being created

அரிச்சந்திர புராணம்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
Line 6: Line 6:


== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
[[File:Chakkara mandapam.jpg|thumb|சக்கர மண்டபம் . நன்றி:http://thulasidhalam.blogspot.com/]]
'''"அரிச்சந்திர புராணம்"''' என்னும் இந் நூலை இயற்றியவர் நல்லூர் '''வீரகவிராயர்''' என்பவர். இவர் பாண்டி மண்டலத்தில் இராமநாதபுர மாவட்டத்திலுள்ள நெல்லூரிற் பிறந்து வாழ்ந்தவர் எனத் தெரிகிறது. முற்காலத்தில் இவ்வூர் 'குலோத்துங்க சோழ நல்லூர்' எனப் பெயர் பெற்றிருந்தது.இவருடைய குலம் பொற்கொல்லர் குலம். செந்தமிழ் மொழிப் புலமையிற் சிறந்து கவி பாடும் ஆற்றலும் இவர்பால் அமைந்தது 'வீரன்' என்பது இவரது பிள்ளைத் திருப்பெயர். கவி பாடிப் புகழ்பெற்ற பின்பு 'கவிராயர்' என்ற பட்டம் பெற்றனர். வீரகவிராயர் என்றே அழைக்கப்பட்டார். 'ஆசுகவி'  அவரது பட்டப்பெயர்.
'''"அரிச்சந்திர புராணம்"''' என்னும் இந் நூலை இயற்றியவர் நல்லூர் '''வீரகவிராயர்''' என்பவர். இவர் பாண்டி மண்டலத்தில் இராமநாதபுர மாவட்டத்திலுள்ள நெல்லூரிற் பிறந்து வாழ்ந்தவர் எனத் தெரிகிறது. முற்காலத்தில் இவ்வூர் 'குலோத்துங்க சோழ நல்லூர்' எனப் பெயர் பெற்றிருந்தது.இவருடைய குலம் பொற்கொல்லர் குலம். செந்தமிழ் மொழிப் புலமையிற் சிறந்து கவி பாடும் ஆற்றலும் இவர்பால் அமைந்தது 'வீரன்' என்பது இவரது பிள்ளைத் திருப்பெயர். கவி பாடிப் புகழ்பெற்ற பின்பு 'கவிராயர்' என்ற பட்டம் பெற்றனர். வீரகவிராயர் என்றே அழைக்கப்பட்டார். 'ஆசுகவி'  அவரது பட்டப்பெயர்.


Line 14: Line 13:


==நூல்==
==நூல்==
வீரகவிராசரின் அரிச்சந்திர புராணத்துக்கு மூலநூலாக அரிச்சந்திர வெண்பா என்னும் நூலும் இருந்தது. அரிச்சந்திர புராணம்,
வீரகவிராசரின் அரிச்சந்திர புராணத்துக்கு மூலநூலாக அரிச்சந்திர வெண்பா என்னும் நூலும் இருந்தது. அரிச்சந்திர புராணம்,
 
[[File:Chakkara mandapam.jpg|thumb|சக்கர மண்டபம் . நன்றி:http://thulasidhalam.blogspot.com/]]
#விவாக காண்டம்
#விவாக காண்டம்
#இந்திர காண்டம்
#இந்திர காண்டம்

Revision as of 01:32, 29 March 2022

அரிச்சந்திர சரித்திரம் என்னும் நூல் அரிச்சந்திர புராணம் என வழங்கப்படுகிறது. இந்நூல் புராணம் என்னும் பெயரோடு அச்சிடப்பட்டிருந்தாலும் அது ஒரு காப்பியம். அரிச்சந்திர மன்னனின் கதையைக் கூறும் காப்பியம்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி காலம் வரையில் இந்நூல் பலராலும் விரும்பிப் பயிலப்பட்டுவந்தது. இது வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட தமிழ்க்காப்பியம். 16-ஆம் நூற்றாண்டில் தோன்றியது.

இதன் ஆசிரியர் 'நல்லூர் வீரன் ஆசு கவிராசர்' என அழைக்கப்பட்டவர்.இதன் ஆசிரியர் பெயர் ‘வீரன்’. இவரைக் ‘கவிராசர்’ எனச் சிறப்புப்பெயரால் அழைப்பர்.  ஊர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நல்லூர். இதனைக் குலோத்துங்க சோழநல்லூர் என்றும் கூறுவர்.

