being created

விவேகானந்தர்: Difference between revisions

From Tamil Wiki
Line 19: Line 19:
மருத்துவம், நிவாரணம், கல்வித்திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தும் அமைப்பு.
மருத்துவம், நிவாரணம், கல்வித்திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தும் அமைப்பு.

== இலக்கிய வாழ்க்கை ==
== எழுத்து ==
விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன ”The complete works of Swami Vivekananda” என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இவையே பின்னர் எழுந்திரு! விழித்திரு! என்ற தலைப்பில் பதினொரு பகுதிகளாக வெளியிடப்பட்டன.

== தத்துவம் ==
== தத்துவம் ==
விவேகானந்தர் அத்வைத வேதாந்தத்தின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். அனைத்து மதங்களின் மீதும் நம்பிக்கையையும் மரியாதையும் வலியுறுத்தினார். அனைத்து மதங்களும் இறைவனை அடைவதற்கான வழியே என்றார். அனைத்து மதங்களும் சரியாகப் பின்பற்றப்பட்டால் ஒரே இலக்கை நோக்கி இட்டுச் செல்லும் என்றார்.

Revision as of 14:06, 13 March 2024

விவேகானந்தர்

விவேகானந்தர் (நரேந்திரநாத் தத்தா) (சுவாமி விவேகானந்தர்) (ஜனவரி 12, 1863 - ஜூலை 4, 1902) சிந்தனையாளர், ஆன்மிகவாதி. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர். அத்வைத வேதாந்தத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர். இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றினார். அரசியல், இலக்கியம், தத்துவம், கலை என எல்லா தளத்திலும் தேசிய அடையாளமாகக் கொள்ளத்தக்க கலைன்கர்களை அடையாளம் காட்டினார். இந்திய மரபை மீட்டுருவாக்கம்செய்து நவீன யுகத்தை எதிர்கொள்வதில் ஆற்றவேண்டிய பணிகளை அடையாளம் காட்டினார். இந்தியாவின் மறுமலர்ச்சி காலகட்டத்தில் தோன்றிய புதிய ஆன்மிக இயக்கங்களில் ராமகிருஷ்ணா மடமும், மிஷனும் குறிப்பிடத்தகுந்தவை.

வாழ்க்கைக் குறிப்பு

விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. விவேகானந்தர் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவி இணையருக்கும் மகனாக ஜனவரி 12, 1863-ல் பிறந்தார். தாய் மொழி வங்காளம். உடன்பிறந்தவர்கள் இளைய சகோதரர்களான மகேந்திரநாத் தத், பூபேந்திரநாத் தத். பூபேந்திரநாத் தத் இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர். சகோதரிகளில் ஒருவர் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு புகுந்த வீட்டினரின் கொடுமை தாளாது தற்கொலை செய்து கொண்டார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879-ல் கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார்.

ஆன்மிக வாழ்க்கை

பிரம்ம சமாஜத்தின் உறுப்பினரானார். 1881-ல் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். முதலில் அவரின் இறை பற்றிய கருத்துக்களையும், வழிபாட்டு முறைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ராமகிருஷ்ணரின் போதனைகள் உருவம், அருவம் ஆகிய இரண்டையும் பேசின. அவர் வழியாக பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் ஆகிய இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொண்டார். 1886-ல் ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்தார்.

அவர் இறப்பதற்கு முன்பு துறவறம் செய்யத் திட்டமிட்டிருந்த தனது இளம் சீடர்களுக்கு காவித் துணிகளை வழங்கி அவர்களை விவேகானந்தரிடம் ஒப்படைத்தார். அவர் இறந்தபின் இளம் சீடர்கள் டிசம்பர் 24, 1886-ல் துறவற சபதம் எடுத்து ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டனர். பரனாகூரில் முதல் மடத்தை உருவாக்கினர்.

