under review

வே.தி. செல்லம்: Difference between revisions

From Tamil Wiki
(Page Created; Para Added, Images Added: Link Created: Proof Checked)
 
Line 19: Line 19:
1980-ல், 'தமிழ்நாட்டு வரலாற்றுச் செல்வம்' என்னும் உலகளாவிய கருத்தரங்கில் கலந்துகொண்டு ஓர் அமர்வுக்குத் தலைமையேற்றார். 'சங்ககால வரலாறு' என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார். ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். 2009-ல், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக 'Reconstructing Linguistic Pre-history of Tamil, Early history of Tamil and Tamilnadu' எனும் ஆய்வறிக்கையை அளித்தார்.

====== நூல் வெளியீடுகள் ======
====== நூல்கள் வெளியீடு ======
வே.தி. செல்லம், தனது ஆய்வு முடிவுகளை ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். வே.தி. செல்லம், தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 15-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். வே.தி. செல்லத்தின், ’தமிழக வரலாறும் பண்பாடும்’ நூல் தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக உள்ளது.

Revision as of 21:51, 10 January 2024

வே.தி. செல்லம்

வே.தி. செல்லம் (பிறப்பு: நவம்பர் 23, 1929) வரலாற்றாய்வாளர். எழுத்தாளர். பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழரின் தொன்மை வரலாறு பற்றிப் பல ஆய்வுகளை மேற்கொண்டார். அது குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்களை எழுதினார். வே.தி. செல்லம் எழுதிய, ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ நூல் குறிப்பித்தகுந்த ஒன்று.

பிறப்பு, கல்வி

வே.தி. செல்லம், நவம்பர் 23, 1929 அன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இளையான்விளையில், வேலாயுதப் பெருமாள் - பாக்கியமுத்து இணையருக்குப் பிறந்தார். இளையான்விளை மற்றும் கன்னியாகுமரியில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை வரலாற்றில் எம்.ஏ. பட்டம் பெற்றார். புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து பி.டி. பட்டம் பெற்றார்.

ஆய்வாளர் வே.தி. செல்லம்

தனி வாழ்க்கை

வே.தி. செல்லம், 1950-ல், தமிழக அரசின் வருவாய்த் துறையில் வருவாய் ஆய்வாளராக மூன்றாண்டுகள் பணியாற்றினார். 1959-ல், ஆரல்வாய்மொழி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1961 முதல் 1967 வரை சிறை உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1970 முதல் வேலூர் முத்துரங்க கல்லூரி, தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரி, திருவாரூர் கலைஞர் கலைக் கல்லூரி, திருச்சி பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி போன்ற கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1987-ல் பணி ஓய்வு பெற்றார். பணி நீட்டிப்புப் பெற்று மே, 1988 வரை பணியாற்றினார்.

வே.தி. செல்லம், மணமானவர். மனைவி: லட்சுமி தங்கம். இவர்களுக்கு மூன்று மகள்கள்; ஒரு மகன்.

வே.தி. செல்லம் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

ஆய்வுப் பணிகள்

வே.தி. செல்லம், வரலாற்றாய்வில் விருப்பம் கொண்டிருந்ந்தார். சங்ககாலம் தொடங்கி தமிழர்களின் வாழ்க்கை, பண்பாடு, கலாசாரம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். கல்வெட்டு, நாணயம், அகழ்வாராய்ச்சி, இலக்கியம், மொழி போன்ற ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்தார்.

1980-ல், 'தமிழ்நாட்டு வரலாற்றுச் செல்வம்' என்னும் உலகளாவிய கருத்தரங்கில் கலந்துகொண்டு ஓர் அமர்வுக்குத் தலைமையேற்றார். 'சங்ககால வரலாறு' என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார். ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். 2009-ல், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக 'Reconstructing Linguistic Pre-history of Tamil, Early history of Tamil and Tamilnadu' எனும் ஆய்வறிக்கையை அளித்தார்.

நூல்கள் வெளியீடு

வே.தி. செல்லம், தனது ஆய்வு முடிவுகளை ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். வே.தி. செல்லம், தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 15-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். வே.தி. செல்லத்தின், ’தமிழக வரலாறும் பண்பாடும்’ நூல் தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக உள்ளது.

அமைப்புப் பணிகள்

வே.தி. செல்லம், 1980-ல் கல்லூரித் தமிழாசிரியர்களையும் வரலாற்று ஆசிரியர்களையும் இணைத்து ஓர் ஆய்வு இயக்கத்தைத் தொடங்கி நடத்தினார். வே.தி. செல்லம், கல்லூரி ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காகப் போராடி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுதலை ஆனதும் மீண்டும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்காகப் போராடி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பொறுப்புகள்

  • வள்ளுவர் மன்ற நிறுவனர்
  • இந்திய வரலாற்றுப் பேரவை உறுப்பினர்
  • தமிழ்நாடு வரலாற்று ஆய்வுக் கழக நிறுவனர்
  • JAC (Joint Action Council of College Teachers) அமைப்பு உறுப்பினர்
  • தொல் தமிழர் பண்பாட்டு ஆய்வு மைய நிறுவனர்
  • தமிழ் தொல் மொழி மீட்பு இயக்க அமைப்பாளர்
  • திருக்குறள் உலகப்பொதுமறை இயக்க அமைப்பாளர்

விருதுகள்

  • சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பொது வாழ்வியல் மையம், தமிழ்நாடு அரசியல் அறிவியல் கழகம் ஆகியவை இணைந்து வழங்கிய 'வரலாற்று ஞாயிறு' விருது.
  • ’கிளைரோ இந்தியா' அமைப்பு அளித்த 'தலைசிறந்த வரலாற்று அறிஞன்' விருது.
  • அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கிய டி.லிட். பட்டம்.

மதிப்பீடு

வே.தி. செல்லம், தமிழ்நாட்டின் வரலாற்று ஆய்வறிஞர்களுள் ஒருவர். தமிழ் மொழி ஆய்விலும், வரலாற்று ஆய்விலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயல்பட்டார். தமிழரின் தொன்மை வரலாற்றை ஆங்கிலத்தில் நூல்களாக எழுதி பலரும் அறியச் செய்தார். தமிழர் நாகரிக வரலாற்றை அறிவியல் அணுகுமுறையில் ஆய்வு செய்த முன்னோடித் தமிழறிஞராக வே.தி. செல்லம் மதிப்பிடப்படுகிறார்.

உசாத்துணை

நூல்கள்

  • தமிழக வரலாறும் பண்பாடும்
  • தமிழர் பண்பாடும் பயன்பாடும்
  • தமிழக வரலாறு புதிய பார்வை
  • History and Culture of Tamilnadu
  • New Light on the Early History of Tamilnadu
  • Linguistic History of Ancient India
  • Reconstructing Linguistic Pre-history of Tamil/Early History of Tamils and Tamilnadu

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.