • 1974: A Contemporary Guru: Rajneesh (documentary) (David M. Knipe)
  • 1978: Bhagwan (Robert Hillmann)
  • 1979: Ashram in Poona: Bhagwans Experiment (Wolfgang Dobrowolny)
  • 1981: The God that Fled (BBC broadcast) (documentary series) (Christopher Hitchens)
  • 1987: Fear is the Master
  • 1989: Rajneesh: Spiritual Terrorist (documentary)
  • 1989: Bhagwan Shree Rajneesh: The Man Who Was God (UK documentary series)
  • 2002: Forensic Files
  • 2010: Guru – Bhagwan (A Swiss documentary)
  • 2012: Rajneeshpuram(Oregon Public Broadcasting)
  • 2016: Rebellious Flower (directed by Krishan Hooda)
  • 2018: Wild Wild Country (Netflix documentary series)

நூல் பட்டியல்

(இது முழுமையான பட்டியல் இல்லை)

  • Autobiography of a Spiritually Incorrect Mystic
  • Courage: The Joy of Living Dangerously
  • Meditation: The First and Last Freedom: A Practical Guide to Osho Meditations
  • Love, Freedom, and Aloneness: The Koan of Relationships
  • Creativity (Osho Insights for a New Way of Living
  • The Book of Secrets: 112 Meditations to Discover the Mystery Within
  • Intuition: Knowing Beyond Logic
  • Intimacy: Trusting Oneself and the Other
  • Awareness: The Key to Living in Balance
  • Joy: The Happiness That Comes from Within
  • Emotional Wellness: Transforming Fear, Anger, and Jealousy into Creative Energy
  • Freedom: The Courage to Be Yourself
  • Being in Love: How to Love with Awareness and Relate Without Fear
  • Sex Matters: From Sex to Superconsciousness
  • Maturity: The Responsibility of Being Oneself
  • Body Mind Balancing: Using Your Mind to Heal Your Body
  • Tantra: The Supreme Understanding
  • The Book of Understanding: Creating Your Own Path to Freedom
  • Intelligence: The Creative Response to Now
  • Tantra The Way of Acceptance
  • Fear: Understanding and Accepting the Insecurities of Life
  • OSHO Compassion: The Ultimate Flowering of Love
  • Buddha: His Life and Teachings and Impact on Humanity
  • The Mustard Seed: Discourses on the Sayings of Jesus Taken from the Gospel According to Thomas
  • Tao: The Pathless Path: The Pathless Path
  • Yoga
  • The Buddha Said...: Meeting the Challenge of Life's Difficulties
  • The Book of Women: Celebrating the Female Spirit
  • The Spiritual Path: Buddha Zen Tao Tantra
  • Zen Its History and Teachings
  • The Everyday Meditator: A Practical Guide
  • The Book of Wisdom. Discourses on Atisha's Seven Points of Mind Training
  • The Book of the Secrets, Vol 1: Discourses on 'Vigyana Bhairava Tantra'
  • Living on Your Own Terms: What Is Real Rebellion?
  • Learning to Silence the Mind: Wellness Through Meditation
  • The ABC of Enlightenment: A Spiritual Dictionary for the Here and Now
  • The Book of Children
  • Meditation: The Art of Ecstasy
  • UMA FARMACIA PARA A ALMA
  • The Man Who Loved Seagulls: Essential Life Lessons from the World's Greatest Wisdom Traditions
  • Life, Love, Laughter: Celebrating Your Existence
  • Theologia Mystica: Discourses on the Treatise of St. Dionysius
  • Meditation For Busy People: Stress-Beating Strategies To Calm Your Life
  • Your Answers Questioned: Explorations for Open Minds
  • The Psychology of the Esoteric
  • Tantra Spirituality & Sex
  • Zen: The path of paradox (vol.1 Chapters 1 to 5)
  • The Orange Book: The Meditation Techniques of Bhagwan Shree Rajneesh
  • Emotions: Freedom from Anger, Jealousy and Fear
  • The Way of the White Cloud
  • When the Shoe Fits: Stories of the Taoist Mystic Chuang Tzu
  • Book of the Secrets Two
  • Coming Home to Yourself: A Meditator's Guide to Blissful Living
  • Only One Sky
  • The Art of Living and Dying: Celebrating Life and Celebrating Death
  • Book of the Secrets Three
  • The Diamond Sutra: The Buddha also said...

உசாத்துணை

இணைப்புகள்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.