under review

தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த நூல்களுக்கான விருதுகள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
Line 5: Line 5:


== பரிசுத் தொகை ==
== பரிசுத் தொகை ==
ஒவ்வோர் ஆண்டும் தமிழில் வெளிவரும் சிறந்த தமிழ் நூல்களுக்கு 33 வகைப்பாடுகளின் கீழ்ப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பரிசாக ரூபாய் 30,000/- எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. நூலைப் பதிப்பித்த பதிப்பாளருக்கு ரூபாய் 10,000/- வழங்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் தமிழில் வெளிவரும் சிறந்த தமிழ் நூல்களுக்கு 33 வகைப்பாடுகளின் கீழ்பரிசுகள் வழங்கப்படுகின்றன. பரிசாக ரூபாய் 30,000/- எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. நூலைப் பதிப்பித்த பதிப்பாளருக்கு ரூபாய் 10,000/- வழங்கப்படுகிறது.


== பிரிவுகள் ==
== பிரிவுகள் ==
Line 49: Line 49:
* [https://www.hindutamil.in/news/tamilnadu/991341-tamil-development-department-award-for-best-books.html இந்து தமிழ் திசை செய்திக் குறிப்பு]  
* [https://www.hindutamil.in/news/tamilnadu/991341-tamil-development-department-award-for-best-books.html இந்து தமிழ் திசை செய்திக் குறிப்பு]  
* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் இணையதளம்]  
* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் இணையதளம்]  
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 04:13, 11 March 2024

தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் ஆட்சி மொழிச் செயல்பாடுகளுக்காகவும், 1971-ல், தமிழ் வளர்ச்சித் துறை தோற்றுவிக்கப்பட்டது. 1972-ம் ஆண்டு முதல், தமிழில் பல பிரிவுகளில் எழுதப்படும் நூல்களில் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசளிக்கிறது.

சிறந்த நூல்களுக்கான விருது

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம், 1972-ம் ஆண்டு முதல், தமிழில் பல பிரிவுகளில் எழுதப்படும் நூல்களில் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசளிக்கிறது. சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர்களுக்கும், நூலைப் பதிப்பித்த பதிப்பாளர்களுக்கும் பரிசுத் தொகையும் சான்றிதழ்களும் வழங்கக்கப்படுகின்றன.

பரிசுத் தொகை

ஒவ்வோர் ஆண்டும் தமிழில் வெளிவரும் சிறந்த தமிழ் நூல்களுக்கு 33 வகைப்பாடுகளின் கீழ்பரிசுகள் வழங்கப்படுகின்றன. பரிசாக ரூபாய் 30,000/- எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. நூலைப் பதிப்பித்த பதிப்பாளருக்கு ரூபாய் 10,000/- வழங்கப்படுகிறது.

பிரிவுகள்

கீழ்க்காணும் 33 பிரிவுகளில் வெளியாகும் நூல்களில் சிறந்த நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் அளிக்கப்படுகின்றன.

  • சிறுவர் இலக்கியம்
  • மரபுக் கவிதை
  • புதுக்கவிதை
  • புதினம்
  • சிறுகதை
  • நாடகம் (உரைநடை நாடகம்; கவிதை நாடகம்)
  • திறனாய்வு
  • மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்
  • பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்
  • நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்)
  • அகராதி, கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்
  • பயண இலக்கியம்
  • வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
  • நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வாணிகவழிகளும், அகழாய்வு
  • கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல்
  • பொறியியல், தொழில்நுட்பவியல்
  • மானுடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல்
  • சட்டவியல், அரசியல்
  • பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்
  • மருந்தியல், உடலியல், நலவியல்
  • தமிழ் மருத்துவ நூல்கள் (சித்த மருத்துவம், ஆயுர்வேதம்)
  • சமயம், ஆன்மிகம், அளவையியல்
  • கல்வியியல், உளவியல்
  • வேளாண்மையியல், கால்நடையியல்
  • சுற்றுப்புறவியல்
  • கணினியியல்
  • நாட்டுப்புறவியல்
  • வெளிநாட்டு தமிழ்ப் படைப்பிலக்கியம்
  • இதழியல், தகவல் தொடர்பு
  • பிற சிறப்பு வெளியீடுகள்
  • விளையாட்டு
  • மகளிர் இலக்கியம்
  • தமிழர் வாழ்வியல்

உசாத்துணை


✅Finalised Page