ஆரியர் திவ்வியதேச யாத்திரையின் சரித்திரம்: Difference between revisions
(Corrected error in line feed character) Tag: Manual revert |
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
||
Line 3: | Line 3: | ||
ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம் (1889) [[சே.ப. நரசிம்மலு நாயுடு]] எழுதிய பயணக்கட்டுரை நூல். இந்நூல் தமிழில் எழுதப்பட்ட முதல் பயணக்கட்டுரை நூல் என கருதப்படுகிறது. | ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம் (1889) [[சே.ப. நரசிம்மலு நாயுடு]] எழுதிய பயணக்கட்டுரை நூல். இந்நூல் தமிழில் எழுதப்பட்ட முதல் பயணக்கட்டுரை நூல் என கருதப்படுகிறது. | ||
== எழுத்து,பதிப்பு == | == எழுத்து,பதிப்பு == | ||
[[சே.ப. நரசிம்மலு நாயுடு]] கோவையைச் சேர்ந்த தொழில்முனைவர், இதழாளர், சமூக ஆய்வாளர், காங்கிரஸ் தலைவர், மற்றும் பிரம்மசமாஜ தலைவர். 1885 | [[சே.ப. நரசிம்மலு நாயுடு]] கோவையைச் சேர்ந்த தொழில்முனைவர், இதழாளர், சமூக ஆய்வாளர், காங்கிரஸ் தலைவர், மற்றும் பிரம்மசமாஜ தலைவர். 1885-ம் ஆண்டு அவர் வட இந்தியாவுக்கு ரயிலிலும் பிற ஊர்திகளிலுமாக பயணம் செய்தார். அந்த அனுபவங்களை ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம் என்றபேரில் 1889ல் நூலாக வெளியிட்டார். அதன்பின் சென்ற பயணங்களையும் இணைத்து 1913-ம் ஆண்டில் முழுமையான இரண்டாம் பதிப்பை வெளியிட்டார். 107 ஆண்டுகளுக்குப்பின் இந்நூல் ஆய்வாளர் ந.முருகேசபாண்டிய பதிப்புரையுடன் டிஸ்கவரி புக்பேலஸ் வெளியீடாக 2019ல் மறுபதிப்பு வெளிவந்தது. | ||
== உள்ளடக்கம் == | == உள்ளடக்கம் == | ||
சே.ப.நரசிம்மலு நாயுடு 1885 | சே.ப.நரசிம்மலு நாயுடு 1885-ம் ஆண்டு மும்பையிலும் 1886-ம் ஆண்டு கல்கத்தாவிலும் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளில் கலந்துகொள்வதற்காகப் பயணம் செய்தார். அப்பயணங்களை வட இந்தியாவை பார்ப்பதற்கான பயணங்களாக விரிவாக்கம் செய்தார். இந்நூலின் இரண்டாம் பதிப்பில் டிசம்பர் 11, 1911-ல் நிகழ்ந்த ஜார்ஜ் சக்கரவத்தியின் முடிசூட்டுவிழா நிகழ்வுகளை விரிவாக வர்ணித்திருக்கிறார். | ||
சே.ப.நரசிம்மலு நாயுடு தன் பயணக்குறிப்புகளை ஆங்கிலத்தில்தான் எழுதியிருந்தார். அவற்றைப் படித்த நண்பர்கள் அவை தமிழில் வருவது அவசியமென தெரிவித்தமையால் மீண்டும் தமிழில் எழுதினார். இதை அவர் முதல் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். கவிஞர் பிரான்ஸிஸ் பேகன் பயணம் பற்றி சொல்லும் கருத்தையும், ஞானாமிர்தம் என்னும் நூலில் பயணம் பற்றி தான் சொல்லியிருந்ததையும் முன்னுரையில் அளிக்கும் சே.ப.நரசிம்மலு நாயுடு மானுட வாழ்க்கை ஒரு பயணம் என்றும், வீடுபேறு அடையும் பயணத்திற்கு உலகத்தில் வேற்றூர்களை பார்க்கும்பொருட்டு செய்யப்படும் பயணங்கள் மிக உதவியானவை என்றும் சொல்கிறார். | சே.ப.நரசிம்மலு நாயுடு தன் பயணக்குறிப்புகளை ஆங்கிலத்தில்தான் எழுதியிருந்தார். அவற்றைப் படித்த நண்பர்கள் அவை தமிழில் வருவது அவசியமென தெரிவித்தமையால் மீண்டும் தமிழில் எழுதினார். இதை அவர் முதல் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். கவிஞர் பிரான்ஸிஸ் பேகன் பயணம் பற்றி சொல்லும் கருத்தையும், ஞானாமிர்தம் என்னும் நூலில் பயணம் பற்றி தான் சொல்லியிருந்ததையும் முன்னுரையில் அளிக்கும் சே.ப.நரசிம்மலு நாயுடு மானுட வாழ்க்கை ஒரு பயணம் என்றும், வீடுபேறு அடையும் பயணத்திற்கு உலகத்தில் வேற்றூர்களை பார்க்கும்பொருட்டு செய்யப்படும் பயணங்கள் மிக உதவியானவை என்றும் சொல்கிறார். |
Revision as of 07:23, 24 February 2024
To read the article in English: Aariyar Divya Desa Yaaththiraiyin Chariththiram.
ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம் (1889) சே.ப. நரசிம்மலு நாயுடு எழுதிய பயணக்கட்டுரை நூல். இந்நூல் தமிழில் எழுதப்பட்ட முதல் பயணக்கட்டுரை நூல் என கருதப்படுகிறது.
