under review

மேக்ஸ் முல்லர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
Line 5: Line 5:
மேக்ஸ் முல்லர் டிசம்பர் 06, 1823 அன்று ஜெர்மனியில் உள்ள தேசௌ(Dessau) நகரில் வில்லியம்  முல்லர்( Wilhelm Müller), அடில்கெய்ட் முல்லர்(Adelheid Müller) தம்பதியருக்கு பிறந்தார். மேக்ஸ் முல்லரின் தந்தை வில்லியம் முல்லர் ஜெர்மனியக் கவிஞர். மேக்ஸ் முல்லரின் மூன்றாம் வயதில் வில்லியம் முல்லர் இறந்தார்.   

மேக்ஸ் முல்லர்  தேசௌ நகரில் பள்ளிக்கல்வி பயின்றார். முல்லர் தனது பதினாறாவது வயதில் 1839-ஆம் ஆண்டு லைப்சிக்கில்(Leipzig) உள்ள நிகோலாய் பள்ளியில் செவ்வியலும், இசையும் பயின்றார். பின் 1841-ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள லைப்சிக் பல்கலைக்கழகத்தில்( Leipzig University)  தத்துவமும், லத்தின், கிரேக்க மொழியியலும் பயின்றார். 1843-ஆம் ஆண்டு ஸ்பினோசாவின் எதிக்ஸ் (Baruch Spinoza's Ethic)  என்ற நூலைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.   
மேக்ஸ் முல்லர்  தேசௌ நகரில் பள்ளிக்கல்வி பயின்றார். முல்லர் தனது பதினாறாவது வயதில் 1839-ம் ஆண்டு லைப்சிக்கில்(Leipzig) உள்ள நிகோலாய் பள்ளியில் செவ்வியலும், இசையும் பயின்றார். பின் 1841-ம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள லைப்சிக் பல்கலைக்கழகத்தில்( Leipzig University)  தத்துவமும், லத்தின், கிரேக்க மொழியியலும் பயின்றார். 1843-ம் ஆண்டு ஸ்பினோசாவின் எதிக்ஸ் (Baruch Spinoza's Ethic)  என்ற நூலைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.   

==தனி வாழ்க்கை==
==தனி வாழ்க்கை==
Line 13: Line 13:
[[File:Max Muller 1.jpg|thumb|''இந்திய அஞ்சல் தலை 1972'']]
[[File:Max Muller 1.jpg|thumb|''இந்திய அஞ்சல் தலை 1972'']]
=====பேராசிரியர் பணி=====
=====பேராசிரியர் பணி=====
1849-ஆம் ஆண்டு லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அச்சகம் ரிக் வேதத்தின் முதல் தொகுப்பை வெளியிட்டது.  மேக்ஸ்முல்லர் 1851-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நவீன ஐரோப்பிய மொழித்துறையில்  பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1854-ஆம் ஆண்டு அங்கே முழுநேர பேராசிரியர் ஆனார். 1855-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் குடியுரிமை பெற்றார்.   
1849-ம் ஆண்டு லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அச்சகம் ரிக் வேதத்தின் முதல் தொகுப்பை வெளியிட்டது.  மேக்ஸ்முல்லர் 1851-ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நவீன ஐரோப்பிய மொழித்துறையில்  பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1854-ம் ஆண்டு அங்கே முழுநேர பேராசிரியர் ஆனார். 1855-ம் ஆண்டு இங்கிலாந்தின் குடியுரிமை பெற்றார்.   

மேக்ஸ் முல்லர் 1860-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து 1861, 1863 -ஆம் ஆண்டுகளில் ராயல் கல்வி நிறுவனத்தில் இந்திய தத்துவம், தொன்மம் குறித்து தொடர் உரையாற்றினார். அந்த உரைகள் 1861 முதல் 1899 வரை புத்தக வடிவில் பதினைந்து முறை அச்சிடப்பட்டுள்ளன.   
மேக்ஸ் முல்லர் 1860-ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து 1861, 1863 -ம் ஆண்டுகளில் ராயல் கல்வி நிறுவனத்தில் இந்திய தத்துவம், தொன்மம் குறித்து தொடர் உரையாற்றினார். அந்த உரைகள் 1861 முதல் 1899 வரை புத்தக வடிவில் பதினைந்து முறை அச்சிடப்பட்டுள்ளன.   

