being created

சர்மிலா வினோதினி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 17: Line 17:
* நாட்குறிப்பு  
* நாட்குறிப்பு  
===== சிறுகதைத்தொகுப்பு =====
===== சிறுகதைத்தொகுப்பு =====
மொட்டைப்பனையும் முகமாலைக்காத்தும்
* மொட்டைப்பனையும் முகமாலைக்காத்தும்
 
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81 ஆளுமை:சர்மிலா வினோதினி, திருநாவுக்கரசு: noolaham]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81 ஆளுமை:சர்மிலா வினோதினி, திருநாவுக்கரசு: noolaham]

Revision as of 10:32, 26 February 2024

சர்மிலா வினோதினி

சர்மிலா வினோதினி (பிறப்பு: ஜூன் 8, 1985) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

சர்மிலா வினோதினி இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தின் வேரவில் பூநகரியில் திருநாவுக்கரசு, செல்வரதி இணையருக்கு ஜூன் 8, 1985-ல் பிறந்தார். மன்னாரில் வசித்து வருகிறார். வேரவில இந்து வித்தியாலயம், நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாலயம், இலுப்பைக்கடவை மகாவித்தியாலயம், சாவகச்சேரி இந்துக்கல்லூரி, மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்புப்பட்டதாரி. கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் காட்டியலும் சுற்றுச்சூழல் முகாமைத்துவமும் துறையில் முதுவிஞ்ஞானமாணி பட்டம் பெற்றார். இடர்முகாமைத்துவம், சமூக, உளவியலும், ஆற்றுப்படுத்தலும், ஊடகத்துறை மற்றும் அறிவிப்புத்துறை சார் நுட்பங்களும் ஆகிய துறைகளில் பட்டயம் பெற்றார்.

டயலொக் அக்சியாட்டம் நிறுவனம், மன்னார் மாவட்ட செயலகத்தின் மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் அலுவலகம் ஆகியவற்றில் கடமையாற்றிய இவர் ஐபிசி லங்கா ஊடக நிறுவனத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புப் பிரிவில் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

சர்மிலா வினோதினி கவிதை, சிறுகதை எழுதி வருகிறார். இவரது படைப்புக்கள் ஜீவநதி, பொக்சிசம், மன்னல், மன்னார், குடதிசை, முழக்கம், ஆனந்தவிகடன், காக்கைச்சிறகினிலே, பூவரசி, கதைசொல்லி போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இதழ்களிலும் இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. மன்னார் தமிழச்சங்கத்தின் வெளியீடாக இராப்பாடிகளின் நாட்குறிப்பு என்கிற கவிதை நூல் 2016-ல் வெளியானது. தமிழ்நாடு பூவரசி பதிப்பகத்தினுடைய வெளியீடாக மொட்டைப்பனையும் முகமாலைக்காத்தும் என்ற சிறுகதைத்தொகுப்பு 2019-ல் வெளிவந்தது.

ஆவணப்படம்

மன்னார் மாவட்ட செயலக வெளியீடான மலரும் மன்னார் என்கின்ற ஆவணப்படத்தினையும் இயக்கினார்.

விருதுகள்

இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம், வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றினால் நடத்தப்பட்ட தேசிய ரீதியிலான போட்டிகளில் சிறுகதை, கவிதை மற்றும் பாடலாக்கம் போன்றவற்றில் வெற்றியீட்டி பரிசில்களும் சான்றிதழ்களும் பெற்றார்.

இலக்கிய இடம்

சர்மிலா வினோதினியின் மொட்டைப்பனையும் முகமாலைக்காத்தும் சிறுகதைத் தொகுப்பு போர் நிகழ்ந்த ஒரு நாட்டின் வலிகளையும் வாழ்க்கைப் பிரச்சனைகளையும் பற்றி பேசும் படைப்பு.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுப்பு
  • நாட்குறிப்பு
சிறுகதைத்தொகுப்பு
  • மொட்டைப்பனையும் முகமாலைக்காத்தும்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.