under review

சிவஞான தேசிகர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
Line 1: Line 1:
சிவஞான தேசிகர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவப் புலவர்.
சிவஞான தேசிகர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவப் புலவர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
சிவஞான தேசிகர் [[தருமபுர ஆதீனம்|தருமபுர ஆதீனத்தைச்]] சேர்ந்த வித்துவான். இவர் தருமை ஆதீனத்தின் பத்தாம் மகா சந்நிதானமாக இருந்தார். காசியாத்திரை செய்தார்.
சிவஞான தேசிகர் [[தருமபுர ஆதீனம்|தருமபுர ஆதீனத்தைச்]] சேர்ந்த வித்துவான். இவர் தருமை ஆதீனத்தின் பத்தாம் மகா சந்நிதானமாக இருந்தார். காசியாத்திரை செய்தார்.

Latest revision as of 11:14, 24 February 2024

சிவஞான தேசிகர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவஞான தேசிகர் தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த வித்துவான். இவர் தருமை ஆதீனத்தின் பத்தாம் மகா சந்நிதானமாக இருந்தார். காசியாத்திரை செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

சிவஞான தேசிகர் 'காசித்துண்டி விநாயகர் திருவருட்பா' என்ற பெயரில் பத்து கழிநெடில் விருத்தங்களைப் பாடினார். யாழ்ப்பாணம் நல்லூர் சதாசிவம்பிள்ளை இதனைப் பதிப்பித்தார். பத்து விருத்தங்கள் கொண்ட 'காசிக்கதிர்மாவேலர் திருவருட்பா' பாடினார். இதற்கு வே. திருஞானசம்பந்தபிள்ளை உரை எழுதினார்.

மாணவர்கள்
  • புன்கூர் சிவப்பிரகாசர்
  • மருதூர் அம்பலவாணர்
  • நித்தியான்மநெறி
  • சிதம்பரநாத முனிவர்

பாடல் நடை

  • காசித்துண்டி விநாயகர் திருவருட்பா

ஓங்கார வடிவான வுன்பாத தாமரையும்
உபயபரி புரமறைகளு முதிக்கின்ற செங்கதிர்க ளொருகோடி நிகரொளியு
முத்தூள நீற்றினுெளியும்
பாங்கார் கசானனமு முக்கரமும் வளர்புயப்
பவளா சலங்களுன்கும்
பாசமுட னங்குசக் கொம்போரி லட்டுகம்
பட்சமொடு வைத்தகரமும்
நீங்காத வருண்மாரி பொழியுந்த்ரி யம்பகமு
நிறையுமும் மதமாரியு
நீள்சடா டவியும்வெண் பிறையுமொரு தொந்தியு
நெஞ்சிலொரு நாளுமறவேன்
காங்கேயன் மகிழ்தமைய னேகங்கை நதிபெருகு
காசிவாழ் துண்டிராச
கணபதி யெனும்பெரிய குணமேரு வேயருட்
கருஞநிதிக் கடவுளே.

நூல் பட்டியல்

  • காசித்துண்டி விநாயகர் திருவருட்பா
  • காசிக்கதிர்மாவேலர் திருவருட்பா
  • காசிவிசுவநாதர் திருவருட்பா
  • காசி அண்ணபூர்ணியம்மை திருவருட்பா
  • காசி காலபைரவர் திருவருட்பா
  • திருவாலங்குடி தட்சிணாமூர்த்தி திருவருட்பா
  • புள்ளிருக்குவேளூர் முத்துக்குமாரசாமி திருவருட்பா

உசாத்துணை


✅Finalised Page