மேக்ஸ் முல்லர் 1868-ல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட தத்துவவியல் ஒப்பீட்டு துறையின் முதல் உறுப்பினரானார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் பணி செய்த பின்பு அங்கே ஐரோப்பிய, இந்திய அறிஞர்களைக் கொண்ட சிறு சமூகத்தை உருவாக்கினார். அவர்களைக் கொண்டு கீழத்தேய நாடுகளின் புனித நூல்களை தொகுத்து மொழிபெயர்க்க தன் வாழ்வின் கடைசி முப்பது ஆண்டுகளைச் செலவிட்டார்.   

=====மேக்ஸ் முல்லரும் சமஸ்கிருதமும்=====
=====மேக்ஸ் முல்லரும் சமஸ்கிருதமும்=====
மேக்ஸ் முல்லர் 1844-ஆம் ஆண்டு ஃபெட்ரிச் செல்லிங் (Friedrich Schelling) உடன் தத்துவம் பயில பெர்லின் மாகாணம் சென்றார். பெர்லின் நகரில் சமஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளைப் படிக்கத் தொடங்கி செல்லிங்கின் வேண்டுகோலுக்கு இணங்க சில உபநிஷத்துகளை ஜெர்மனியில் மொழியாக்கம் செய்தார். அந்த உபநிஷத்துக்களின் மொழியாக்கம் முல்லருக்கு இந்திய வேதங்களின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தியது. முல்லர் வேதங்களில் உள்ள கீதங்களைப் படிக்கத் தொடங்கினார். இந்த மொழிபெயர்ப்பால் சமஸ்கிருதம் மீது ஆர்வம் கொண்டு  ப்ரான்ஸ் போப் (Franz Bopp)<ref>இண்டோ-ஐரோப்பிய மொழியியல் துறையின் முன்னோடி</ref> கீழ் சமஸ்கிருதத்தில் ஆய்வுகள் செய்தார். இக்காலகட்டத்தில் முல்லர் இந்திய நீதிக்கதைகளின் ஜெர்மனிய மொழியாக்கத்தை  ’கிட்டோபடேஸா’  என்ற பெயரில் வெளியிட்டார்.  
மேக்ஸ் முல்லர் 1844-ம் ஆண்டு ஃபெட்ரிச் செல்லிங் (Friedrich Schelling) உடன் தத்துவம் பயில பெர்லின் மாகாணம் சென்றார். பெர்லின் நகரில் சமஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளைப் படிக்கத் தொடங்கி செல்லிங்கின் வேண்டுகோலுக்கு இணங்க சில உபநிஷத்துகளை ஜெர்மனியில் மொழியாக்கம் செய்தார். அந்த உபநிஷத்துக்களின் மொழியாக்கம் முல்லருக்கு இந்திய வேதங்களின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தியது. முல்லர் வேதங்களில் உள்ள கீதங்களைப் படிக்கத் தொடங்கினார். இந்த மொழிபெயர்ப்பால் சமஸ்கிருதம் மீது ஆர்வம் கொண்டு  ப்ரான்ஸ் போப் (Franz Bopp)<ref>இண்டோ-ஐரோப்பிய மொழியியல் துறையின் முன்னோடி</ref> கீழ் சமஸ்கிருதத்தில் ஆய்வுகள் செய்தார். இக்காலகட்டத்தில் முல்லர் இந்திய நீதிக்கதைகளின் ஜெர்மனிய மொழியாக்கத்தை  ’கிட்டோபடேஸா’  என்ற பெயரில் வெளியிட்டார்.  

