நித்ய கன்னி (நாவல்): Difference between revisions

From Tamil Wiki
Line 27: Line 27:


மாதவி- யயாதியின் மகள். நித்ய கன்னி.
மாதவி- யயாதியின் மகள். நித்ய கன்னி.
உஷை-மாதவியின் தோழி


விஸ்வாமித்ரர்- கௌசிக முனிவர் , ராஜரிஷி
விஸ்வாமித்ரர்- கௌசிக முனிவர் , ராஜரிஷி
Line 34: Line 36:
ஹர்யஸ்வன் - அயோத்தி மன்னன். பெண்ணாசை கொண்டவன்
ஹர்யஸ்வன் - அயோத்தி மன்னன். பெண்ணாசை கொண்டவன்


திலோதாசன் -
திலோதாசன் - கசி மன்னன்
 
உசீநரன் -போஜராஜன். பெண்மையை மதிப்பவன்

Revision as of 09:59, 17 March 2022

நன்றி-காலச்சுவடு பதிப்பகம்

நித்ய கன்னி எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் ஒரு பெண்ணை மட்டும் மையப்படுத்தி எழுதிய நாவல். மகாபாரதத்தின் ஒரு சிறு கிளைக்கதையாக வரும் யயாதியின் மகள் மாதவியின் கதை.

என்றும் நித்தியகன்னியாகவே இருக்கும் அவளின் வரமே அவள் வாழ்வில் குறுக்கிடும் ஆண்களால் சாபமாக மாறும்போது ஏற்படும் விளைவுகளே இப்புதினம். பெண்னின் உடலும் மனமும் தர்மத்தின் பெயரால் மிகக் கொடுமையாக சாத்வீக வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை புராண காலப் பின்னணியில் சித்தரிக்கும் நாவல்.

ஆசிரியர்

ஆசிரியர் எம்.வி.வெங்கட்ராம் (1920-2000)தமிழின் முக்கியமான நாவலாசிரியர் மற்றும் சிறுகதை ஆசிரியர். மணிக்கொடி இலக்கியக் குழுவின் உறுப்பினர். அவரது காதுகள் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் . இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்தும் ஹிந்தியிலிருந்தும் பலநூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

உருவாக்கம், பதிப்பு

1943ம் ஆண்டு நண்பரும் எழுத்தாளருமான் கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா) மகாபாரதக் கதைகளிலிருந்து 10 அழகிகளைத் தேர்ந்து அவர்களை சிறுகதைகளில் வார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, ஊக்கப்படுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்று எம்.வி.வெங்கட்ராம் 'திலோத்தமை' , 'புலோமை' என இரு கதைகள் எழுதி அவை 'கிராம ஊழியனில் வெளிவந்தன. மூன்றாவதாக எழுத முற்பட்ட நித்ய கன்னியின் கதை நாவலாக வளர்ந்தது. கு.ப.ரா அம்முயற்சியை நல்ல சோதனையாக வரவேற்றார். நாவல் முடிவதற்குள் கு.ப.ரா மறைந்துவிட்டார்.

மகாபாரதத்தில் ஓரு சிறு பொறியாக இருந்ததை ஊதி ஊதிப் பெருந்தீயாக மூட்டியிருக்கிறேன் என்று குறிப்பிடுகிறார்.

முதல் பதிப்பு ஜூலை 1975 ல் வெளிவந்தது.

கதைச்சுருக்கம்

யயாதி மன்னனின் மகள் மாதவி 'நித்ய கன்னி' ஒரு குழந்தையைப் பெற்றவுடன் பழையபடி கன்னியாக மாறி விடும் அதிசய வரம் பெற்றவள். விசவாமித்திரரின் மாணவனான அழகான இளைஞன் காவலன் தன் குருகுல வாசம் முடிந்ததும் குரு தட்சிணை தந்தே தீருவேன் என்று விஸ்வாமித்திரரை வற்புறுத்துகிறான். பொறுமையிழந்த முனிவர் உடல் வெள்ளையாகவும் காது மட்டும் கருப்பாக உள்ள 800 குதிரைகளைக் கேட்கிறார். திகைத்துப்போன காவலன் யயாதி மன்னனிடம் சென்று குதிரைகளை தானமாகக் கேட்கிறான். யயாதியிடம் அப்படிப்பட்ட குதிரைகள் இல்லை. இதற்கிடையில் காவலனும் மாதவியும் காதல் கொள்கிறார்கள்.