ஆசிரியர்

"அரிச்சந்திர புராணம்" என்னும் இந் நூலை இயற்றியவர் நல்லூர் வீரகவிராயர் என்பவர். இவர் பாண்டி மண்டலத்தில் இராமநாதபுர மாவட்டத்திலுள்ள நெல்லூரிற் பிறந்து வாழ்ந்தவர் எனத் தெரிகிறது. முற்காலத்தில் இவ்வூர் 'குலோத்துங்க சோழ நல்லூர்' எனப் பெயர் பெற்றிருந்தது.இவருடைய குலம் பொற்கொல்லர் குலம். செந்தமிழ் மொழிப் புலமையிற் சிறந்து கவி பாடும் ஆற்றலும் இவர்பால் அமைந்தது 'வீரன்' என்பது இவரது பிள்ளைத் திருப்பெயர். கவி பாடிப் புகழ்பெற்ற பின்பு 'கவிராயர்' என்ற பட்டம் பெற்றனர். வீரகவிராயர் என்றே அழைக்கப்பட்டார். 'ஆசுகவி' அவரது பட்டப்பெயர்.

"விதியினர சிழந்த அரிச் சந்திரன் தன் வியன்கதையாம் வெண்கவியை விருத்தமாக்கி அதிவிதமங் கலியுகத்தில் வருச காத்தம் ஆயிரத்து நாநூற்று நாற்பத் தாறில் சதுமறைதேர் புல்லாணித் திருமால் முன்னே சக்கர தீர்த் தக்கரைமேன் மண்ட பத்துள் கதிதருசீர் நல்லூர்வாழ் வீரன் ஆசு கவிராசன் கவியரங்கம் ஏற்றி னானே"

அரிச்சந்திர வெண்பாவை விருத்தமாக்கி திருப்புல்லாணித் திருமால் கோவிலில் சக்கரத் தீர்த்தக்கரை மண்டபத்தில் 1446 ம் வருடம் அரங்கேற்றினார் என்று இந்தப் பாயிரத்தின் மூலம் அறியலாம்.

நூல்

வீரகவிராசரின் அரிச்சந்திர புராணத்துக்கு மூலநூலாக அரிச்சந்திர வெண்பா என்னும் நூலும் இருந்தது. அரிச்சந்திர புராணம்,

சக்கர மண்டபம் . நன்றி:http://thulasidhalam.blogspot.com/
  1. விவாக காண்டம்
  2. இந்திர காண்டம்
  3. வஞ்சனைக் காண்டம
  4. வேட்டஞ்செய் காண்டம்
  5. சூழ்வினைக் காண்டம்
  6. நகர் நீங்கிய காண்டம்
  7. காசி காண்டம்
  8. மயான காண்டம்
  9. மீட்சிக் காண்டம்
  10. உத்தர காண்டம்

என்னும் பத்துக் காண்டங்களைக் கொண்டது. இந்நூலில் 1215 பாடல்கள் உள்ளன.

விவாக காண்டம்

கோசல நாட்டு மன்னன் அரிச்சந்திரன் கன்னோஜ நாட்டு இளவரசி சந்திரமதியை சுயம்வரத்தில் மணம் புரிந்த கதை சொல்லப்படுகிறது. அவர்களுக்கு தேவதாசன் என்ற மகன் பிறக்கிறான்.

இந்திர காண்டம்

தேவலோகத்தில், இந்திரன் அவையில் வசிஷ்டருக்கும் விஸ்வாமித்ரருக்குமான போட்டியில் வசிஷ்டர் அரிச்சந்திரனின் பெருமையையும், வாய்மை தவறாமையயும் புகழ்ந்து கூற, பொறாமையடைந்த இந்திரன் விஸ்வாமித்ரரை அரிச்சந்திரனின் வாய்மையை சோதிக்கப் பணிக்கிறான்.

வஞ்சனைக் காண்டம்

மண்ணுலகுக்கு வந்த விஸ்வாமித்ரர் அரிச்சந்திரனிடம் சென்று யாகத்துக்காக பொருள் தானம் கேட்க, அவர் தருவதாக உறுதியளிக்கிறான். விஸ்வாமித்ரர் வனவிலங்குகளை ஏவி அவனது மாடு கன்றுகளையும் விளைநிலங்களையும் அழித்து மக்களை வறுமைக்குள்ளாக்குகிறார். அரிச்சந்திரன் மக்களுக்கு இரு ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கிறான்.

வேட்டம் செய் காண்டம்

பரிவாரங்களுடன் காட்டில் வன விலங்குகளை அழித்து வேட்டையாடும்போது விஸ்வாமித்ரர் சிருஷ்டித்து, ஏவிய பெரும் பன்றியை அரிச்சந்திரன் காயப்படுத்ததுகிறான். காயம்பட்ட பன்றி முனிவர்களிடம் சென்று முறையிடுகிறது. விஸ்வாமித்ரரின் சோலையில் இளைப்பாறும் அரிச்சந்திரன் தனக்கு வரப்போகும் துன்பத்தைக் தீக்கனவு காண்கிறான். சந்திரமதி எந்நிலையிலும் வாய்மை தவறாதீர் என வேண்டிக்கொள்கிறாள்.