மேக்ஸ் முல்லர் 1845-ஆம் ஆண்டு பாரிஸிக்குச் சென்று பிரான்ஸின் சமஸ்கிருத அறிஞரான யூகைன் ப்ரூநௌஃபிடம் (Eugene Burnouff) சமஸ்கிருதம் பயின்றார். ப்ரூநௌஃப் தந்த  அறிவுரையின் பேரில் முல்லர் ரிக் வேதத்தின் முழுத் தொகுப்பை மொழிபெயர்த்து வெளியிட்டார்.  1846-ஆம் ஆண்டு லண்டனிலுள்ள கிழக்கிந்திய கம்பெனியின் நூலகத்தில் வேதங்களின் கைபிரதிகளைப் படித்து மொழிபெயர்க்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். மேக்ஸ் முல்லர் 14-ஆம் நூற்றாண்டு புத்தகமான சயனாசாரியர் எழுதிய ‘ரிக் வேத சம்ஹிதை’ நூலை சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். முல்லர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் வேதாந்தம் மீது ஈடுபாடு கொண்டு அவரை பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள்  எழுதினார்.  
மேக்ஸ் முல்லர் 1845-ம் ஆண்டு பாரிஸிக்குச் சென்று பிரான்ஸின் சமஸ்கிருத அறிஞரான யூகைன் ப்ரூநௌஃபிடம் (Eugene Burnouff) சமஸ்கிருதம் பயின்றார். ப்ரூநௌஃப் தந்த  அறிவுரையின் பேரில் முல்லர் ரிக் வேதத்தின் முழுத் தொகுப்பை மொழிபெயர்த்து வெளியிட்டார்.  1846-ம் ஆண்டு லண்டனிலுள்ள கிழக்கிந்திய கம்பெனியின் நூலகத்தில் வேதங்களின் கைபிரதிகளைப் படித்து மொழிபெயர்க்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். மேக்ஸ் முல்லர் 14-ம் நூற்றாண்டு புத்தகமான சயனாசாரியர் எழுதிய ‘ரிக் வேத சம்ஹிதை’ நூலை சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். முல்லர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் வேதாந்தம் மீது ஈடுபாடு கொண்டு அவரை பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள்  எழுதினார்.  
=====ஆய்வுப் பணி=====
=====ஆய்வுப் பணி=====
[[File:Max Muller-4.jpg|thumb|''நன்றி: நேஷணல் போர்ட்ரேட் காலரி'']]
[[File:Max Muller-4.jpg|thumb|''நன்றி: நேஷணல் போர்ட்ரேட் காலரி'']]
Line 36: Line 36:
=====கிப்ஃபோர்ட் உரைகள்=====
=====கிப்ஃபோர்ட் உரைகள்=====
[[File:Max Muller 4.jpg|thumb|''நன்றி: நேஷணல் போர்ட்ரேட் காலரி'' ]]
[[File:Max Muller 4.jpg|thumb|''நன்றி: நேஷணல் போர்ட்ரேட் காலரி'' ]]
1888-ஆம் ஆண்டு கிளாஸ்கோவ் பல்கலைக்கழகத்தில் ’இயற்கை மதங்கள்’ என்ற தலைப்பில் ஒரு உரையாற்றுவதற்காக சென்ற மேக்ஸ் முல்லர் கிளாஸ்கோவ் மாகாணத்திலேயே தங்கினார். மேக்ஸ் முல்லர் அதே ஆண்டில் கிளாஸ்கொவ் பல்கலைகழகத்தின் கிப்ஃபோர்ட் விரிவுரையாளராகத் (Gifford Lecturer) தேர்வு செய்யப்பட்டார்.  
1888-ம் ஆண்டு கிளாஸ்கோவ் பல்கலைக்கழகத்தில் ’இயற்கை மதங்கள்’ என்ற தலைப்பில் ஒரு உரையாற்றுவதற்காக சென்ற மேக்ஸ் முல்லர் கிளாஸ்கோவ் மாகாணத்திலேயே தங்கினார். மேக்ஸ் முல்லர் அதே ஆண்டில் கிளாஸ்கொவ் பல்கலைகழகத்தின் கிப்ஃபோர்ட் விரிவுரையாளராகத் (Gifford Lecturer) தேர்வு செய்யப்பட்டார்.  