குதிரைகளுக்குப் பதிலாக யயாதி நித்ய கன்னியான தன் மகளைத் தானமாகக் கொடுக்கிறார். முனிவர் கேட்ட குதிரைகள் அயோத்தி மன்னன் ஹர்யஸ்வன், காசி மன்னன் திலோதாசன், போஜராஜன் உசசீநரன் ஒவ்வொருவரிடமும் இருநூறு குதிரைகள் உண்டு என்றும் அவர்களுக்கு ஒருவர் பின் ஒருவராக மாதவியை மணம் செய்துவைத்து குதிரைகளை வாங்கி வருமாறு பணிக்கிறார் முனிவர். .

காவலன் தன் காதலைப் புதைத்துவிட்டு, மாதவியை ஹர்யஸ்வனுக்கு மணம் முடிக்கிறான். ஹர்யஸ்வன் அவளை மோகத்தில் கொண்டாட நினைக்கிறான். மனம் ஒட்டாமல் அவனது குழந்தையப் பெற்றுவிட்டு மீண்டும் கன்னியாகும் மாதவியை திலோதாசனுக்கு மணம் முடிக்கிறான். வாரிசுக்காக அவளை மணந்த திலோதாசன் அவளை மனக்கறை படிந்தவள் என் இகழ்கிறான். அவனது குழந்தையையும் பெற்று அங்கேயே விட்டுவிட்டு கன்னியாகி உசீநரனை மணக்கிறாள். அவன் அவளை மதிக்கிறான், அவ்ளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக காவலனைக் குற்ற்ம் சாட்டுகிறான். உசீநரனின் குழந்தையைப் பெற்ற மாதவி மீண்டும் கன்னியாகிறாள். கன்னியாக மாறிவிட்டதால் எந்தக் குழந்தைக்கும் பாலூட்டவோ சீராட்டவோ முடிவதில்லை. குரு தட்சிணையை கொடுத்த பின் தங்கள் காதல் நிறைவேறும் என மாதவியும் காவலனும் காத்திருக்கிறார்கள்.

அறுநூறு குதிரைகள் கிடைத்தும் விஸ்வாமித்ரர் திருப்தியடையாமல் மீதி 200 குதிரைகளுக்காக மாதவியைத் திருமணம் செய்து, குழந்தை பெற்ற பின் விடுவிக்கிறார்.காவலன் நீ என் குரு பத்தினி யாக இருந்தாய், எனவே என் தாய் என்று அவ்ளை ஏற்க மறுக்கிறான். மனம் கலங்கியிருந்த மாதவி யயாதி மன்னனிடம் திரும்பிச் செல்கிறாள். யயாதி அவளுக்காக ஏற்பாடு செய்த சுயம்வரத்தையும், மீண்டும் தன்னை நாடி வந்த காவலனையும் புறக்கணித்து மாதவி பித்தியைப் போல் காட்டுக்குச் சென்று மறைகிறாள்.

கதாபாத்திரங்கள்

யயாதி- குரு வம்சத்து அரசன்

மாதவி- யயாதியின் மகள். நித்ய கன்னி.

உஷை-மாதவியின் தோழி

விஸ்வாமித்ரர்- கௌசிக முனிவர் , ராஜரிஷி

காவலன் - விஸ்வாமித்ரரின் மாணவன்

ஹர்யஸ்வன் - அயோத்தி மன்னன். பெண்ணாசை கொண்டவன்

திலோதாசன் - கசி மன்னன்

உசீநரன் -போஜராஜன். பெண்மையை மதிப்பவன்