being created

சந்திரவதனா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:சந்திரவதனா .png|thumb|303x303px|சந்திரவதனா ]]
[[File:சந்திரவதனா 2.png|thumb|339x339px|சந்திரவதனா ]]
சந்திரவதனா (சந்திரவதனா செல்வகுமாரன்) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.
சந்திரவதனா (சந்திரவதனா செல்வகுமாரன்) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==

Revision as of 06:09, 24 February 2024

சந்திரவதனா
சந்திரவதனா

சந்திரவதனா (சந்திரவதனா செல்வகுமாரன்) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

சந்திரவதனா இலங்கை பருத்தித்துறை, ஆத்தியடி, மேலைப்புலோலியூரில் மு.ச.தியாகராஜா, சிவகாமசுந்தரி இணையருக்குப் பிறந்தார். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். கணிதத் துறையில் ஆர்வம் கொண்டவர். 1986 முதல் ஜெர்மனியில் புலம்பெயர்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சந்திரவதனா 1975 முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலமாக எழுதிவருகிறார்.இவரது படைப்புகள் வானொலிகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத்தளங்கள் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. மனஓசை என்ற வலைப்பதிவில் சமூக, அரசியல், இலக்கிய மற்றும் சுய உணர்வுகள் சார்ந்து எழுதினார். சிறுகதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரின் படைப்புக்கள் எரிமலை, களத்தில் ஈழமுரசு, ஈழநாடு, குமுதம், இளங்காற்று, புலம், சக்தி (பெண்கள் இதழ்), பெண்கள் சந்திப்பு மலர் (பெண்கள் இதழ்), உயிர்ப்பு, பூவரசு (சஞ்சிகை), வெற்றிமணி, முழக்கம், தங்கதீபம், வடலி, குருத்து மாதஇதழ், செம்பருத்தி (சஞ்சிகை), யாழ் (இணைய இதழ்), சூரியன் (இணைய இதழ்), பதிவுகள் (இணைய இதழ்), திண்ணை (இணைய இதழ்), அக்கினி (இணைய இதழ்), யுகமாயினி உட்படப் பல பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் இணைய இதழ்கள் போன்றவற்றில் வெளிவந்தன. இவரது ‘வழக்கம் போல் அடுப்படிக்குள்’ என்ற கவிதை தமிழ்த்துறை அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விருதுகள்

  • 2009-ல் மனஓசை சிறுகதை நூலுக்காக திருப்பூர் மத்திய அரிமா சங்கம் வழங்கும் அரிமா சக்தி விருது

நூல் பட்டியல்

  • மனஓசை சிறுகதைத் தொகுப்பு (ஆவணி 2007)
  • அலையும் மனமும் வதியும் புலமும் (2019)
  • நாளைய பெண்கள் சுயமாக வாழ (2019)
பதிப்பித்த நூல்கள்
  • தீட்சண்யம் (கவிதைத்தொகுப்பு, 2009)
  • தொப்புள் கொடி (நாவல், 2009)
  • மூனாவின் நெஞ்சில் நின்றவை (பத்தி, 2019)
  • மூனாவின் கிறுக்கல்கள் (2019)
  • மறந்து போக மறுக்கும் மனசு (பத்தி, 2019)
  • பெருநினைவின் சிறு துளிகள் (2020)

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.