மேக்ஸ் முல்லர் 1888-ஆம் ஆண்டு நிகழ்த்திய முதல் உரை இயற்கை மதங்களைப் பற்றியது. அவ்வுரையில் அவர் இயற்கை மதங்களைப் பற்றிய அறிமுகத்தை வழங்கி அதனை வரையறுக்க முயற்சித்தார். பின் உள்ள உரைகளில் பௌதிக மதங்கள், மானுட மதங்கள், இறையியல் மதங்கள் பற்றி நான்கு ஆண்டுகள் விரிவாக உரையாற்றினார். 1888 முதல் 1992 வரை நான்கு பகுதிகளாக அறுபத்திரெண்டு உரைகள் நிகழ்த்தியுள்ளார். அவை மொத்தமாகத் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றன.
மேக்ஸ் முல்லர் 1888-ம் ஆண்டு நிகழ்த்திய முதல் உரை இயற்கை மதங்களைப் பற்றியது. அவ்வுரையில் அவர் இயற்கை மதங்களைப் பற்றிய அறிமுகத்தை வழங்கி அதனை வரையறுக்க முயற்சித்தார். பின் உள்ள உரைகளில் பௌதிக மதங்கள், மானுட மதங்கள், இறையியல் மதங்கள் பற்றி நான்கு ஆண்டுகள் விரிவாக உரையாற்றினார். 1888 முதல் 1992 வரை நான்கு பகுதிகளாக அறுபத்திரெண்டு உரைகள் நிகழ்த்தியுள்ளார். அவை மொத்தமாகத் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றன.

இந்நாட்களில் இந்திய அரேபிய, சீன, ஈரானிய மத நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். முல்லர் இறப்பதற்கு ஓராண்டு முன்பு 1899-ஆம் ஆண்டு ஹிந்து தத்துவத்தின் ஆறு கொள்கைகள் (The Six Systems of Hindu Philosophy) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
இந்நாட்களில் இந்திய அரேபிய, சீன, ஈரானிய மத நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். முல்லர் இறப்பதற்கு ஓராண்டு முன்பு 1899-ம் ஆண்டு ஹிந்து தத்துவத்தின் ஆறு கொள்கைகள் (The Six Systems of Hindu Philosophy) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.

==மறைவு==
==மறைவு==
Line 70: Line 70:
[[File:Max Muller 8.jpg|thumb|''நன்றி: நேஷனல் போர்ட்ரேட் காலரி'']]
[[File:Max Muller 8.jpg|thumb|''நன்றி: நேஷனல் போர்ட்ரேட் காலரி'']]
*Bosch, Lourens van den, ''Friedrich Max Müller: A Life Devoted to Humanities'' (Leiden: Brill, 2002)
*Bosch, Lourens van den, ''Friedrich Max Müller: A Life Devoted to Humanities'' (Leiden: Brill, 2002)
*Chaudhuri, Nirad C., ''Scholar Extraordinary: The Life of Professor the Rt Hon. Friedrich Max Muller'' (London: Chatto & Windus, 1974)<ref>நிராத் சௌத்ரி 1974-ஆம் ஆண்டு எழுதிய இப்புத்தகத்திற்கு ஆங்கிலத்திற்கான சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ளது.</ref>
*Chaudhuri, Nirad C., ''Scholar Extraordinary: The Life of Professor the Rt Hon. Friedrich Max Muller'' (London: Chatto & Windus, 1974)<ref>நிராத் சௌத்ரி 1974-ம் ஆண்டு எழுதிய இப்புத்தகத்திற்கு ஆங்கிலத்திற்கான சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ளது.</ref>
*Fynes, R. C. C., 'Müller, Friedrich Max (1823–1900)’, ''Oxford Dictionary of National Biography'' (Oxford University Press, 2007)
*Fynes, R. C. C., 'Müller, Friedrich Max (1823–1900)’, ''Oxford Dictionary of National Biography'' (Oxford University Press, 2007)
*Müller, Georgina (ed.), ''The Life and Letters of the Right Honourable Friedrich Max Müller'' (London: Longmans, 1902)
*Müller, Georgina (ed.), ''The Life and Letters of the Right Honourable Friedrich Max Müller'' (London: Longmans, 1902)

