under review

ஹசரத் ஞானியர் சாகிபு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
Line 1: Line 1:
ஹசரத் ஞானியர் சாகிபு (செய்கு முகயத்தீன் மலுக்கு முதலியார்) (1753 - 1795) தமிழ் இஸ்லாமியப்புலவர். சூஃபி ஞானி. சூஃபி ஞான இலக்கியங்கள் இயற்றினார்.

==வாழ்க்கைக்குறிப்பு ==
==வாழ்க்கைக்குறிப்பு ==
ஹசரத் ஞானியர் சாகிபுவின் இயற்பெயர் செய்கு முகயத்தீன் மலுக்கு முதலியார். இவர் 1753-இல் பிறந்தார். ஹஸரத் மன்சூர் ஹல்லாஜ் ரகுதுல்லாஹி அவர்களின் ஞான வழியில் குதுபுஸஸமான் செய்யிதுஸ் ஸாதாத்து மவுலானா செய்யது தமீம் இபுனு செய்யிது ஜமாலுல் மிஹபரிய்யி முரீதுவிடம் தீட்சை பெற்றார். மேலப்பாளையம், பழனி, கமுதி ஆகிய ஊர்களில் சீடர்களைக் கொண்டிருந்தார்.   
ஹசரத் ஞானியர் சாகிபுவின் இயற்பெயர் செய்கு முகயத்தீன் மலுக்கு முதலியார். இவர் 1753-ல் பிறந்தார். ஹஸரத் மன்சூர் ஹல்லாஜ் ரகுதுல்லாஹி அவர்களின் ஞான வழியில் குதுபுஸஸமான் செய்யிதுஸ் ஸாதாத்து மவுலானா செய்யது தமீம் இபுனு செய்யிது ஜமாலுல் மிஹபரிய்யி முரீதுவிடம் தீட்சை பெற்றார். மேலப்பாளையம், பழனி, கமுதி ஆகிய ஊர்களில் சீடர்களைக் கொண்டிருந்தார்.   
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
ஹசரத் ஞானியர் சாகிபு சூஃபி ஞான இலக்கியங்கள் பல இயற்றினார். இவரின் மெய் ஞான நூல்கள் அனைத்தும் மெய் ஞானத்திரட்டுப்பாடறறிரட்டு என்ற பெயரில் வெளியானது. பூரணப்பதிகத்தில் தான் கடவுளைக் கண்டதைப் பற்றிய பாடல் பாடினார்.
ஹசரத் ஞானியர் சாகிபு சூஃபி ஞான இலக்கியங்கள் பல இயற்றினார். இவரின் மெய் ஞான நூல்கள் அனைத்தும் மெய் ஞானத்திரட்டுப்பாடற்றிரட்டு என்ற பெயரில் வெளியானது. பூரணப்பதிகத்தில் தான் கடவுளைக் கண்டதைப் பற்றிய பாடல்களைப் பாடினார்.
== பாடல் நடை ==
== பாடல் நடை ==
* பூரணப்பதிகம்
* பூரணப்பதிகம்
Line 36: Line 36:
==உசாத்துணை==
==உசாத்துணை==
*[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0002305_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf தமிழில் இஸ்லாமிய மெய்ஞான இலக்கியங்கள்: தொகுப்பாசிரியர்-மணவை முஸ்தபா - மீரா ஃபவுண்டேஷன்]

{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 21:15, 20 February 2024

ஹசரத் ஞானியர் சாகிபு (செய்கு முகயத்தீன் மலுக்கு முதலியார்) (1753 - 1795) தமிழ் இஸ்லாமியப்புலவர். சூஃபி ஞானி. சூஃபி ஞான இலக்கியங்கள் இயற்றினார்.

வாழ்க்கைக்குறிப்பு

ஹசரத் ஞானியர் சாகிபுவின் இயற்பெயர் செய்கு முகயத்தீன் மலுக்கு முதலியார். இவர் 1753-ல் பிறந்தார். ஹஸரத் மன்சூர் ஹல்லாஜ் ரகுதுல்லாஹி அவர்களின் ஞான வழியில் குதுபுஸஸமான் செய்யிதுஸ் ஸாதாத்து மவுலானா செய்யது தமீம் இபுனு செய்யிது ஜமாலுல் மிஹபரிய்யி முரீதுவிடம் தீட்சை பெற்றார். மேலப்பாளையம், பழனி, கமுதி ஆகிய ஊர்களில் சீடர்களைக் கொண்டிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஹசரத் ஞானியர் சாகிபு சூஃபி ஞான இலக்கியங்கள் பல இயற்றினார். இவரின் மெய் ஞான நூல்கள் அனைத்தும் மெய் ஞானத்திரட்டுப்பாடற்றிரட்டு என்ற பெயரில் வெளியானது. பூரணப்பதிகத்தில் தான் கடவுளைக் கண்டதைப் பற்றிய பாடல்களைப் பாடினார்.

பாடல் நடை

  • பூரணப்பதிகம்

அணுவா கியது மணுவுக் கணுவா
யழிவற் றுரையா கியவே தமெலாம்
அணுவுக் கணுவா யணுயா வையுமாய்
அறிவாய் வெளியாய் வெளிமீ தொளிவாய்
அணுவுக் கணுவொளி வெளியா யறிவாய்
யகண்ட பரிபூ ரணசின் மயமாய்
அணுவுக் கணுவாயெளையாள் பரமே
அகண்ட பரிபூ ரணபூ ர்ணனே

மறைவு

ஹசரத் ஞானியர் சாகிபு 1795-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • ஞான தோத்திரம்
  • ஞான காரணம்
  • ஞான தேவாரம்
  • ஞான ஏகாதேசம்
  • ஞான ஆனந்தம்
  • ஞான அனுபவ விளக்கம்
  • ஞான அந்தாதி
  • ஞானக் கும்மி
  • ஞான வேதாட்சர வருக்கம்
  • ஞானத் திருப்புகழ்
  • ஞானத் திருநிதானம்
  • ஞானக் குருவடி விளக்கம்
  • ஹூயிலல்லா
  • ஞான அம்மானை
  • ஞான கீதாமிர்தம்

உசாத்துணை

✅Finalised Page