under review

மறைமலை இலக்குவனார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
m (Created/reviewed by Je)
Line 50: Line 50:
*
*


{{being created}}
{{ready for review}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:02, 23 March 2022

மறைமலை இலக்குவனார்

மறைமலை இலக்குவனார் : முனைவர் சி. இ. மறைமலை (பிறப்பு: 14 டிசம்பர் 1946) தமிழ்ப் பேராசிரியர்,இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர்,இதழாசிரியர், கவிஞர்.

பிறப்பு,கல்வி

தமிழ்ப் பேராசிரியர் சி. இலக்குவனார் - மலர்க்கொடி இணையருக்கு 14 டிசம்பர் 1946ஆம் ஆண்டு தி திருநெல்வேலியில் உள்ள சிந்துபூந்துறை என்னுமிடத்தில் பிறந்தார். தனித்தமிழ் இயக்கத்தின் தலைவர் மறைமலை அடிகள் பெயர் இவருக்கு போடப்பட்டது.

இலக்குவனார் தமிழியக்கம், இந்தி எதிர்ப்பு போராட்டம் என ஊர் ஊராக இடமாற்றம் செய்யப்பட்டமையால் மறைமலை தனது கல்வியை தன் தந்தையார் பணியாற்றிய ஊர்களில் எல்லாம் பெற்றார். விருதுநகர், சோளிங்கர், அரியமங்கலம், ஈரோடு நாகர்கோயில். மதுரை, திருநகர் ஆகிய ஊர்களில்பள்ளிக்கல்வியை முடித்தார்.

பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று 1962-1963ஆம் கல்வி ஆண்டில் புகுமுக வகுப்பில் (Pre University Course) தேறினார். ] அக்கல்லூரியிலேயே தொடர்ந்து பயின்று 1966ஆம் ஆண்டில் விலங்கியல் சிறப்புப் பாடத்தில் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பயின்று 1969ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டம் பெற்றார். சம்ஸ்கிருதம் பயின்று 1977ஆம் ஆண்டில் பட்டயம் (Diploma in Sanskrit) பெற்றார். இக்காலத் தமிழில் சொல்லாக்கம் - ஆட்சித்துறைச் சொற்களில் ஒரு சிறப்பாய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து 1984ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் எண்மக் காணொளி படைப்பாக்கத்தில் (Diploma in Digital Video Production) 2006ஆம் ஆண்டில் பட்டயம் பெற்றார்.

தனிவாழ்க்கை

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கலைக் கல்லூரி (4 - செப்டம்பர் - 1969ஆம் நாள் முதல் 1971 வரை), கிருட்டிணகிரி அரசு கலைக்கல்லூரி (1971 - 1974) ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். சூன் 1974 முதல் 31 - மே - 2005 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறை விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இடையில் 1997-98 ஆம் கல்வியாண்டில் அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறையின் (Department of South and Southeast Asian Studies) தமிழ்ப்புலத்தில் சிறப்பு வருகைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பொருளாதாரப் பேராசிரியரான க. சுபத்ராவை மணாந்தார். முனைவர் நீலமலர் செந்தில்குமார் இவருடைய மகள்.

இதழியல்

பேராசிரியர் சி. இலக்குவனார் நடத்திய குறள்நெறி இதழின் பொறுப்பாசிரியராகவும், ஆசிரியராகவும் திகழ்ந்தார். தற்பொழுது செம்மொழிச் சுடர் என்னும் மின்னிதழின் ஆசிரியராகத் திகழ்கிறார்.

இலக்கியப்பணி

மறைமலை இலக்குவனார் இலக்கியச் சொற்பொழிவாளராக புகழ்பெற்றவர். மரபிலக்கியம், நவீன இலக்கியம் சார்ந்த கல்வித்துறை ஆய்வுகளையும் செய்து வருகிறார்.

இலக்கிய இடம்

மறைமலை இலக்குவனார் பொதுவாசகர்களுக்காக, கல்வித்துறை சார்ந்த மரபான ஆய்வுநோக்குடன் இலக்கிய ஆய்வுகளையும் சொற்பொழிவுகளையும் செய்பவர்.

நூல்கள்

  • இலக்கியக்கொள்கை 1977
  • இலக்கியத்திறனாய்வு ஓர் அறிமுகம் 1979
  • புதுக்கவிதையின் தேக்கநிலை 1986
  • புதுக்கவிதை முப்பெரும் உத்திகள் 1986
  • இலக்கியமும் சமூகவியலும் 1992
  • இலக்கியமும் உளவியலும் 1992
  • சமூகவியல் நோக்கில் புதுக்கவிதை 1992
  • இலக்கியமும் மார்க்ஸியமும் 1995
  • பெண்ணியத் திறனாய்வு1995
  • சொல்லாக்கம் 2002
  • அங்கதத்திற்கொரு தமிழன்பன்2003
  • திறனாய்வுச்சுடர் 2004
  • சி.இலக்குவனார் 2006
  • வைரமுத்துவின் வைகறை மேகங்கள் 2001
  • உலகப்பேராசான் மு.வரதராசன் 201
  • தலைகீழ் 2012
  • A Cluster of Stars 2006

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.