Revision as of 10:17, 24 February 2024

Max Muller.jpg

சர் மேக்ஸ் முல்லர் (மாக்ஸ் முல்லர், ஃபெட்ரிக் மேக்ஸ் முல்லர், Friedrich Max Müller) (டிசம்பர் 06, 1823 - அக்டோபர் 28, 1900) ஜெர்மனிய அறிஞர், கீழை தத்துவ ஆய்வாளர். இந்திய மதங்களிலும், சமஸ்கிருத சொற்பொருளியலிலும் ஆய்வு செய்தவர். மேக்ஸ் முல்லர் வேதங்கள், மதம், தத்துவம், தொன்மம் ஆகிய துறைகளில் ஒப்பீட்டு ஆய்வுகள் செய்தார். அவர் தலைமையில் தொகுக்கப்பட்ட 50 தொகுதிகள் கொண்ட கீழை நாடுகளின் மத, தத்துவ தொகுப்பான ‘தி சேக்ரேட் புக்ஸ் ஆப் ஈஸ்ட்’ (The Sacred Books of East) இத்துறையின் ஆய்வுகளில் ஒரு முன்னோடி முயற்சி.

பிறப்பு, கல்வி

நன்றி: நியூ வேல்ர்ட் என்சைகிலோபீடியா

மேக்ஸ் முல்லர் டிசம்பர் 06, 1823 அன்று ஜெர்மனியில் உள்ள தேசௌ(Dessau) நகரில் வில்லியம் முல்லர்( Wilhelm Müller), அடில்கெய்ட் முல்லர்(Adelheid Müller) தம்பதியருக்கு பிறந்தார். மேக்ஸ் முல்லரின் தந்தை வில்லியம் முல்லர் ஜெர்மனியக் கவிஞர். மேக்ஸ் முல்லரின் மூன்றாம் வயதில் வில்லியம் முல்லர் இறந்தார்.

மேக்ஸ் முல்லர் தேசௌ நகரில் பள்ளிக்கல்வி பயின்றார். முல்லர் தனது பதினாறாவது வயதில் 1839-ம் ஆண்டு லைப்சிக்கில்(Leipzig) உள்ள நிகோலாய் பள்ளியில் செவ்வியலும், இசையும் பயின்றார். பின் 1841-ம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள லைப்சிக் பல்கலைக்கழகத்தில்( Leipzig University) தத்துவமும், லத்தின், கிரேக்க மொழியியலும் பயின்றார். 1843-ம் ஆண்டு ஸ்பினோசாவின் எதிக்ஸ் (Baruch Spinoza's Ethic) என்ற நூலைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

(நன்றி: தமிழன் வேதாஸ்)

மேக்ஸ் முல்லர் ஆகஸ்ட் 03, 1859 அன்று ஜார்ஜினியா அடிலைட்டை (Georgina Adelaide) திருமணம் செய்து கொண்டார். மேக்ஸ் முல்லர், ஜார்ஜினியா அடிலைட் தம்பதியருக்கு நான்கு குழந்தைகள்.