சூழ்வினைக் காண்டம்

காயப்பட்ட பன்றியின் முறையீட்டால் கோபப்பட்ட முனிவர்கள் அரிச்சந்திரனைப் பழி வாங்க எண்ணி இரு பெண்களை சிருஷ்டி செய்து அவர்களை அரிச்சந்திரனை உங்கள் இசையால் மன்னனை மகிழ்வித்து அவனை மணந்து கொள்ளுங்கள் அல்லது அவனது வெண்கொற்றக் குடையைப் பெற்று வாருங்கள் என்று அனுப்பினர். அந்தப் பெண்கள் இசையால் மன்னனை மகிழ்வித்து அந்த வரங்களைக் கேட்க, அவன் மறுக்கிறான். முனிவர்கள் பெரும் கோபத்தோடு சாபமிட வர, அரிச்சந்திரன் வேறு எதை கேடாலும் தருவதாக வாக்களிக்கிறான். முனிவர்கள் அவன் அரசைக் கேட்க, அவன் தன் அரசை அவர்களுக்கு தன் நாட்டைத் தாரை வார்த்து தருகிறான். மரவுரியுடன் நகர் நீங்கும் அரிச்சந்திரனிடம் அவன் வேள்விக்காக முன்னர் தருவதாகச் சொன்ன செல்வத்தையும் முனிவர்கள் கேட்கின்றனர். கொடுத்த வாக்கை காப்பாற்ற அரிசந்திரன் 48 நாட்களுக்குள் தன் நாட்டு எல்லைக்கப்பால் சென்று பொருள் ஈட்டி வர வேண்டும் என விதிக்கிறார்கள் முனிவர்கள்.

நகர் நீங்கிய காண்டம்

அயோத்தி மக்கள் மிகுந்த துயரத்துடன் விடை கொடுக்க, அமைச்சர் சத்யகீர்த்தியும் உடன் வர அரிச்சந்திரன் மனைவி மகனுடன் நகர் நீங்குகிறான். அவன் ஈட்டும் பொருளை வாங்கிவரவும், அவனுக்குத் தொல்லை தந்து சோதிக்கவும் சுக்கிரன் என்பவனை முனிவர்கள் உடன் அனுப்புகிறார்கள்.

காசிக் காண்டம்

காசியில் சந்திரமதியையும் தேவதாசனையும் ஒரு அந்தணனுக்கு அடிமைகளாக விற்று பொருளை சுக்கிரனுக்கு அளிக்கிறான் அரிச்சந்திரன். சுக்கிரனுக்கான கூலிக்காக தன்னை மயானம் காக்கும் வீரபாகு விடம் அடிமையாக விற்று, அவனது கூலியைத் தந்துவிட்டு, மயானத்தை காவல் காக்கிறான்.

மயான காண்டம்

காசியில் அந்தணன் வீட்டில் சந்திரமதியும் தேவதாசனும் அடிமைத்தொழில் செய்துகொண்டிருந்த ஒரு நாள் தர்ப்பை சேகரிக்கச் சென்று பாம்பு கடித்து இறந்த தேவதாசனை அடக்கம் செய்ய சந்திரமதி மயானத்துக்கு வருகிறாள். மயானக் காவலனான அரிச்சந்திரன் தகன கூலி இல்லாமல் அடக்கம் செய்ய மறுக்கிறான். சந்திரமதியின் பொன் தாலியால் அவளை அடையாளம் கண்டுகொள்கிறான். சந்திரமதியின் மேல் காசி மன்னனின் இளம் மகனைக் கொன்ற கொலைப்பழி விழ, தண்டனையை நிறைவேற்ற அரிச்சந்திரன் ஓங்கிய வாள் அவ்ள் கழுத்தில் மாலையாக விழுகிறது.

மீட்சிக் காண்டம்

விஸ்வாமித்ரர் அங்கு தோன்றி, அரிச்சந்திரனும் வசிஷ்டரும் தங்கள் சோதனையில் வென்றதை ஒப்புக்கொள்ள, அரச மைந்தர் இருவரும் உயி பெற்று எழ, தேவர்கள் தோன்றி வாழ்த்துகின்றனர். அரிச்சந்திரன் மீண்டும் மணிமுடி சூடுகிறான்.

உத்தர காண்டம்

விஸ்வாமித்ரர் தான் அரிச்சந்திரனிn தந்தை திரிசங்கு வின் மேல் கொண்ட பகையின் காரணத்தைக் கூறுகிறார்.

இலக்கிய இடம்

பதியி ழந்தனம் பாலனை யிழந்தனம் படைத்த

நிதியி ழந்தனம் இனிஎமக் குளதென நினைக்கும்

கதியி ழக்கினும் கட்டுரை யிழக்கிலே மென்றார்;

மதியி ழந்து தன் வாயிழந் தருந்தவன் மறைந்தான்.'









🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.