being created

எஸ்.கே. சஞ்சிகா: Difference between revisions

From Tamil Wiki
Line 9: Line 9:
நெருஞ்சிமுள் என்னும் ஈழத்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெளிவு என்னும் மாதாந்த கிறிஸ்தவ நாளிதழுக்கு ஐந்து வருடங்களாக ஆசிரியராக இருந்துள்ளார். சுவாசம் மட்டுமே சுடுகலனாய் என்னும் கவிதை நூலை வெளியிட்டுள்ளார்.  

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
எஸ்.கே.சஞ்சிகா, தாரணி, துர்க்கா ஆகிய புனைபெயர்களில் எழுதினார். எஸ்.கே.சஞ்சிகா பன்னிரெண்டு வயதில் முதல் கவிதை எழுதினார். அரசியல் கட்டுரை, கவிதை,சிறுகதை, புத்தக ஆய்வுரை, அரசியல் விமர்சனம் ஆகியவற்றை எழுதினார். சுதந்திர ஊடகவியலாளர். நெம்பு, வெளிச்சம், சாளரம் சஞ்சிகைகளிலும் ஈழநாதம், சுதந்திரப் பறவை பெண்கள் பத்திரிகையிலும், சுடர்ஒளி, வீரகேசரி, தினக்குரல், எதிரொளி, புதுவிதி ஆகிய சஞ்சிகைகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.  

”விடுதலைக் கனல்” என்ற கவிதை நூலைத் தன் பதினைந்து வயதிலும் ”சுவாசம் மட்டுமே சுடுகலனாய்…” என்ற கவிதை நூலை போர் முடிந்த பின்பு 2018 இலும் வெளியிட்டார்.
 
== விருதுகள்==
== விருதுகள்==
* 1993ஆம் ஆண்டு அன்னை பூபதி பொது அறிவுத்தேர்வில் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றார்.  

Revision as of 16:38, 21 February 2024

எஸ்.கே. சஞ்சிகா (லதா) (பிறப்பு: ஏப்ரல் 24, 1979) ஈழத்துப் பெண் எழுத்தாளர். சுதந்திர ஊடகவியலாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

எஸ்.கே. சஞ்சிகா இலங்கை யாழ்ப்பாணத்தில் கந்தையா, நாகம்மா இணையருக்கு ஏப்ரல் 24, 1979-ல் பிறந்தார். கிளிநொச்சியை சேர்ந்தவர். லதா என்பது இயற்பெயர். 1986-ல் தாய் தந்தையரை இழந்தார். செஞ்சோலையில் வளர்ந்தவர். ஆரம்பக் கல்வியை கிளிநொச்சி சென்திரேசா மகளிர் கல்லூரியிலும், இடைநிலை, உயர்கல்வியை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரியிலும் கற்றார். யாழ் பல்கலைக்கழக கலைமாணி பட்டதாரி. தமிழீழ சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார்.

எஸ்.கே. சஞ்சிகாவிற்கு மூன்று பிள்ளைகள். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் தனது இரண்டரை வயது மகனை இழந்தார்.

சமூகப்பணி

வறுமைக்குட்பட்ட பிள்ளைகளை உள்வாங்கி அவர்களுக்கு உணவு, சீருடை ஆகியவற்றை கொடுத்து இலவசமாக முன்பள்ளி நடத்தி வருகிறார். இதன் நிர்வாகியாகி இவர் உள்ளார். அகில இலங்கை சமாதான நீதவானாகவும் இருக்கிறார்.

திரை வாழ்க்கை

நெருஞ்சிமுள் என்னும் ஈழத்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெளிவு என்னும் மாதாந்த கிறிஸ்தவ நாளிதழுக்கு ஐந்து வருடங்களாக ஆசிரியராக இருந்துள்ளார். சுவாசம் மட்டுமே சுடுகலனாய் என்னும் கவிதை நூலை வெளியிட்டுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

எஸ்.கே.சஞ்சிகா, தாரணி, துர்க்கா ஆகிய புனைபெயர்களில் எழுதினார். எஸ்.கே.சஞ்சிகா பன்னிரெண்டு வயதில் முதல் கவிதை எழுதினார். அரசியல் கட்டுரை, கவிதை,சிறுகதை, புத்தக ஆய்வுரை, அரசியல் விமர்சனம் ஆகியவற்றை எழுதினார். சுதந்திர ஊடகவியலாளர். நெம்பு, வெளிச்சம், சாளரம் சஞ்சிகைகளிலும் ஈழநாதம், சுதந்திரப் பறவை பெண்கள் பத்திரிகையிலும், சுடர்ஒளி, வீரகேசரி, தினக்குரல், எதிரொளி, புதுவிதி ஆகிய சஞ்சிகைகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

”விடுதலைக் கனல்” என்ற கவிதை நூலைத் தன் பதினைந்து வயதிலும் ”சுவாசம் மட்டுமே சுடுகலனாய்…” என்ற கவிதை நூலை போர் முடிந்த பின்பு 2018 இலும் வெளியிட்டார்.

விருதுகள்

  • 1993ஆம் ஆண்டு அன்னை பூபதி பொது அறிவுத்தேர்வில் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றார்.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • சுவாசம் மட்டுமே சுடுகலனாய்
  • விடுதலைக்கனல்

உசாத்துணை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.