கல்வி/ஆய்வுப் பணிகள்

இந்திய அஞ்சல் தலை 1972
பேராசிரியர் பணி

1849-ம் ஆண்டு லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அச்சகம் ரிக் வேதத்தின் முதல் தொகுப்பை வெளியிட்டது. மேக்ஸ்முல்லர் 1851-ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நவீன ஐரோப்பிய மொழித்துறையில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1854-ம் ஆண்டு அங்கே முழுநேர பேராசிரியர் ஆனார். 1855-ம் ஆண்டு இங்கிலாந்தின் குடியுரிமை பெற்றார்.

மேக்ஸ் முல்லர் 1860-ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து 1861, 1863 -ம் ஆண்டுகளில் ராயல் கல்வி நிறுவனத்தில் இந்திய தத்துவம், தொன்மம் குறித்து தொடர் உரையாற்றினார். அந்த உரைகள் 1861 முதல் 1899 வரை புத்தக வடிவில் பதினைந்து முறை அச்சிடப்பட்டுள்ளன.

மேக்ஸ் முல்லர் 1868-ல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட தத்துவவியல் ஒப்பீட்டு துறையின் முதல் உறுப்பினரானார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் பணி செய்த பின்பு அங்கே ஐரோப்பிய, இந்திய அறிஞர்களைக் கொண்ட சிறு சமூகத்தை உருவாக்கினார். அவர்களைக் கொண்டு கீழத்தேய நாடுகளின் புனித நூல்களை தொகுத்து மொழிபெயர்க்க தன் வாழ்வின் கடைசி முப்பது ஆண்டுகளைச் செலவிட்டார்.

மேக்ஸ் முல்லரும் சமஸ்கிருதமும்

மேக்ஸ் முல்லர் 1844-ம் ஆண்டு ஃபெட்ரிச் செல்லிங் (Friedrich Schelling) உடன் தத்துவம் பயில பெர்லின் மாகாணம் சென்றார். பெர்லின் நகரில் சமஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளைப் படிக்கத் தொடங்கி செல்லிங்கின் வேண்டுகோலுக்கு இணங்க சில உபநிஷத்துகளை ஜெர்மனியில் மொழியாக்கம் செய்தார். அந்த உபநிஷத்துக்களின் மொழியாக்கம் முல்லருக்கு இந்திய வேதங்களின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தியது. முல்லர் வேதங்களில் உள்ள கீதங்களைப் படிக்கத் தொடங்கினார். இந்த மொழிபெயர்ப்பால் சமஸ்கிருதம் மீது ஆர்வம் கொண்டு ப்ரான்ஸ் போப் (Franz Bopp)[1] கீழ் சமஸ்கிருதத்தில் ஆய்வுகள் செய்தார். இக்காலகட்டத்தில் முல்லர் இந்திய நீதிக்கதைகளின் ஜெர்மனிய மொழியாக்கத்தை ’கிட்டோபடேஸா’ என்ற பெயரில் வெளியிட்டார்.

மேக்ஸ் முல்லர் 1845-ம் ஆண்டு பாரிஸிக்குச் சென்று பிரான்ஸின் சமஸ்கிருத அறிஞரான யூகைன் ப்ரூநௌஃபிடம் (Eugene Burnouff) சமஸ்கிருதம் பயின்றார். ப்ரூநௌஃப் தந்த அறிவுரையின் பேரில் முல்லர் ரிக் வேதத்தின் முழுத் தொகுப்பை மொழிபெயர்த்து வெளியிட்டார். 1846-ம் ஆண்டு லண்டனிலுள்ள கிழக்கிந்திய கம்பெனியின் நூலகத்தில் வேதங்களின் கைபிரதிகளைப் படித்து மொழிபெயர்க்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். மேக்ஸ் முல்லர் 14-ம் நூற்றாண்டு புத்தகமான சயனாசாரியர் எழுதிய ‘ரிக் வேத சம்ஹிதை’ நூலை சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். முல்லர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் வேதாந்தம் மீது ஈடுபாடு கொண்டு அவரை பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினார்.

