being created

சந்திரிக்கா கணேஸ்பரன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சந்திரிக்கா கணேஸ்பரன் (பிறப்பு: நவம்பர் 21, 1964) ஈழத்துப் பெண் கலைஞர், பாடகர், இசை ஆசிரியர். எழுத்தாளர். இசை சார்ந்த நூ == வாழ்க்கைக் குறிப்பு == சந்திரிக்கா கணேஸ்பரன் இலங்கை மானிப்பாய...")
 
Line 22: Line 22:
* சிறகடிக்கும் சிறார்கள்
* சிறகடிக்கும் சிறார்கள்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஆளுமை:சந்திரிக்கா, கணேஸ்பரன்: noolaham


{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 21:35, 25 February 2024

சந்திரிக்கா கணேஸ்பரன் (பிறப்பு: நவம்பர் 21, 1964) ஈழத்துப் பெண் கலைஞர், பாடகர், இசை ஆசிரியர். எழுத்தாளர். இசை சார்ந்த நூ

வாழ்க்கைக் குறிப்பு

சந்திரிக்கா கணேஸ்பரன் இலங்கை மானிப்பாயில் கணேஸ்பரன், பரமேஸ்வரி இணையருக்கு நவம்பர் 21, 1964-ல் பிறந்தார். யாழ் மானிப்பாய் விவேகானந்தா வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். இடைநிலை, உயர்நிலைக் கல்வியை மானிப்பாய் மகளிர் கல்லூரியில் பயின்றார். இவரின் இசை குரு ஓதுவார் மூர்த்தி வி.ரி.வி.சுப்பிரமணியம்.

இசை வாழ்க்கை

ஆசிரியர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பகுதிநேர பண்ணிசை விரிவுரையாளராக 2004-2008 வரை பணியாற்றினார். இசை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மானிப்பாய் இந்துசமய விருத்திச்சங்கத்தினதும் துர்க்கை அம்மன் கோவில் அறநெறி வகுப்புகளிலும் பண்ணிசை கற்பித்தார். சத்தியசாயி பாடசாலையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் இசை வகுப்புகள் நடத்துகின்றார். வடமாகாண சபையினால் நடத்தப்படும் இசைப்பயிற்சிக்கருத்தரங்குகளிலும் பட்டதாரிஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளிலும் வளவாளராகக் கலந்துகொண்டார். சாவகச்சேரியில் ஆசிரியர்களுக்காக பண்ணிசை வகுப்புகள் நடத்தினார். மானிப்பாய் மகளிர் கல்லூரியிலும் மானிப்பாய் புனித அன்னம்மாள் பாடசாலையிலும் இடம்பெற்ற தமிழ்த் தினப்போட்டிகளில் ஒன்பது முறை தேசியமட்டத்தில் குழு இசை, தனிஇசை பாவோதல் ஆகியவற்றில் இவர் பழக்கிய மாணவர்கள் முதலாவதாக வந்தனர்.

இசை பாடத்திட்டம்

2004-ல் ”பண்ணிசைத் தேன் துளிகள்” என்னும் நூலை வட இலங்கை சங்கீத சபையின் பாடத்திட்டத்தை உள்ளடக்கி வெளியிட்டார். இப்பாடத்திட்டத்திற்கு இணைவாக வட இலங்கை சங்கீத சபையின் பாடத்திட்டத்தின் செயன்முறையை அடிப்படையாகக் கொண்ட இறுவட்டொன்றையும் வெளியிட்டுள்ளதுடன் கல்வித் திட்டத்தில் 6, 7ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட செயன்முறை இறுவட்டொன்றையும் வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரம் 10, 11, 12, 13ஆம் ஆண்டு மாணவர்களுக்கான செயன்முறை இறுவட்டிலும் இவர் பாடினார்.

”சிறகடிக்கும் சிறார்கள்” என்னும் சிறுவர் பாடல் இறுவட்டொன்றை வெளியிட்டார். இந்து சமய கலாசார அலுவலக திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பண்ணிசை இறுவட்டிலும் பாடினார். வடஇலங்கை சங்கீத சபையின் ஒவ்வொரு தரத்திற்குமான பண்ணிசைப் பாடத்திட்டத்திற்கான பாடத்திட்டத்தை தயாரித்தார்.

விருதுகள்

  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீடத்தின் இசைக்கலைமணி பட்டம் பெற்றார்.
  • வட இலங்கை சங்கீத சபையின் பண்ணிசைக் கலாவித்தகர், சங்கீத கலாவித்தகர் பட்டம் ஆகிய பட்டங்களைப் பெற்றார்.
  • சைவபரிபாலன சபையினர் நடத்திய பண்ணிசைப் போட்டிகளில் பதக்கம் பெற்றார்.
  • 2011-ல் ஜனாதிபதியினால் வழங்கப்படும் பிரதீபாபிரபா விருது
  • 2018-ல் வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் குருபிரதீபா பிரபா விருது
  • வலிகாம கல்வி வலயத்தினால் சிறந்த ஆசியருக்கான சேவை பாராட்டு விருதுகள்
  • பிரதேச சபையினால் கலைஞாயிறு விருது.
  • வடமாகாணத்தால் பண்ணிசை ஒலிப்பதிவுக்காக பதக்கம்

நூல் பட்டியல்

  • பண்ணிசைத் தேன் துளிகள்
  • சிறகடிக்கும் சிறார்கள்

உசாத்துணை

  • ஆளுமை:சந்திரிக்கா, கணேஸ்பரன்: noolaham



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.