எழுத்து,பதிப்பு
சே.ப. நரசிம்மலு நாயுடு கோவையைச் சேர்ந்த தொழில்முனைவர், இதழாளர், சமூக ஆய்வாளர், காங்கிரஸ் தலைவர், மற்றும் பிரம்மசமாஜ தலைவர். 1885-ம் ஆண்டு அவர் வட இந்தியாவுக்கு ரயிலிலும் பிற ஊர்திகளிலுமாக பயணம் செய்தார். அந்த அனுபவங்களை ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம் என்றபேரில் 1889ல் நூலாக வெளியிட்டார். அதன்பின் சென்ற பயணங்களையும் இணைத்து 1913-ம் ஆண்டில் முழுமையான இரண்டாம் பதிப்பை வெளியிட்டார். 107 ஆண்டுகளுக்குப்பின் இந்நூல் ஆய்வாளர் ந.முருகேசபாண்டிய பதிப்புரையுடன் டிஸ்கவரி புக்பேலஸ் வெளியீடாக 2019ல் மறுபதிப்பு வெளிவந்தது.
உள்ளடக்கம்
சே.ப.நரசிம்மலு நாயுடு 1885-ம் ஆண்டு மும்பையிலும் 1886-ம் ஆண்டு கல்கத்தாவிலும் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளில் கலந்துகொள்வதற்காகப் பயணம் செய்தார். அப்பயணங்களை வட இந்தியாவை பார்ப்பதற்கான பயணங்களாக விரிவாக்கம் செய்தார். இந்நூலின் இரண்டாம் பதிப்பில் டிசம்பர் 11, 1911-ல் நிகழ்ந்த ஜார்ஜ் சக்கரவத்தியின் முடிசூட்டுவிழா நிகழ்வுகளை விரிவாக வர்ணித்திருக்கிறார்.
சே.ப.நரசிம்மலு நாயுடு தன் பயணக்குறிப்புகளை ஆங்கிலத்தில்தான் எழுதியிருந்தார். அவற்றைப் படித்த நண்பர்கள் அவை தமிழில் வருவது அவசியமென தெரிவித்தமையால் மீண்டும் தமிழில் எழுதினார். இதை அவர் முதல் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். கவிஞர் பிரான்ஸிஸ் பேகன் பயணம் பற்றி சொல்லும் கருத்தையும், ஞானாமிர்தம் என்னும் நூலில் பயணம் பற்றி தான் சொல்லியிருந்ததையும் முன்னுரையில் அளிக்கும் சே.ப.நரசிம்மலு நாயுடு மானுட வாழ்க்கை ஒரு பயணம் என்றும், வீடுபேறு அடையும் பயணத்திற்கு உலகத்தில் வேற்றூர்களை பார்க்கும்பொருட்டு செய்யப்படும் பயணங்கள் மிக உதவியானவை என்றும் சொல்கிறார்.
இந்நூலில் வட இந்தியாவில் பயணம் செய்பவர்களுக்கு தேவையான பயண ஆலோசனை குறிப்புகளை முதலில் தொகுத்து அளித்திருக்கிறார்
பயணம் செய்த ஊர்கள்
கோவையில் பயணத்தை தொடங்கும் சே.ப.நரசிம்மலு நாயிடு மான்மார், ஷாக்பூர், ஜபல்பூர், அலஹாபாத், நைமிசாரணியம், காசி ஆகிய ஊர்களை ஒரு பயணத்தில் பார்த்தார். கயை, பர்துவான், சந்திரநாகூர், கல்கத்தா, டாக்கா, பூரி, டார்ஜிலிங், குருஷாங்க், அயோத்தி, ஹரித்வார், ஆக்ரா, மதுரா, ஜெய்ப்பூர் போன்ற ஊர்களை பற்றி எழுதுகிறார், வெவ்வேறு நூல்களில் இருந்து இமையமலைமேல் உள்ள கேதார்நாத் பத்ரிநாத் போன்ற ஊர்களின் செய்திகளையும் தொகுத்தளிக்கிறார்.
மதிப்பீடு
சே.ப.நரசிம்மலு நாயுடு காங்கிரஸ் மிதவாத தரப்பைச் சேர்ந்தவர். ஆகவே பிரிட்டிஷார் இந்தியாவுக்குச் செய்த நன்மைகளை முதன்மைப்படுத்துகிறார். ரயில் போன்ற வசதிகளும் பாதுகாப்பும் அவர்களால் அளிக்கப்பட்டவை என நினைக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியின் நன்மை பற்றிய பாராட்டுக்கள் நூலில் உள்ளன. பிரம்மசமாஜத்தவராக இருந்தாலும் சே.ப.நரசிம்மலு நாயுடு மரபான மதநோக்கு கொண்டவர். ஆகவே அவருடைய பார்வை ஆசாரவாதம் சார்ந்தது. சே.ப.நரசிம்மலு நாயுடு காசி போன்ற ஊர்களை பார்க்கும்போது அவருடைய உறுதியான ஒழுக்கவாத நோக்கும் வெளிப்படுகிறது. இவற்றை ஆய்வாளர் ந.முருகேசபாண்டியன் குறிப்பிடுகிறார்
உசாத்துணை
- ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம் (தமிழின் முதல் பயணநூல் 1886-1913) சே.ப.நரசிம்மலு நாயுடு. பதிப்பாசிரியர் ந.முருகேசபாண்டியன். டிஸ்கவரி புத்தகநிலையம்.
- சே.ப.நரசிம்மலு நாயுடு: தமிழ்ப் பயண இலக்கியத்தின் தந்தை
- மின்னூல், https://www.tamildigitallibrary.in
- முருகேசபாண்டியன், முன்னுரை
✅Finalised Page