ஆய்வுப் பணி
நன்றி: நேஷணல் போர்ட்ரேட் காலரி

கீழை நாடுகளின் மதம், தத்துவம் சம்பந்தமான நவீன ஆய்வுகள், தொகுப்புகளுக்கு மேக்ஸ் முல்லர் முன்னோடியாக அமைந்தார். குறிப்பாக இந்திய மதங்கள், தத்துவங்கள் சார்ந்த முல்லரின் தொகுப்புகள் ஒரு முன்னோடி முயற்சி.

மேக்ஸ் முல்லர் முப்பது ஆண்டுகள் பணியாற்றி தொகுத்த ’கீழத்தேய நாடுகளின் புனித நூல்’ (The Sacred Books of East) கீழை தத்துவ நூல்களின் தொகுப்பும், முல்லர் மொழிபெயர்த்த இந்திய ரிக் வேத கீதங்களின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பும் முக்கியமானவை.

கீழத்தேய நாடுகளின் புனித நூல் பட்டியல்

மேக்ஸ் முல்லர் கீழத்தேய நாடுகளின் புனித நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஐம்பது தொகுதிகளாக ‘தி சேக்ரேட் புக் ஆப் ஈஸ்ட்’ என்ற தலைப்பில் தொகுத்தார்.

பார்க்க: கீழத்தேய புனித நூல்கள்

கிப்ஃபோர்ட் உரைகள்
நன்றி: நேஷணல் போர்ட்ரேட் காலரி

1888-ம் ஆண்டு கிளாஸ்கோவ் பல்கலைக்கழகத்தில் ’இயற்கை மதங்கள்’ என்ற தலைப்பில் ஒரு உரையாற்றுவதற்காக சென்ற மேக்ஸ் முல்லர் கிளாஸ்கோவ் மாகாணத்திலேயே தங்கினார். மேக்ஸ் முல்லர் அதே ஆண்டில் கிளாஸ்கொவ் பல்கலைகழகத்தின் கிப்ஃபோர்ட் விரிவுரையாளராகத் (Gifford Lecturer) தேர்வு செய்யப்பட்டார்.

மேக்ஸ் முல்லர் 1888-ம் ஆண்டு நிகழ்த்திய முதல் உரை இயற்கை மதங்களைப் பற்றியது. அவ்வுரையில் அவர் இயற்கை மதங்களைப் பற்றிய அறிமுகத்தை வழங்கி அதனை வரையறுக்க முயற்சித்தார். பின் உள்ள உரைகளில் பௌதிக மதங்கள், மானுட மதங்கள், இறையியல் மதங்கள் பற்றி நான்கு ஆண்டுகள் விரிவாக உரையாற்றினார். 1888 முதல் 1992 வரை நான்கு பகுதிகளாக அறுபத்திரெண்டு உரைகள் நிகழ்த்தியுள்ளார். அவை மொத்தமாகத் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றன.

இந்நாட்களில் இந்திய அரேபிய, சீன, ஈரானிய மத நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். முல்லர் இறப்பதற்கு ஓராண்டு முன்பு 1899-ம் ஆண்டு ஹிந்து தத்துவத்தின் ஆறு கொள்கைகள் (The Six Systems of Hindu Philosophy) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.

மறைவு

நன்றி: நேஷணல் போர்ட்ரேட் காலரி

மேக்ஸ் முல்லர் அக்டோபர் 28, 1900 அன்று ஆக்ஸ்போர்டில் உள்ள தன் இல்லத்தில் காலமானார். புனிதர்களின் தினமான நவம்பர் 1, 1900 அன்று ஹோலிவெல் கல்லறையில் அவரது இறுதிச் சடங்கு நிகழ்ந்தது.

சிறப்புகள்

நன்றி: நேஷனல் போர்ட்ரேட் காலரி
  • மேக்ஸ் முல்லரின் மறைவுக்கு பின் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் அவர் பெயரில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியுதவி வரலாறு, தொல்லியல் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • இந்திய அரசு புது டில்லியிலுள்ள இந்திய ஜெர்மானிய நிறுவனத்திற்கு மேக்ஸ் முல்லர் பவன் எனப் பெயரிட்டுள்ளது. மேக்ஸ் முல்லர் மார்க் என அவ்வீதிக்கும் பெயரிட்டுள்ளது.