அதன்பின் விவேகானந்தர் நான்கு ஆண்டுகள் இந்தியா முழுவதும் துறவியாக அலைந்தார். தன் பயண முடிவில் டிசம்பர் 24, 1892-ல் கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்தார். 1893-ல் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துகளை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

1897-ல் கடல் வழியாக இந்தியா திரும்பினார். கொழும்பில் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியால் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் கொழும்பு முதல் கல்கத்தா வரை உரைகள் ஆற்றினார். 1900-ல் மீண்டும் மேல்நாட்டுப் பயணம் செய்தார்.

அமைப்புப் பணிகள்

விவேகானந்தர் ராமகிருஷ்ண மிஷன் மற்றும் ராமகிருஷ்ண மடம் ஆகியவற்றை மே 1, 1897-ல் தோற்றுவித்தார். இவை இரண்டும் மேற்கு வங்கத்திலுள்ள பேலூர் மடத்தை தலைமை இடமாகக் கொண்டது. அத்வைத வேதாந்தத்தையும், நான்கு யோகங்களையும் (ஞான, பக்தி, கர்ம, ராஜ) போதிக்கும் இடம். நான்கு யோக முறைகளுள் கர்ம யோகத்தை முதன்மையாக முன்வைப்பது. 1909-ல் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. மடத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்கள் மிஷனின் ஆளும் குழுவாகவும் பணியாற்றுகின்றனர். ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி அகந்தானந்தாவால் சர்காச்சியில் பஞ்ச நிவாரணம் தொடங்கப்பட்டது. ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி பிரம்மானந்தா, ஆணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். 1902-ல் விவேகானந்தரின் மரணத்திற்குப் பிறகு சாரதா தேவி அமைப்பின் ஆலோசனைத் தலைவராக முக்கியப் பங்காற்றினார்.

ராமகிருஷ்ண மடம்

ராமகிருஷ்ண பரமஹம்சரை குருவாகக் கொண்ட சீடர்களை உருவாக்குவதும், அவரின் போதனைகளைப் பரப்புவதும் முக்கியப் பணியாகக் கொண்டது.

ராமகிருஷ்ண மிஷன்

மருத்துவம், நிவாரணம், கல்வித்திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தும் அமைப்பு.

எழுத்து

விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன ”The complete works of Swami Vivekananda” என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இவையே பின்னர் எழுந்திரு! விழித்திரு! என்ற தலைப்பில் பதினொரு பகுதிகளாக வெளியிடப்பட்டன.

தத்துவம்

விவேகானந்தர் அத்வைத வேதாந்தத்தின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். அனைத்து மதங்களின் மீதும் நம்பிக்கையையும் மரியாதையும் வலியுறுத்தினார். அனைத்து மதங்களும் இறைவனை அடைவதற்கான வழியே என்றார். அனைத்து மதங்களும் சரியாகப் பின்பற்றப்பட்டால் ஒரே இலக்கை நோக்கி இட்டுச் செல்லும் என்றார்.

பாலகங்காதர திலகர், ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகிய ஆளுமைகளுடன் உரையாடலில் இருந்தார்.

மறைவு

விவேகானந்தர் ஜூலை 4, 1902-ல் தன் 39ஆம் வயதில் பேலூரில் காலமானார்.

அவர் பிறந்த ஜனவரி 12ஆம் தேதி அரசு `தேசிய இளைஞர் தினமாக' அறிவித்தது.

தமிழ்நாட்டில் விவேகானந்தர் நினைவிடங்கள்

  • விவேகானந்தர் நினைவு மண்டபம், கன்னியாகுமரி
  • விவேகானந்தர் பாறை
  • விவேகானந்தர் நினைவு மண்டபம்
  • விவேகானந்தர் இல்லம்
  • விவேகானந்த கேந்திரம்
கல்வி நிலையங்கள்
  • இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி, சென்னை
  • விவேகானந்தர் கல்லூரி, அகத்தீசுவரம்
  • விவேகானந்தர் கல்லூரி, மதுரை

உசாத்துணை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.