being created

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்: Difference between revisions

From Tamil Wiki
(Page Created by ASN)
 
(Page Created; Para Added)
Line 6: Line 6:
ஆகஸ்ட் 18, 2007-ல், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ற பெயரில் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. ஜனவரி 21, 2009 அன்று, தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் உட்பிரிவு 10-ன் கீழ் இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த இந்நிறுவனம், ஏப்ரல் 2022 முதல், சென்னை பெரும்பாக்கத்தில் சொந்த வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

நோக்கம்
== நோக்கம் ==
பொயு 600-க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வை நிகழ்த்துவதையும், செம்மொழித் தமிழாய்வை வளர்ப்பதையும் முக்கிய நோக்கமாக் கொண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
 
தமிழ்நாடு முதலமைச்சர் இந்நிறுவனத்தின் தலைவர். பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி துணைத்தலைவர். பேராசிரியர் இரா. சந்திரசேகரன் இந்நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். ஆட்சிக்குழு, நிதிக்குழு மற்றும் கல்விக்குழுவால் நிறுவனத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 22:58, 11 January 2024

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) (2007), தமிழ் மொழி வளர்ச்சிக்கான மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் மொழிப்பிரிவின் கீழ் செயல்பட்டுவரும் தன்னாட்சி நிறுவனம். மத்திய அரசு, அக்டோபர் 12, 2004 அன்று தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவித்தது. இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், செம்மொழித் தமிழாய்வை வளர்க்கும் நோக்குடன் 2007 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை நிறுவியது.

தோற்றம்

இந்திய அரசு, அக்டோபர் 12, 2004 அன்று தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவித்தது. ஜூலை 2005-ல், தமிழ்மொழி மேம்பாட்டுக்கான மையத் திட்டம் (Central Plan Scheme for Classical Tamil) மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அத்திட்டம், மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திடம் (CIIL) ஒப்படைக்கப்பட்டது. 2006 மார்ச் முதல் மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்ற பெயரில் செயல்பட்டது.

ஆகஸ்ட் 18, 2007-ல், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ற பெயரில் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. ஜனவரி 21, 2009 அன்று, தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் உட்பிரிவு 10-ன் கீழ் இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த இந்நிறுவனம், ஏப்ரல் 2022 முதல், சென்னை பெரும்பாக்கத்தில் சொந்த வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

நோக்கம்

பொயு 600-க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வை நிகழ்த்துவதையும், செம்மொழித் தமிழாய்வை வளர்ப்பதையும் முக்கிய நோக்கமாக் கொண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்நிறுவனத்தின் தலைவர். பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி துணைத்தலைவர். பேராசிரியர் இரா. சந்திரசேகரன் இந்நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். ஆட்சிக்குழு, நிதிக்குழு மற்றும் கல்விக்குழுவால் நிறுவனத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.