நூல்கள்

  • கிழக்கில் போர் நிகழ்ந்த நாட்டின் மொழிகள்: செமிட்டிக், ஆரியன், துரானியன் என்னும் மூன்று மொழிக் குடும்பங்களின் ஆய்வு (லண்டன்: வில்லியம்ஸ் ஆண்ட் நார்கேட், 1855)
  • பண்டைய சமஸ்கிருத இலக்கியத்தின் வரலாறு: பிராமணர்களின் நாகரீகத்திற்கு முற்பட்ட மத விளக்கம் (லண்டன்: வில்லியம்ஸ் ஆண்ட் நார்கேட், 1859)
  • மதங்களின் அறிவியல் தொகுப்பு (ஏ சிப்ஸ் ஃப்ரம் ஜெர்மன் வொர்க்‌ஷாப்) (லண்டன்: லாங்மென்ஸ், 1867)
  • சிந்தனையின் அறிவியல் (லண்டன்: லாங்மென்ஸ், 1887)
  • சொற்களின் தன்வரலாறு மற்றும் ஆரிய குடும்பங்கள் (லண்டன்: லாங்மென்ஸ், 1888)
  • மகாயான புத்த நூல்கள் (ஆக்ஸ்போர்ட்: க்ளாரிண்டன் அச்சகம், 1894)
  • மேக்ஸ் முல்லர் நூல்கள் முழுத் தொகுப்பு (18 தொகுப்பு) (லண்டன்: லாங்மென்ஸ், 1898)
  • கீழத்தேய நாடுகளின் புனித நூல்கள் (50 தொகுப்பு, ஆசிரியர் & மொழிபெயர்ப்பாளர்) (ஆக்ஸ்போர்: க்ளாரிண்டன் அச்சகம், 1879 - 1910)
  • எனது சுயசரிதை: சிறு துளி (லண்டன்: லாங்மென்ஸ், 1901)
மொழிபெயர்த்த நூல்கள்
  • Critique of Pure Reason (மூலம்: காண்ட், 1881)

நினைவு நூல்கள்

நன்றி: நேஷனல் போர்ட்ரேட் காலரி
  • Bosch, Lourens van den, Friedrich Max Müller: A Life Devoted to Humanities (Leiden: Brill, 2002)
  • Chaudhuri, Nirad C., Scholar Extraordinary: The Life of Professor the Rt Hon. Friedrich Max Muller (London: Chatto & Windus, 1974)[2]
  • Fynes, R. C. C., 'Müller, Friedrich Max (1823–1900)’, Oxford Dictionary of National Biography (Oxford University Press, 2007)
  • Müller, Georgina (ed.), The Life and Letters of the Right Honourable Friedrich Max Müller (London: Longmans, 1902)
  • Stone, Jon R. (ed.), The Essential Max Müller (New York: Palgrave Macmillan, 2002)

இதழியல் பங்களிப்பு

நன்றி: நேஷனல் போர்ட்ரேட் காலரி
  • காஸ்மோபொலிஸ் (Cosmopolis)
  • தி நயண்டின்த் செஞ்சுரி (Nineteenth Century)
  • தி டைம்ஸ் எடிட்டருக்கு எழுதிய கடிதங்கள் (நவம்பர் 24, 1880, ஆகஸ்ட் 22, 1887, செப்டம்பர் 06, 1887)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. இண்டோ-ஐரோப்பிய மொழியியல் துறையின் முன்னோடி
  2. நிராத் சௌத்ரி 1974-ம் ஆண்டு எழுதிய இப்புத்தகத்திற்கு ஆங்கிலத்திற்கான சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ளது.

✅Finalised Page